1989 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியாவில் பொதுத் தேர்தல்
(இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியக் குடியரசின் ஒன்பதாம் நாடாளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஒன்பதாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தொற்று, எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஜனதா தளத்தின் வி. பி. சிங் பிரதமரானார்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 543 தொகுதிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 498,906,129 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 61.95% (▼ 2.06%) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகு- இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர்.
- முந்தைய தேர்தலில் அன்னை இந்திரா காந்தி அவர்களின் இறப்பினால் மக்களிடையே ஏற்பட்ட அனுதாபம் காரணமாக எளிதாக வென்ற ராஜீவ் காந்தி தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் நல்லாட்சி செய்து இருந்தாலும் சில திட்டங்களால் மக்களின் கடும் அதிருப்தியை சம்பாரித்திருந்தார்.
- அன்னை இந்திரா காந்தியின் மரணத்திற்க்கு காரணமாக இருந்த பஞ்சாப் தனிநாடு பிரிவினை போராட்டம் தொடர்ந்து நடந்துவந்தது. இலங்கை இனப்பிரச்சனையின் போது ஈழதமிழற்களுக்கு எதிராக இந்திய இராணுவத்தை கொண்டு பல இடையூருகள் நடத்தியதாலும்.
- அயோத்தி சிக்கல், போபர்ஸ் ஊழல் போன்ற பிரச்சனைகளால் ராஜீவ் காந்தியின் செயலற்ற ஆளுமையால் காங்கிரசின் செல்வாக்கு நாடு முழுவதும் சரிந்திருந்தது.
- போபர்ஸ் ஊழல் தொடர்பாக ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது காங்கிரசில் இருந்து பதவி விலகிய அமைச்சர் வி. பி. சிங் புதிதாக ஜன மோர்ச்சா என்றொரு கட்சியை உருவாக்கினார்.
- பின் அது முன்னாள் ஜனதா கட்சியின் வழித்தோன்றல் கட்சிகளுடன் இணைந்து ஜனதா தளம் என்றொரு வலுவான கட்சியாக உருவெடுத்தது.
- இக்கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பாரதிய ஜனதா கட்சி, தெலுங்கு தேசம், அகாலி தளம், திமுக, அசாம் கன பரிசத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளை ஓரணியில் திரட்டி தேசிய முன்னணி என்றொரு கூட்டணியை உருவாக்கியது.
- இக்கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஜனதா தளம் கட்சியில் வி. பி. சிங் இந்தியப் பிரதமரானார்.
முடிவுகள்
தொகுமொத்தம் 61.95 % வாக்குகள் பதிவாகின
கட்சி | % | இடங்கள் |
காங்கிரசு | 39.53 | 197 |
ஜனதா தளம் | 17.79 | 143 |
பாஜக | 11.36 | 85 |
சிபிஎம் | 6.55 | 33 |
சிபிஐ | 2.57 | 12 |
சுயேச்சை | 5.25 | 12 |
அதிமுக | 1.5 | 11 |
அகாலி தளம் (மான்) | 0.77 | 6 |
புரட்சிகர சோசலிசக் கட்சி | 0.62 | 4 |
ஃபார்வார்டு ப்ளாக் | 0.42 | 3 |
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | 0.2 | 3 |
பகுஜன் சமாஜ் கட்சி | 2.07 | 3 |
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | 0.34 | 3 |
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 0.32 | 2 |
தெலுங்கு தேசம் | 3.29 | 2 |
இந்திய காங்கிரசு (சோசலிசம்) | 0.33 | 1 |
மகாராஷ்டிரவாடி கோமாண்டக் கட்சி | 0.04 | 1 |
சிக்கிம் சங்க்ராம் பரிஷத் | 0.03 | 1 |
இந்து மகாசபா | 0.07 | 1 |
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன் | 0.21 | 1 |
கோர்க்கா தேசிய விடுதலை முன்னணி | 0.14 | 1 |
இந்திய மக்கள் முன்னணி | 0.25 | 1 |
கேரளா காங்கிரசு (மணி) | 0.12 | 1 |
மார்க்சிய ஒருகிணைப்புக் குழு | 0.08 | 1 |
சிவ சேனா | 0.11 | 1 |
மொத்தம் | - | 543 |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Indian general election, 9th Lok Sabha பரணிடப்பட்டது 2014-07-18 at the வந்தவழி இயந்திரம்