சோனியா காந்தி
சோனியா காந்தி (Sonia Gandhi பிறப்பு: 9 டிசம்பர் 1946) என்பவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார். இவர் முன்னாள் இந்தியா பிரதமரான ராஜீவ் காந்தி அவர்கள் விமான ஓட்டுநர் பயிற்சி காலத்திலேயே இட்டாலியில் காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு நேரு-காந்தி குடும்பத்தில் உறுப்பினரானார். இவர் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவி ஆவார். தனது கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலை நிகழ்ந்த 1991 ஆம் ஆண்டில் இருந்தே காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் அனைத்து அதிகாரங்களையும் தீர்மானிக்கும் தலைவியாகவும் அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து 1998–2017ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் அதிகார பூர்வமான தலைவியாக பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து 17 ஆண்டுகள் அப்பொறுப்பை வகித்து வந்தார். அதன் பிறகு 2014/2019 ஆகிய இரண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட அவர் மகன் ராகுல் காந்தியே கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள செய்தார். அதன் பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கொண்டு ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகல் ராஜினாமாவை ஏற்று கொண்டு மீண்டும் சோனியா காந்தியே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவியாக 2019 முதல் 2022 வரை தொடர்ந்தார். 2004 முதல் 2023 வரை காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவி பொறுப்பில் இருந்தார்.
சோனியா காந்தி | |
---|---|
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் | |
பதவியில் 16 மே 2004 – 18 ஜூலை 2023 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பதவி அகற்றப்பட்டது |
இந்திய தேசியக் காங்கிரசின் தலைவர் | |
பதவியில் 10 ஆகஸ்ட் 2019 - 19 அக்டோபர் 2022 | |
முன்னையவர் | ராகுல் காந்தி |
பின்னவர் | மல்லிகார்ஜுன் கார்கே |
பதவியில் 14 மார்ச் 1998 – 16 டிசம்பர் 2017 | |
முன்னையவர் | சீதாராம் கேசரி |
பின்னவர் | ராகுல் காந்தி |
தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் | |
பதவியில் 29 மார்ச் 2010 – 25 மே 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
பதவியில் 4 ஜூன் 2004 – 23 மார்ச் 2006 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் | |
பதவியில் 19 மார்ச் 1998 – 22 மே 2004 | |
முன்னையவர் | சரத் பவார் |
பின்னவர் | எல். கே. அத்வானி |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 மே 2004 | |
முன்னையவர் | சதீஷ் ஷர்மா |
தொகுதி | ரே பரேலி |
பதவியில் 10 அக்டோபர் 1999 – 17 மே 2004 | |
முன்னையவர் | சஞ்சய் சிங் |
பின்னவர் | ராகுல் காந்தி |
தொகுதி | அமேதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சோனியா மயினோ[1] 9 திசம்பர் 1946 லூசியானா, வெனிடோ, இத்தாலி |
குடியுரிமை | இத்தாலி (1946–1983) இந்தியா (1983–தற்போது வரை) |
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரஸ் (1991–தற்போது வரை) |
துணைவர்(கள்) | ராஜீவ் காந்தி (தி. 1968; இற. 1991) |
உறவுகள் | காண்க நேரு-காந்தி குடும்பம் |
பிள்ளைகள் | |
வாழிடம்(s) | 10 ஜன்பாத், புது தில்லி |
முன்னாள் கல்லூரி | பெல் கல்வி அறக்கட்டளை |
வேலை |
|
- இந்திய அரசியலில் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவரான இவர், 2004ல் போர்பஸ் [2] பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் 3வது இடத்திலும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் 6வது இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.[3] மேலும் டைம் பத்திரிகையும் இவரை 2007 [4] மேலும் அவர் 2008ம் ஆண்டு உலகில் உள்ள அதிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.[5]
- மேலும் சோனியா காந்தி தனது கணவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பிரதமருமான ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைமை அதிகாரங்களை தீர்மானிப்பவராகவும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பிரதமர்களான நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் மற்றும் தலைவர்களான சீதாராம் கேசரி, மல்லிகார்ஜுன கார்கே போன்றோர்களை சிறந்த முறையில் வழி நடத்தி செல்பவராக சோனியா காந்தி திகழ்ந்து வருகிறார்.
தொடக்கக்கால வாழ்க்கை
தொகுஇத்தாலி நாட்டின் வெனிடோ என்ற பிரதேசத்தில் 30 கிலோ மீட்டர் தொலைவில் விசென்ஸாவில், உள்ள லூசியானா எனும் ஒரு சிறு கிராமத்தில் ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ ஆகியோருக்கு மகளாக பிறந்தார். டுரின் என்ற நகருக்கு அருகில் உள்ள ஆர்பாஸனோவில் பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்ந்த அவர் தன் இளமைப் பருவத்தை ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயின்று கழித்தார்.[6] ஒரு கட்டிட ஒப்பந்தக்காரரான அவர் தந்தை, 1983ல் மரணமடைந்தார்.[6] அவரது அன்னையும் 2022ல் மறைந்தார். இரு சகோதரிகளும் இன்றும் ஆர்பாஸனோவில் வசித்து வருகின்றனர்.[7]
1964ல், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் அவர் ஆங்கிலம் கற்கச் சென்றார். அப்போது அவர் கிரேக்க உணவகத்தில் பகுதிநேரமாக பணியாற்றி வந்தார். அந்த உணவகத்தில் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்த ராஜீவ் காந்தியை 1965ல் சந்தித்தார்.[8] [9] பிறகு இருவரும் 1968ல் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர், அதைத்தொடர்ந்து சோனியா காந்தி தனது மாமியாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தியின் இல்லத்திற்குச் சென்று வாழத் தொடங்கினார்.
ராஜீவ்-சோனியா இணைக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு பிள்ளைகள் பிறந்தனர். செல்வாக்கு மிக்க நேரு குடும்பத்தைச் சார்ந்திருந்த போதிலும் ராஜீவ் ஒரு விமானியாக பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் சோனியா தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டார்.[10]
1980 சூன் 23ல் தனது இளைய சகோதரர் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தமையால் ராஜீவ் காந்தி 1982ல் அரசியலில் கால்பதிக்க நேர்ந்தது. எனினும் சோனியா காந்தி பொதுவாழ்வில் இருந்து விலகியே இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
தொகுபிரதமரின் மனைவி
தொகுபொதுவாழ்வில் சோனியா காந்தியின் ஈடுபாடு அவரது மாமியார் படுகொலைக்குப் பிறகும் மற்றும் அவரது கணவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுமே தொடங்கியது. பிரதமரின் மனைவியாக அவரது அதிகாரப் பூர்வ உபசரணியாக அவர் செயல்பட்டார் மற்றும் ஏராளமான தேசிய நிகழ்வுகளில் அவர் உடன் சென்றார். 1984ல், அமேதியில் நடந்த தேர்தலில் ராஜீவை எதிர்த்து அவரது தம்பியின் மனைவியான மேனகா காந்தி போட்டியிட்டார். அப்போது சோனியா தனது கணவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் களமிறங்கினார்.
காங்கிரசு கட்சியின் தலைவர்
தொகு- இவரது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு சோனியா காந்தி பிரதம மந்திரியாக மறுத்ததால், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், பிரதம மந்திரியாகவும் நரசிம்ம ராவை ஒரு மனதாகத் தேர்வு செய்தார்.
- எனினும் (1991-1996) பிரதமர் நரசிம்ம ராவ் காங்கிரஸ் ஆட்சியில் பல முன்னணித் மூத்த தலைவர்கள் மற்றும் மந்திரிகள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார பின்னடைவு, மக்களுக்கு எதிரான ஆட்சி இந்தியாவின் மத ஒற்றுமையாக விலங்கிய பாபர் மசூதி இடிப்பு ஆகிய சம்பவங்கள் காங்கிரஸ் ஆட்சி மீதும் கட்சி தலைமை மீதும் எதிர்ப்பலையானதால் காங்கிரஸ் கட்சி தலைமை ஊசலாட்டம் காணவே 1996 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது.
- மேலும் அத்தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியின் பல மாநில மூத்த தலைவர்களான மாதவ்ராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், நாராயண் தத் திவாரி, அர்ஜுன் சிங், மம்தா பானர்ஜி, ஜி. கே. மூப்பனார், ப. சிதம்பரம், வாழப்பாடி ராமமூர்த்தி, ஜெயந்தி நடராஜன் போன்ற மூத்தத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு காரணங்களால் விலகினர்.
- அப்போதைய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து வந்த முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் அவர் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டிருந்த ஊழல் வழக்கில் சிறை செல்ல நேரிட்டதால் அவருக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சீதாராம் கேசரியை சோனியா காந்தி நியமித்தார்.
- மேலும் காங்கிரஸ் கட்சிக்கு நேரடியான தலைமை பொறுப்பிற்கு சோனியா காந்தி வரவேண்டும் என்ற பல காங்கிரஸ் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று 1997ல் கல்கத்தா வருடாந்திரக் கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராகி அடுத்த ஆண்டு 1998ல் அதன் கட்சித் தலைவரானார்.[11]
- அடிப்படை உறுப்பினராக 62 நாட்கள் ஆகியதும் அவரையே கட்சியின் அவைத்தலைவராக்க வலியுறுத்தப்பட்டது. அவர் மக்களவைத் தேர்தல்களில் கர்நாடகாவில் பெல்லாரி மற்றும் 1999 நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் அமேதி ஆகிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- பெல்லாரியில் தொகுதியில் பாஜகவின் அனுபவமிக்கத் தலைவரான சுஷ்மா சுவராஜைத், தோற்கடித்தார்.
- 2004, 2009 ஆகிய இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் அவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
தொகு- 1999ல் பதின்மூன்றாவது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பாஜக ஏற்படுத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்த போது அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். அப்பொறுப்பில், அவர் தேஜகூ அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் 2003ல் கொண்டுவந்தார்.
- அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பத்து வருடங்கள் தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
2004 தேர்தல் முடிவுகள்
தொகு2004 பொதுத்தேர்தல்களில், சோனியா காந்தி நாடுதழுவிய பிரசாரம் செய்த போது ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) என்ற முழக்கத்தை பாஜக எழுப்பிய 'இந்தியா ஒளிர்கிறது' என்ற முழக்கத்திற்கு எதிரிடையாக எழுப்பினார்.
அப்பொழுது அவர் பாஜவிடம் "யாருக்காக இந்தியா ஒளிர்கின்றது?" என்று வினவினார். அத்தேர்தலில், அவர் உத்திரப்பிரதேசத்தில் ரே பரேலி தொகுதியில் இருந்து பெரும்வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேஜகூவின் தோல்வியைத் தொடர்ந்து, சோனியா காந்தி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மே 16ஆம் நாள், இடதுசாரிகளின் ஆதரவுடன் 15-கட்சிகளின் கூட்டணி அரசாங்கத்தை நடத்த அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து அவ்வரசாங்கம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரிடப்பட்டது.
தேர்தலுக்குப் பின்னர், தோற்ற தேஜகூ அவரை 'அந்நியப் பிறப்பு' என்று எதிர்த்து கிளர்ச்சி செய்தது. மேலும் மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், சோனியா காந்தி பிரதமரானால், தலையை மொட்டை அடித்துக் கொள்வதாக அச்சுறுத்தியோடு இல்லாமல் "தரையில் படுத்துறங்குவேன்" என்றும் கூறினார்.[12] அவர் பிரதம மந்திரி பதவிக்கு நிற்க பல சட்டப்பூர்வமான காரணங்கள் தடையாக இருந்ததாக தேஜகூ வாதிட்டது.[13] குறிப்பாக, 1955 இந்திய குடி உரிமைச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவை சுட்டிக்காட்டினர்,[14] இறுதியில் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்த இந்திய உச்ச நீதிமன்றம் சோனியா காந்தி பிரதமராக சட்டப்படி எந்தத் தடையுமில்லை என தீர்ப்பு வழங்கியது.
ஒரு சில நாட்களுக்குப் பின்னர், சோனியா காந்தி மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்தார். பெருவாரியான இந்திய மக்கள் அவரது நிலையை பழமையான இந்தியப் பாரம்பரியமான முடிதுறத்தலுக்கு ஒப்பிட்டனர், ஆனால் அதேசமயம் எதிர்க்கட்சியினர் அது ஒரு அரசியல் தந்திரம் என்று சாடினர்.[15]
தேசிய ஆலோசனைக் குழு வின் தலைவர்
தொகுமே 18ஆம் நாளன்று, அவர் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரான டாக்டர். மன்மோகன் சிங் பெயரை பிரதமர் பதவிக்காகப் பரிந்துரைத்தார்.
மார்ச் மாதம் 23 ஆம் நாள், சோனியா காந்தி தனது மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மற்றும் தேசிய ஆலோசனைக் குழவின் மன்றத்தலைவர் பதவிப்பொறுப்பிலிருந்தும் விலகினார். லாப-நோக்குடைய அந்த தேசிய ஆலோசனைக் குழுவின் தலைமைப்பதவியில் அவருக்கு விலக்கு அளிக்கப்படப்போகிறது என்ற யூகத்திற்காக அப்படி செய்தார்.
2006 மே மாதம் நிகழ்ந்த ரே பரேலி நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட சோனியா காந்தி பெரும் வாக்கு வித்தியாசத்தில் அதாவது 4,00,000 ஓட்டுக்களில் வெற்றிபெற்றார்.
தேசிய ஆலோசனைக் குழுவின் கூட்டத்தலைவர் மற்றும் ஐமுகூவின் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்த போது அவர் தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகிய இரண்டையும் கொண்டுவர வேண்டி முக்கியப் பங்காற்றினார்.[16][17]
2007 ஜூலை 15 ஆம் நாள் ஐ.நா.சபை கொணர்ந்த தீர்மானத்தின் படி அவ்வாண்டு அக்டோபர் 2 ஆம்நாள், அதாவது மகாத்மா காந்தியின் பிறந்தநாளை சர்வதேச அகிம்சை தினம் என்று அனுசரித்த வேளையில் அவர் ஐ.நா சபையில் உரையாற்றினார்.[18]
அவரது தலைமையின் கீழ், இந்தியாவில் மறுபடியும் காங்கிரஸ்-ஏற்படுத்திய-ஐமுகூ 2009 பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மைக்கு குறைவான இடங்களில் வெற்றி பெற்றது. 206 மக்களவை இடங்களில் வென்றதே, எண்ணிக்கை அளவில் 1991லிருந்து காங்கிரஸ் பெற்ற அதிகபட்ச இடங்கள் ஆகும். பிறகு மற்ற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றார். 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரசு கட்சி 44 இடங்களில் மட்டுமே வென்று வரலாறு காணாத படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் எதிர்க்கட்சி என்ற மதிப்பையும் பெற இயலாமல் போனது.
2019 மக்களவை தேர்தல்
தொகு17 ஆவது மக்கவளை தேர்தலில் ரே பரேலியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 534918 வாக்குகளும் அடுத்து வந்த பாசகவின் தினேசு பிரதாப் சிங் 367740 வாக்குகளும் பெற்றனர்.
திறனாய்வு
தொகுசோனியா காந்தியின் தலைமை குறித்து தொடக்கத்தில், காங்கிரசு கட்சிக்குள்ளேயே விமர்சனம் எழுந்தது. 1999ல் மே மாதம், மூன்று மூத்த கட்சித்தலைவர்களான (ஷரத் பவார், பூர்ணோ ஏ. சங்மா, மற்றும் தாரிக் அன்வர்) அவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்பதை சுட்டிக்காட்டி இந்தியப் பிரதமர் ஆகும் அவரது தகுதியை கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளிக்க வேண்டி, அவர் கட்சித்தலைவர் பதவியிலிருந்தே விலக முன்வந்தார் எனினும், அதன் விளைவாக மக்கள் ஆதரவு பெருகியது. அதைத்தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று கருத்து வேறுபாட்டாளர்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்க நேர்ந்தது.[19]
எளிமையான பழக்க வழக்கங்களில் முனைப்பு
தொகுசோனியா காந்தி தனது பிள்ளைகளையும் பிற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எளிமையான பழக்க வழக்கங்கள் மேற்கொள்ள வலியுறுத்தினார், அதற்கு முன்னுதாரணமாக அவர் 2009 செப்டம்பர் மாதம் 14 ஆம்நாள் புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு சிக்கன வகுப்பில் விமானப்பயணம் செய்தார். அதனால் அவர் ரூ 10,000 மிச்சப்படுத்தினார்.[20][21] எம்.பி.க்களின் ஊதியத்திலிருந்து (ஒரு எம்.பியின் மாத ஊதியம் ரூ 16000) 20 சதவிகிதத்தை இந்தியாவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கு நிதியுதவியாக வழங்க வலியுறுத்தினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Profile: Sonia Gandhi". BBC News. 16 May 2014. https://www.bbc.com/news/world-asia-india-26830531.
- ↑ சோனியா காந்தி- மூன்றாவது அதிக சக்திவாய்ந்த பெண்மணி பரணிடப்பட்டது 2012-01-13 at the வந்தவழி இயந்திரம். 15 மார்ச் 2007 இல் பெறப்பட்டது.
- ↑ சோனியா காந்தி போர்பஸ் பட்டியல்2007 பெறப்பட்டது 31 ஆகத்து 2007
- ↑ சோனியா காந்தி டைம் பத்திரிகையின் நூறு நபர்கள் 2007 பரணிடப்பட்டது 2013-08-03 at the வந்தவழி இயந்திரம். 20 மே 2007 இல் பெறப்பட்டது.
- ↑ சோனியா காந்தி டைம் பத்திரகையின் நூறு நபர்கள் 2008 பரணிடப்பட்டது 2013-08-22 at the வந்தவழி இயந்திரம். 20 மே 2007 இல் பெறப்பட்டது.
- ↑ 6.0 6.1 மைனோ நிலத்தில் இருந்து.. 15 மார்ச் 2007 இல் பெறப்பட்டது.
- ↑ இத்தாலி கட்டியம் கூறும் 'முதல் பெண் பிரதமர்.'. பெறப்பட்டது நாள் 18 ஜூலை 2007.
- ↑ "The Sonia Shock". Time. May 17, 2004. Archived from the original on 2004-05-20. பார்க்கப்பட்ட நாள் 2009-06-12.
{{cite web}}
:|first=
missing|last=
(help) - ↑ பணம் புகழ் பற்றிய பெயர் விளையாட்டு. பெறப்பட்டது நாள் 18 ஜூலை 2007.
- ↑ நிசப்தம் உடைத்து பெறப்பட்டது நாள் 20 ஜூலை 2007.
- ↑ "சோனியா காந்தி, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சித் தலைவர்". Archived from the original on 2010-06-13. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.
- ↑ மதரீதியான பார்வை: இந்தியா: முடிதுறக்கும் அரசியல் பாரம்பரியம் மற்றும் நவீனம்- பகுப்பாய்வு.
- ↑ Pioneer News Servic. "Whose inner voice?". CMYK Multimedia Pvt. Ltd. http://www.dailypioneer.com/indexn12.asp?main_variable=VOTE_2004&file_name=vote941.txt&counter_img=941. பார்த்த நாள்: 2007-07-20.
- ↑ Venkatesan, V (June 1999). "Citizen Sonia". Frontline 16 (12). http://www.hinduonnet.com/fline/fl1612/16120300.htm. பார்த்த நாள்: 2007-07-20.
- ↑ BBC NEWS (2004-05-19). "Indian press lauds Gandhi decision". BBC. பார்க்கப்பட்ட நாள் 2008-02-06.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ வேலைவாய்ப்பு மசோதா ஒரு புகழ்மிக்க முறை அல்ல: சோனியா. பெறப்பட்டது நாள் 13 ஜூலை 2007.
- ↑ ஆர்டிஐ வெற்றிக்குப்பின் அடுத்தது வேலை செய்யும் உரிமை. பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம். பெறப்பட்டது நாள் 13 ஜூலை 2007.
- ↑ "Sonia Gandhi raises disarmament issue at UN meet". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2007-10-02.
- ↑ சிஎன்என் - இந்தியாவில் காங்கிரஸ் கட்சியினர் சோனியா காந்திக்காக அணிவகுப்புகள் நடத்துதல்.- 17 மே 1999
- ↑ http://ibnlive.in.com/news/sonia-leads-by-example-to-fly-economy-to-mumbai/101327-37.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-22. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.
குறிப்புகள்
தொகு- எஸ்.ஆர்.ஈடி.யேல். பக்ஷி (1998)சோனியா காந்தி ,எஐசிசியின் தலைவர் சவுத் ஆசியா புக்ஸ் . ஐஎஸ்பிஎன் 81-7024-988-0
- ரூபா சட்டர்ஜி (1999)சோனியா காந்தி: நிழலில் ஒரு சீமாட்டி. படல. ஐஎஸ்பிஎன் 81-87277-02-5
- சி. ரூபா, ரூபா சட்டர்ஜி (2000)சோனியா மறைமதிப்பு சவுத் ஆசியா புக்ஸ் . ஐஎஸ்பிஎன்81-85870-24-1
- மோரோ,சாவி "எல் சரி ரோஜா" (எட. செயக்ஸ் பற்றல்,2008)"இல் சரி ரோச்சோ"(Ilசக்கியாத்தூர்,2009)
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- சோனியா காந்தி அகல்விரிவான வலைதளங்கள்
- இந்திய தேசிய காங்கிரஸ் பரணிடப்பட்டது 2009-08-31 at the வந்தவழி இயந்திரம்
- http://www.britannica.com/EBchecked/topic/225270/Sonia-Gandhi (english)
- http://archives.digitaltoday.in/indiatoday/20050117/cover3.html
- http://news.comune.lusiana.vi.it/documenti/PAT/tavole_pat_da_pubblicare/SchedeContrade/016_maini.PDF பரணிடப்பட்டது 2012-01-06 at the வந்தவழி இயந்திரம். The quarter (in Italian: "contràda") "Màini" at Lusiana (Vicenza – Veneto) where Sonia Maino Gandhi was born.
- http://digilander.libero.it/lusiana/lusiana.htm (see here an article in Italian – written in 2004 – from "The Newspaper of Vicenza" about Sonia Gandhi with a picture of her native house at Lusiana).
- http://www.comune-italia.it/comune-lusiana.html#territorio பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- http://www.ilgiornaledivicenza.it/stories/Home/92600_sonia_gandhidalla_piccola_lusiana_allindia_ecco_il_romanzo_di_una_donna_speciale/ பரணிடப்பட்டது 2013-12-08 at the வந்தவழி இயந்திரம் (italian)
- http://www.youreporter.it/video_Invito_a_Sonia_Gandhi பரணிடப்பட்டது 2016-08-15 at the வந்தவழி இயந்திரம் (Lusiana: parish church, Townhall square and landscape)
- http://www.radiopopolare.it/trasmissioni/onde-road/magnetofono/07112009-lindia-di-sonia-gandhi/stampa.html பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம். Pictures from the book-biography "The Red sari" by Javier Moro.
- மற்றவை
- சிறுவாழ்க்கை குறிப்பு பிபிசி நியூஸ் நாள் 23 மார்ச் 2006
- க்யுஆர்செட்.ஹம ரேடியோ கால் சின் தரவுதளம் - வியு௨எஸ்ஒஎன் பரணிடப்பட்டது 2011-04-18 at the வந்தவழி இயந்திரம்
- ராஜீவ் காந்தி மெமோரியல் சிநெட் கன்வென்ஷன்