இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் என குறிப்பிடப்படுகிறார்.[1][2] இந்திய அரசியலமைப்பின் மூலம் இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் சம்பிரதாயம் போன்ற ஒன்றாகும். உண்மையில் பிரதம மந்திரி செயலாற்றும் அதிகாரங்களை நடைமுறையில் கொண்டிருப்பார்.[3]

இந்திய குடியரசுத் தலைவர் என்பவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை இருந்தபொழுதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தின் உறுப்புகளாகிய, மக்களவை மற்றும் மாநிலங்களவை, மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் பகுதி V கட்டுரை 56 இன் படி, குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருக்கக்கூடும். குடியரசுத் தலைவரின் அலுவல் காலத்தின் பொழுது பதவிநீக்கம் செய்யப்படும் நேரங்களில் அல்லது குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இல்லாத நேரங்களில் துணை ஜனாதிபதி குடியரசுத் தலைவர் பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறார். பாகம் V இன் 70 வது பிரிவின் படி, எதிர்பாராத தற்செயல் நிகழ்வின் பொழுது குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்படுவது அல்லது அவரின் பொறுப்பினை பறிக்க வேண்டிய காலங்களில் பாராளுமன்றம் கூடித் தீர்மானிக்கலாம்.Circle frame.svg

கட்சி வாரியாக குடியரசுத் தலைவரின் பிரதிநிதித்துவம்

  சுயேச்சை (29.6%)
  இந்திய தேசிய காங்கிரசு (41.2%)
  பாரதிய ஜனதா கட்சி (5.8%)
  ஜனதா கட்சி (5.8%)
  பொறுப்பு (17.6%)

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் பின்வருமாறு:

எண் பெயர் படம் பதவி ஏற்றது பதவிக் காலம் முடிவு துறை தேர்தல்
01 டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் Food Minister Rajendra Prasad during a radio broadcast in Dec 1947 cropped.jpg ஜனவரி 26, 1950 மே 13, 1962 விடுதலை வீரர் 1952, 1957
02 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் Radhakrishnan.jpg மே 13, 1962 மே 13, 1967 மெய்யியலாளர், கல்வியியலாளர் 1962
03 ஜாகீர் உசேன் DR. ZAKIR HUSAIN - PICTORIAL BIOGRAPHY 0005.jpg மே 13, 1967 மே 3, 1969 கல்வியியலாளர் 1967
* வி. வி. கிரி VV Giri 1974 stamp of India.jpg மே 3, 1969 சூலை 20, 1969 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி
* முகம்மது இதயத்துல்லா Mohammed Hidayatullah.jpg சூலை 20, 1969 ஆகத்து 24, 1969 உச்ச நீதிமன்ற நீதிபதி
04 வி. வி. கிரி VV Giri 1974 stamp of India.jpg ஆகத்து 24, 1969 ஆகத்து 24, 1974 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி 1969
05 பக்ருதின் அலி அகமது Fakhruddin Ali Ahmed 1977 stamp of India.jpg ஆகத்து 24, 1974 பெப்ரவரி 11, 1977 அரசியல்வாதி 1974
* பசப்பா தனப்பா ஜாட்டி Jatti.jpg பெப்ரவரி 11, 1977 ஜூலை 25, 1977 வழக்கறிஞர், அரசியல்வாதி
06 நீலம் சஞ்சீவி ரெட்டி NeelamSanjeevaReddy.jpg ஜூலை 25, 1977 சூலை 25, 1982 விவசாயி, அரசியல்வாதி 1977
07 ஜெயில் சிங் Giani Zail Singh 1995 stamp of India (cropped).png சூலை 25, 1982 சூலை 25, 1987 விடுதலை வீரர், அரசியல்வாதி 1982
08 ரா. வெங்கட்ராமன் R Venkataraman.jpg சூலை 25, 1987 சூலை 25, 1992 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி 1987
09 சங்கர் தயாள் சர்மா Shankar Dayal Sharma 36.jpg சூலை 25, 1992 சூலை 25, 1997 விடுதலை வீரர், அரசியல்வாதி 1992
10 கே. ஆர். நாராயணன் Kocheril Raman Narayanan.jpg ஜூலை 25, 1997 ஜூலை 25, 2002 எழுத்தாளர், வெளிநாட்டுத் தூதுவர், அரசியல்வாதி 1997
11 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் Abdulkalam04052007.jpg சூலை 25, 2002 சூலை 25, 2007 அறிவியலாளர், பொறியாளர் 2002
12 பிரதீபா பட்டீல் Pratibha Patil 2.jpg சூலை 25, 2007 சூலை 25, 2012 அரசியல்வாதி 2007
13 பிரணப் முக்கர்ஜி Pranab Mukherjee.jpg சூலை 25, 2012 சூலை 25, 2017 அரசியல்வாதி 2012
14 ராம் நாத் கோவிந்த் Ram Nath Kovind official portrait.jpg சூலை 25, 2017 பதவியில் அரசியல்வாதி 2017

இவற்றையும் காண்கதொகு

  1. "President Ram Nath Kovind is Indias first citizen. Your chances begin only at Number 27". Times of India. மூல முகவரியிலிருந்து 30 July 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 November 2017.
  2. "The Constitution of India". Ministry of Law and Justice of India. மூல முகவரியிலிருந்து 5 February 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 January 2009.
  3. "India gets first woman president since independence". BBC News. மூல முகவரியிலிருந்து 15 February 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 November 2008.