லால் கிருஷ்ண அத்வானி

இந்திய அரசியல்வாதி

லால் கிருஷ்ண அத்வானி (பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி நிறுவன தலைவர்களில் ஒருவர் ஆவார்.அத்வானி ஆர்.எஸ்.எஸ் ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் 7வது துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.

லால் கிருஷ்ண அத்வானி
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
ஜூன் 2004 – டிசம்பர் 2009
முன்னையவர்சோனியா காந்தி
பின்னவர்சுஷ்மா சுவராஜ்
7வது இந்திய துணைப் பிரதமர்
பதவியில்
ஜூன் 29 2002 – மே 20 2004
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்தேவிலால்
பின்னவர்காலியாக உள்ளது
உள்துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 19 1998 – ஜூன் 28 2004
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்இந்திரஜித் குப்தா
பின்னவர்சிவ்ராஜ் பாட்டில்
இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 24 1977 – ஜூலை 15 1979
பிரதமர்மொரார்ஜி தேசாய்
முன்னையவர்வித்தியா சரண் சுக்லா
பின்னவர்வித்தியா சரண் சுக்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 8, 1927 (1927-11-08) (அகவை 96)
கராச்சி, பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கம்லா அத்வாணி (தி:1965-இ:2016)
பிள்ளைகள்பிரதிபா ஆட்வாணி, ஜெயந்த் ஆட்வாணி
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர்
இணையத்தளம்http://blog.lkadvani.in

இளமைக் காலம்

தொகு

சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து மும்பையில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.

அரசியல்

தொகு

அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்தார்.[1] கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார்.[2] இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார் மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.[3] ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.

இந்திரா காந்தி அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார்.[4]

1980 டிசம்பரில் பாரதீய ஜனதாக் கட்சியை அடல் பிகாரி வாஜ்பாயுடன் சேர்ந்து உருவாக்கினார்.பாஜக உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.

சுயசரிதை

தொகு

எனது நாடு எனது வாழ்க்கை (My country My life) எனும் பெயரில் 19 மார்ச் 2008 அன்று அப்துல்கலாம் இவரது சுயசரிதையை வெளியிட்டார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் 1040 பக்கங்களைக் கொண்டது இப்புத்தகம். புனைவல்லாத வகையில் மிக அதிகம் விற்பனையான புத்தகங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கால வரலாற்றையும், 1900 லிருந்து 2017 வரையிலான இந்திய வரலாற்றினையும் கொண்டது இப்புத்தகம்.

ரதயாத்திரைகள்

தொகு

மொத்தம் ஆறு ரத யாத்திரைகளை ஒருங்கிணைத்துள்ளார்.[5]

  1. ராமர் ரத யாத்திரை - குஜராத்தின் சோம்நாத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி வரையிலான ரத யாத்திரை.[6]
  2. ஜனதேஷ் யாத்திரை - சட்டத்திருத்தத்திற்கு எதிரான ரத யாத்திரை - மைசூரிலிருந்து போபால் வரையிலான ரத யாத்திரை.[7]
  3. ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்திரை - இந்தியாவின் 50 ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட ரத யாத்திரை.[8]
  4. பாரத உதய் ரத யாத்திரை - அமிர்தசரஸிலிருந்து கன்னியாகுமரிக்கும் குஜராத்திலிருந்து ஒரிஸாவிற்கும் நடத்தப்பட்ட யாத்திரை.[9]
  5. பாரத சுரக்‌ஷா யாத்திரை - குஜராத்திலிருந்து தில்லிக்கு நடத்தப்பட்ட யாத்திரை.[10]
  6. ஜனசேதனா யாத்திரை - பீஹாரில் நடத்தப்பட்ட யாத்திரை.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. 'My idea of happiness is good books', interview in EYE, the Indian Express, 19–25 September 2010.
  2. "India 'incomplete' without Sindh: Advani". 15 January 2017. Archived from the original on 15 January 2017. பார்க்கப்பட்ட நாள் 15 January 2017.
  3. Jaffrelot, Christophe (1996). The Hindu Nationalist Movement and Indian Politics. C. Hurst & Co. Publishers. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1850653011.
  4. Basu, Amrita (2015-06-30). Violent Conjunctures in Democratic India. Cambridge University Press. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-08963-1.
  5. "The Eternal Charioteer | Prarthna Gahilote". Outlookindia.com. Archived from the original on 18 May 2012. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  6. "LK Advani – Portal – Ram Rath Yatra". Lkadvani.in. 25 September 1990. Archived from the original on 22 August 2012. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  7. "LK Advani – Portal – Janadesh Yatra". Lkadvani.in. 11 September 1993. Archived from the original on 27 June 2012. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  8. "Swarna Jayanti Rath Yatra : Shri L K Advani". Bjp.org. Archived from the original on 13 June 2012. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  9. Press Trust India (10 March 2004). "Advani kickstarts Bharat Uday Yatra". Express India. Archived from the original on 21 January 2012. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  10. "Advani to begin from Gujarat; Rajnath from Orissa – Rediff.com India News". Rediff.com. 17 March 2006. Archived from the original on 24 May 2013. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  11. "About Jan Chetna Yatra |". Janchetnayatra.com. 20 November 2011. Archived from the original on 26 June 2012. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்_கிருஷ்ண_அத்வானி&oldid=3992479" இலிருந்து மீள்விக்கப்பட்டது