ஜனதா கட்சி

ஜனதா கட்சி (Janata Party -जनता पार्टी, People's Party மக்கள் கட்சி- ஆங்கிலம்) இந்திய அரசியல் கட்சியான இக்கட்சி இந்தியாவின் (1975-1977) காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல் படுத்திய நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களால் ஜனதா கட்சி துவங்கப்பட்டது.

ஜனதா கட்சியின் சின்னம்

தேர்தல் வரலாறுதொகு

  • 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதா கட்சி இந்தியா சுதந்திரத்திற்கு பின் 30 வருடங்களாக ஆண்டு வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை முதன் முதலில் தோற்கடித்து மத்திய காங்கிரசின் முதல் பிரதான எதிர்க்கட்சியான ஜனதா கட்சி மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை நிறுவி புதிய சாதனை படைத்திட்ட பெருமை கொண்ட கட்சியாகும்.
  • மேலும் இக்கட்சியில் பிரதமர் ஆக மொரார்ஜி தேசாய் (1977-1979) இருந்த போதிலும் அக்கட்சியில் அமைச்சர்களுக்குள் நடந்த பதவி பிரச்சனைகளாலும், அக்கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவளித்த கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளாலும் (1979) ஆம் ஆண்டு ஜனதா கட்சி நிறுவனர் ஜெயபிரகாஷ் நாராயணன் மரணத்திற்கு பிறகு கட்சியில் ஒற்றுமையில்லாமையால். (1977-1979) இரண்டே ஆண்டுகளில் ஜனதா கட்சி கவிழ்ந்தது.
  • பின்பு ஜனதா கட்சியில் இருந்து பிரிந்த மற்றோரு பிரிவினர்களான ராஜ் நாராயணன் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி என்று புதிய கட்சியை 1979 உருவாக்கி அதில் சரண் சிங் (1979-1980) பிரதமராக இருந்த போதிலும் அக்கட்சிக்கு கூட்டணியில் ஆதரவளித்து வந்த பல கட்சிகளுக்குள் ஏற்பட்ட சிக்கல்களால் ஒரே வருடத்தில் மதசார்பற்ற ஜனதா கட்சி ஆட்சி 1980ல் கவிழ்ந்ததால். மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலை சந்திதது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனதா_கட்சி&oldid=3095973" இருந்து மீள்விக்கப்பட்டது