பிரதிபா பாட்டில்

(பிரதீபா பட்டீல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரதிபா தேவிசிங் பாட்டில் (Pratibha Devisingh Patil, மராத்தி: प्रतिभा पाटिल, பிறப்பு: டிசம்பர் 19, 1934; பரவலான அழைப்புப் பெயர்: பிரதிபா தாயி, प्रतिभा ताई) இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார் [1]. இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இவர் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஆவார். ஜூலை 19, 2007இல் நடந்த குடியாராசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பைரன் சிங்க் ஷெகாவத் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[2].

பிரதிபா பாட்டில்
Pratibha Patil
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
25 ஜூலை 2007 – 24 ஜூலை 2012
பிரதமர்மன்மோகன் சிங்
துணை அதிபர்அமீத் அன்சாரி
முன்னையவர்முனைவர் அப்துல் கலாம்
பின்னவர்பிரணப் முக்கர்ஜி
இராஜஸ்தான் ஆளுநர்
பதவியில்
8 நவம்பர் 2004 – 23 ஜூலை 2007
முன்னையவர்மதன்லால் குரானா
பின்னவர்ஏ. பி. கித்வாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 திசம்பர் 1934 (1934-12-19) (அகவை 89)
நாத்கோன், பிரித்தானிய இராச்சியம்
அரசியல் கட்சிஐ.மு.கூ-இ.தே.கா
துணைவர்தேவிசிங் ரான்சிங் செகாவத்
முன்னாள் கல்லூரிமூலஜி ஜெய்தா கல்லூரி, ஜால்கான்
அரசு சட்ட கல்லூரி, மும்பை

மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் பிரதிபா பாட்டில் பிறந்தார். அவரின் தந்தை பெயர் ஸ்ரீ நாராயண ராவ். ஜல்கானில் உள்ள எம். ஜே. கல்லூரியில் முதுகலைமாணி (எம். ஏ.) பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று வக்கீலாகவும் பயிற்சி பெற்றார்.

மகாராஷ்டிரா மாநில அவையில் உறுப்பினராக 1962 முதல் 1985 வரை இருந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1991 முதல் 1996 வரையில் இருந்தவர்.2004 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக பணியாற்றினார்.

சர்ச்சை

தொகு

இவர் ஜனாதிபதியாக தான் பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை ஓய்வு பெற்ற பின்னர் ‌‌எடுத்துச் சென்றது.[3] தன்னுடைய பதவிக்காலத்தில் ரூ.205 கோடி செலவில் 252 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டது. [4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Patil's victory is landmark event in Maharashtra's history: Deshmukh". UNI. http://www.newkerala.com/july.php?action=fullnews&id=48114. பார்த்த நாள்: 22 ஜூலை 2007. 
  2. அனிதா ஜோஷுவா. "High turnout in Presidential poll". த ஹிண்டு இம் மூலத்தில் இருந்து 2012-11-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110084219/http://www.hindu.com/2007/07/20/stories/2007072050450100.htm. பார்த்த நாள்: 20 ஜூலை 2007. 
  3. http://www.dinamalar.com/news_detail.asp?id=554651&Print=1
  4. http://m.timesofindia.com/india/Pratibha-Patil-took-up-to-11-relatives-on-18-trips-in-a-year/articleshow/12973357.cms

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிபா_பாட்டில்&oldid=3992121" இலிருந்து மீள்விக்கப்பட்டது