பசவன பாகேவாடி

பசவன பாகேவாடி (Basavana Bagewadi) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பீசப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து நகரம் மற்றும் வட்டமாகும்.

புள்ளிவிவரங்கள்

தொகு
 
பகவான் பசவண்ணா

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] பசவன பாகேவாடி நகரத்தில் 28,582 மக்கள் தொகை இருந்தது. ஆண்களில் மக்கள் தொகையில் 51%, பெண்கள் 49% ஆகும். பசவன பாகேவாயின் சராசரி கல்வியறிவு விகிதம் 53%, இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு; 61% ஆண்களும், 39% பெண்களும் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர். மக்கள்தொகையில் 16% 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

நிலவியல்

தொகு

பசவன பாகேவாடி நகரம் பசவன பாகேவாடி தாலுகாவில் உள்ளது. பசவன பாகேவாடி நகரம் பீசப்பூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை எண் 13 உடன் பீசப்பூரிலிருந்து 44 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவிலும், மாநில தலைநகரான பெங்களூருவிலிருந்து 493 கிலோமீட்டர் (306 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

பசவன பாகேவாடி தாலுகாவில் 38 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன:[2]

அரசு

தொகு

பசவன பாகேவாடியின் நகர நகராட்சி அமைப்பு 1973 இல் அமைக்கப்பட்டது. இதில் 23 பகுதிகள் மற்றும் சம எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மற்றும் 5 பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பசவன பாகேவாடி நக்ராட்சி 10.30 கி.மீ சதுர பரப்பளவில் பரவியுள்ளது. குடகி சூப்பர் தேசிய வெப்ப மின் திட்டம் 18 கிலோமீட்டர் (11 மைல்), பசவன் பாகேவாடி சாலை ரயில் நிலையம் 19 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.[3]

1994 ஆம் ஆண்டில் இந்த நகரம் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரதிநிதியான பாட்டீல் பசனகொட சோமனகவுடாவைத் தேர்ந்தெடுத்தது.

2012 ஆம் ஆண்டில் இந்தியாவின் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கே. பெல்லுபி 623 வீடுகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.[4]

வரலாறு

தொகு
 
குடல சங்கமம்

லிங்காயத் பிரிவின் தத்துவஞானி பசவரின் பிறப்பிடம் என்று பசவன பாகேவாடி நகரம் கூறப்படுகிறது. இங்குள்ள பசவேஸ்வர் கோயில் 11 ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தின் காலத்தில் கட்டப்பட்டது .  

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. name="Panchayat-Dir-2011">"Reports of National Panchayat Directory: Village Panchayat Names of Basavana Bagewadi, Bijapur, Karnataka". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 13 November 2011.
  3. Basavana Bagewadi Karnataka India Retrieved 2018-07-16.
  4. Basavaraj F Kattimani (3 July 2012). "Basavana Bagewadi MLA S K Bellubbi handed over 623 newly built houses to flood affected families of Donur village in Basavana Bagewadi taluk on Tuesday". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN. https://timesofindia.indiatimes.com/Basavana-Bagewadi-MLA-S-K-Bellubbi-handed-over-623-newly-built-houses-to-flood-affected-families-of-Donur-village-in-Basavana-Bagewadi-taluk-on-Tuesday-/articleshow/14649919.cms. பார்த்த நாள்: 2018-07-16. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசவன_பாகேவாடி&oldid=3806405" இலிருந்து மீள்விக்கப்பட்டது