பசவர்
இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர் வரலாறு
பசவர் (Basava அல்லது Basavanna) (பொ.ஊ. 1131 – பொ.ஊ. 1196) கன்னட மாநிலத்தில் தோன்றியவர். சாளுக்கிய மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றியவர். இந்நெறி சிவனை மட்டுமே கடவுளெனக் கருதியது. சிவவழிபாட்டின் மூலம் வீடு பேற்றை அடையலாம் என்பது இவரது ஆழ்ந்த நம்பிக்கை. சாதிப்பாகுபாடு, சடங்கு, உருவ வழிபாடு இவற்றை களைவதில் பெரிதும் ஈடுபட்டார். தம்மைப் பின்பற்றுபவர்கள் புலால் உண்பதையும், கள் குடிப்பதையும் கைவிட
வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை விதித்தார். சமூக சீர்திருத்த வாதியாக விதவை மறுமணத்தை ஆதரித்தும், குழந்தை திருமணத்தை எதிர்த்தும் செயல்பட்டார். இவரைப் பின்பற்றுவோர் வீர சைவர்கள் (லிங்காயத்துகள்) என்றழைக்கப்படுகின்றனர்.
ஜகஜோதி பசவர் | |
---|---|
Personal | |
Born | பொ.ஊ. 1131[1] |
Died | பொ.ஊ. 1196[1] குடலசங்கமம், கருநாடகம், இந்தியா |
Religion | வீர சைவம் |
Sect | வீர சைவம் (சரணம்)[2][3] |
Known for | சமூக-மத சீர்திருத்தங்கள், அனுபவ மண்டபம், வசன சாகித்தியம், தென்னிந்தியாவில் பெண்கள் வலுவூட்டல் இயக்கம் |
Senior posting | |
Literary works | வசன சாகித்தியம் |
Occupation : chief minister of Bijapur province "ವಚನಗಾರರು" | அரசியல்வாதி, கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, தத்துவவாதி |
- ↑ 1.0 1.1 Carl Olson (2007), The Many Colors of Hinduism: A Thematic-historical Introduction, Rutgers University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0813540689, pages 239–240
- ↑ Basava Encyclopædia Britannica (2012), Quote: "Basava, (flourished 12th century, South India), Hindu religious reformer, teacher, theologian, and administrator of the royal treasury of the Kalachuri-dynasty king Bijjala I (reigned 1156–67)."
- ↑ R Blake Michael (1992), The Origins of Vīraśaiva Sects, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120807761, pages 7–9