ஜனதா தளம்
இந்திய அரசியல் கட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜனதா தளம் (Janata Dal) மக்கள் தளம் அல்லது ஜனதா தள் வி. பி. சிங் ஜனதா தளம் என்றும் அழைக்கப்பெற்றது. இது ஒரு இந்திய அரசியல் கட்சியாகும், இக்கட்சியானது (1988–1999) வரை செயல்பட்டுவந்தது. இக்கட்சி ஜனதா கட்சி மற்றும் பாரதிய லோக் தளம் என்ற இரு இந்திய அரசியல் கட்சிகளை இணைத்து வி. பி. சிங் அவர்களால் ஜன மோர்ஜ் என்று உருவாக்கம் பெற்றது. வி. பி. சிங் அப்போது காங்கிரஸ் கட்சியில் இராணுவத்துறை அமைச்சராக இருந்த போது பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழலை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறி பிரிந்து வந்த போது வி. பி. சிங் அவரது ஆரம்பகால ஜன மோர்ஜ் கட்சி ஜனதா தளம் கட்சியாக இணைந்து செயல்பட்டது.
தேர்தல் வரலாறு (தேசிய முன்னணி)
தொகு- 1989 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவரும் அன்றைய பிரதமருமான ராஜீவ் காந்தியின் தலைமையில் நடந்த போபர்ஸ் ஊழல் குற்றசாட்டினை எதிர்த்து தேசிய முன்னணி கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்ததால். ராஜீவ் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக தோல்வி அடைந்தது.
- பின்பு வி. பி. சிங் ஜனதா தளம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற போதிலும் அக்கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை.
- அதனால் இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஜனதா தளம் கட்சி தலைமையில் உருவாக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் வலதுசாரி கட்சியான பாரதிய ஜனதா கட்சியும், இடதுசாரி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு துருவ சித்தாந்தமுடைய இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் வெளியிலிருந்து ஆதரவு தந்த நிலையில் வி. பி. சிங் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
- இந்தியாவின் மத்திய அரசியல் வரலாற்றில் தேசிய முன்னணி கூட்டணியில் பல மாநில கட்சிகளின் ஏகோபித்த ஆதரவால் பிரதமர் வி. பி. சிங் தலைமையில் கூட்டாட்சி முறையாகவே அமைந்தது ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- பின்பு 1990 ஆகஸ்டு 7 ஆம் தேதி அன்று வி. பி. சிங் அவர்கள் ஆட்சி காலத்தில் அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரையின் போது தேசிய முன்னணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் அத்வானியை பரிந்துரைக்காததை காரணம் காட்டியும். அத்வானி அவர்கள் அப்போது வடநாட்டில் நடத்திய ராமர் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்ததால். பிரதமர் வி. பி. சிங் ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜகவில் அத்வானி விலக்கிக் கொண்டதால். தேசிய முன்னணியில் பிளவு ஏற்பட்டது.
- பின்பு பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வி. பி. சிங் தோற்று அவர் பிரதமர் பதவியையும் இழந்து அவரது ஜனதா தளம் ஆட்சி ஒரே ஆண்டில் (1989-1990) கவிழ்ந்ததையடுத்து.
- தேர்தல் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலமாக புதிய அரசான ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் தலைமையிலான சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற அவர் உருவாக்கிய புதிய கட்சிக்கு கூட்டணி ஆதரவு கொடுப்பதற்கு இந்தியாவில் இன்று வரை எதிர்கட்சியாக இருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பேராதரவுடன் சந்திரசேகர் பிரதமரானார்.
- ஜனதா தளம் கட்சி வி. பி. சிங் தலைமையில் இயங்கியது.
- ஆனால் சந்திரசேகர் சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆட்சியும் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஆதரவை ராஜீவ் காந்தி விலக்கி கொண்டதால் விரைவிலேயே சமாஜ்வாடி ஜனதா கட்சி (1990-1991) ஒன்றறை ஆண்டிலே கவிழ்ந்தது.
இரண்டாவது முறை ஆட்சியில் (ஐக்கிய முன்னணி)
தொகு- 1996 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று வாஜ்பாய் 13 நாட்களே பிரதமர் ஆக இருந்தாலும். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், இரண்டாவது இடத்தில் பெரும்பான்மையை பெற்று இருந்த ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க அக்கட்சி தலைமையில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டு அதில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் இணைந்து கூட்டணியில் இருந்து ஆதரவளித்தது காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்தது. ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான வி. பி. சிங் பெருந்தன்மையாக பிரதமர் பதவியை ஏற்க மறுத்து ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவ கவுடா பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
- பின்பு ஜனதா தளம் கட்சிக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவரான சீதாராம் கேசரிக்கும் பிரதமர் தேவ கவுடாக்கும் அதற்கு முந்தைய காலத்திலே பல பிரச்சனைகள் இருந்து வந்ததாலும் அதைவிட ஜனதா தளம் கட்சியின் உயரிய நோக்கமான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மேலான போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டின் விசாரனையை செயல்படுத்த போவதாகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் மற்றும் அவரது தலைமையில் நடந்தேறிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் செய்த ஊழல் முறைகேடு வழக்குகளின் விசாரணையை செயல்படுத்தியதாலும், ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் வி. பி. சிங் அவர்களால் முழுமை பெறாத மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு திட்டத்தை முழுமையாக அமலாக்கம் செய்யும் நல்ல திட்டங்களை கையில் எடுத்த போதிலும் பிரதமர் தேவ கவுடாவின் அச்செயல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமைந்ததால் சீதாராம் கேசரி தேவ கவுடா மேல் உள்ள அதிருப்தியால் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறினார்.
- பின்பு தேவ கவுடா பிரதமர் பதவியில் இருந்து ஒரே வருடத்தில் 1997 ஆம் ஆண்டு விலகிய பின் ஜனதா தளத்தின் மற்றொரு மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ. கே. குஜ்ரால் அவர்கள் பிரதமரானார். அவர் ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிஷன் வெளிவந்ததால் அதை ஐ. கே. குஜ்ரால் வெளியிட மறுத்ததால் ஐக்கிய முன்னணியில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் சீதாராம் கேசரி அந்த ஜெயின் கமிஷனை வெளியிடாவிட்டால் ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொள்ளும் என்றவுடன் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் வேறு வழியில்லாமல் ஜெயின் கமிஷனை வெளியிட்டார்.
- அப்போது ஜனதா தளம் கட்சிக்கு ஐக்கிய முன்னணியில் இருந்து ஆதரவளித்த தமிழ்நாட்டை சேர்ந்த திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்கள் தான் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு காரணமாக இருந்த விடுதலை புலிகளின் தற்கொலை படைக்கு உதவினார் என்று ஜெயின் கமிஷன் காரணம் காட்டியதால்.
- உடனே காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி திமுக கட்சி ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று பிரதமர் ஐ.கே.குஜ்ராலிடம் கூறியதால். அதனை எதிர்த்து தனது ஜனதா தளம் ஆட்சியில் இடம் பெற்று இருந்த திமுக கட்சியை வெளியேற்ற மனமில்லாமல். ஐ. கே. குஜ்ரால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் ஐக்கிய முன்னணிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளித்தை விலக்கிக் கொண்டதால். பெரும்பான்மையான ஆதரவு இல்லாததால் ஜனதா தளம் ஆட்சி இரண்டே ஆண்டுகளில் (1996-1998) கவிழ்ந்தது.
கட்சி முடக்கம்
தொகு- ஜனதா தளம் கட்சியின் பல மூத்த தலைவர்களால் கட்சியை பிளவுபடுத்தியதால் அவர்களது தலைமையில் தனிக்கட்சியாக செயல்பட்டது.
- பின்பு கட்சியின் தனித்தன்மை இழந்ததால் அக்கட்சியின் தலைவர் வி. பி. சிங் அவர்கள் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணியில் எந்த ஒரு கட்சியும் இணையாததாலும் மத்தியில் அப்போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் பலம் பொருந்திய கட்சியாகவே மக்கள் ஆதரிப்பதால் தனது ஜனதா தளம் கட்சியை 1999 ஆம் ஆண்டு முடக்கம் செய்துவிட்டார்.