இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1982

இந்தியக் குடியரசின் எட்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1982 ல் நடைபெற்றது. ஜெயில் சிங் வெற்றிபெற்று குடியரசுத் தலைவரானார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1982

← 1977 ஜூலை 12, 1982 1987 →
  No image.svg No image.svg
வேட்பாளர் ஜெயில் சிங் எச். ஆர். கன்னா
கட்சி காங்கிரசு சுயேட்சை
சொந்த மாநிலம் பஞ்சாப் பஞ்சாப்

தேர்வு வாக்குகள்
7,54,113 2,82,685

முந்தைய குடியரசுத் தலைவர்

நீலம் சஞ்சீவ ரெட்டி
ஜனதா கட்சி

குடியரசுத் தலைவர் -தெரிவு

ஜெயில் சிங்
காங்கிரசு

பின்புலம்தொகு

ஜூலை 12, 1982ல் இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1980 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகியிருந்த இந்திரா காந்தியின் காங்கிரசு கட்சிக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் பெருவாரியான ஆதரவு இருந்ததால் காங்கிரசு வேட்பாளரே வெற்றி பெறுவார் எனற நிலை இருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியப் பிரிவினை வாதிகளின் ஆதரவு பெருகி வந்ததால், அதனை எதிர்கொள்ள சீக்கியர் ஒருவருக்கு நாட்டின் தலைமைப் பதவியினை வழங்கும் வகையில் இந்திரா காந்தி ஜெயில் சிங்கினை காங்கிரசு வேட்பாளராக அறிவித்தார். ஜனதா கட்சித் தலைவர் சரண் சிங் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எச். ஆர். கன்னா என்பரை நிறுத்தினார். தேர்தலில் ஜெயில் சிங் 72 % வாக்குகள் பெற்று எளிதில் வெற்றி பெற்றார்.

முடிவுகள்தொகு

ஆதாரம்:[1][2]

வேட்பாளர் பெற்ற வாக்குகள்
ஜெயில் சிங் 7,54,113
எச். ஆர். கன்னா 2,82,685
மொத்தம் 1,036,798

மேற்கோள்கள்தொகு