முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஐக்கிய முன்னணி (இந்தியா)

ஐக்கிய முன்னணி (United Front) என்பது 1996-98 காலகட்டத்தில் இந்தியாவில் தேசிய அளவில் செயல்பட்ட ஒரு கூட்டணி. இதில் பதின்மூன்று கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியைச் சேர்ந்த தேவகவுடா மற்றும் ஐ. கே. குஜரால் ஆகியோர் இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு இக்கூட்டணியின் கூட்டுனராக (convener) இருந்தார்.

1996 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிட்டவில்லை என்பதால், தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பல கட்சிகளும் கூட்டணிகளும் இணைந்து ஐக்கிய முன்னணியை உருவாக்கின. இடது முன்னணியும் இதில் இடம் பெற்றிருந்தது. இந்திய மக்களவையில் 192 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இக்கூட்டணி அரசுக்கு இந்திய தேசிய காங்கிரசு வெளியிலிருந்து ஆதரவளித்தது. ஆனால் காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு வருடத்துக்குப் பின்னர் தேவ கவுடா பதவி விலகி குஜ்ரால் பிரதமரானார். ஆனால் ஒரு வருடத்துக்குள் காங்கிரசு தனது ஆதரவை முழுமையாக விலக்கிக் கொண்டதால் குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. அதோடு ஐக்கிய முன்னணியும் கலைந்தது.

இடம் பெற்றிருந்த கட்சிகள்தொகு