பசப்பா தனப்பா ஜாட்டி

பசப்பா தனப்பா ஜாட்டி  About this soundpronunciation  (10 செப்டம்பர் 1913 – 7 சூன் 2002) இந்தியாவின் ஐந்தாவது குடியரசு துணைத்தலைவராக  1974 முதல் 1979 வரை பதவியிலிருந்தார். இவர் இந்தியாவின் இடைக்கால குடியரசுத்தலைவராக 11 பெப்ரவரி 25 முதல் சூலை 1977 வரை செயல்பட்டார்.[1] மென்மையானப் போக்கை கடைப்பிடித்த ஜாட்டி கீழ்மட்ட அளவிலிருந்து, அதாவது  இவர் தொடக்கத்தில் ஒரு நகராட்சி உறுப்பினராக இருந்து ஐந்து தசாப்த காலமாக பலதரப்பட்ட அரசியல் வாழ்க்கையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய பதவியை அடைந்தார்.

பசப்பா தனப்பா ஜாட்டி
தற்காலிக இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
11 பிப்ரவரி 1977 - 25 ஜூலை 1977
பிரதமர் இந்திரா காந்தி
மொரார்ஜி தேசாய்
முன்னவர் பக்ருதின் அலி அகமது
பின்வந்தவர் நீலம் சஞ்சீவ ரெட்டி
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
31 ஆகஸ்ட் 1974 - 30 ஆகஸ்ட் 1979
குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது (1974-1977) / நீலம் சஞ்சீவ ரெட்டி (1977-1979)
பிரதமர் இந்திரா காந்தி
மொரார்ஜி தேசாய்
சரண் சிங்
முன்னவர் கோபால் சுவரூப் பதக்
பின்வந்தவர் முகம்மது இதயத்துல்லா
தனிநபர் தகவல்
பிறப்பு பசப்பா தனப்பா ஜாட்டி
(1913-09-10)10 செப்டம்பர் 1913
சவலகி, மும்பை மாகாணம்
(தற்போது கர்நாடகம், இந்தியா)
இறப்பு 7 சூன் 2002(2002-06-07) (அகவை 88)
பெங்களூர், கர்நாடகம், இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
படித்த கல்வி நிறுவனங்கள் இராசாராம் மகா வித்யாலயா, கோலாப்பூர்
சமயம் இந்து - லிங்காயத்து

மத செயல்பாடுகள் தொகு

இவர் தீவிர மத நம்பிக்கை கொண்டவர்,  ''பசவ சமிதி'' அமைப்பினை தொடங்கி அதன் நிறுவனர் தலைவராக இருந்தார். இது ஒரு மத அமைப்பு, 12-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த துறவி, தத்துவஞானி மற்றும் வீர சைவ  மதத்தினை சீர்திருத்திய  பசவஸ்வராவின் கருத்துகளை உபதேசம் செய்யும் மத அமைப்பாகும் .[2]  பசவ சமிதி 1964 இல் நிறுவப்பட்டது, இது வீர சைவம் மற்றும் சாரணாஸ் குறித்து பல்வேறு புத்தகங்களை வெளியிட்டது.[3] இவர் மேலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் அக்கறை கொண்டிருந்தார் .[4]

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசப்பா_தனப்பா_ஜாட்டி&oldid=3605094" இருந்து மீள்விக்கப்பட்டது