தேசிய முன்னணி (இந்தியா)

தேசிய முன்னணி (National Front) இந்திய அரசியல் கட்சிகளான வட இந்தியாவின் ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத், தமிழ்நாட்டின் திமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைப்பாக நடுவண் அரசில் (1989-1991) பங்குபெற்ற கூட்டணி ஆகும். இக்கூட்டணியின் தலைவராக என். டி. ராமராவ் பொறுப்பேற்றிருந்தார் ஆனால் அவர் பிரதமர் பதவி ஏற்க விரும்பவில்லை. கூட்டணியினரால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் வி. பி. சிங் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார். இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த கட்சிகளாக பாரதிய ஜனதா கட்சியும், இடது முன்னணி கட்சிகளும் இருந்தனர்.