கராச்சி

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுள் ஒன்று. சிந்த் மாகாணத்தின் தலைநகரம்.

கராச்சி (உருது: کراچی‎; சிந்தி மொழி: ڪراچي‎; ALA-LC: Karācī, IPA: [kəˈrɑːˌtʃi]  ( listen)) பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமும் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும்,[13] சிந்த் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். மேலும் இது உலகில் இரண்டாவது மிகுதியான மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. உலக அளவில் நகர மக்கள்தொகை தரவரிசையில், இது உலகில் 12 வது மிகப்பெரிய நகரமாகும் . இது ஒரு உலகளாவிய நகரமாக (குலோபல் சிட்டி) கருதப்படுகிறது.[14][15] 1958க்கு முன்பு வரை இதுவே பாகிஸ்தானின் தலைநகராக இருந்தது. பாகிஸ்தானின் முதன்மையான தொழில் நகராகவும், வணிக தலைநகரமாகவும் உள்ளது.[16] கராச்சி பாக்கிஸ்தானின் பெரிய பல்வள இயைபு நகரமும் ஆகும்.[17] அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள கராச்சி ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது, பாகிஸ்தானின் இரண்டு மிகப்பெரிய துறைமுகங்களான, கராச்சி துறைமுகமும், பிங் காசிம் துறைமுகத்தையும் இந்நகரம் கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தானின் பரபரப்பான வானூர்தி நிலையமாகுமான ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கே உள்ளது.

கராச்சி
کراچی
பெருநகரம்
மேலே இருந்து கடிகார வரிசையில்: முகமது அலி ஜின்னாவின் துருக்கர் கல்லறை , ஃப்ரீ ஹால், சுண்டிகர் சாலை, பிரித்தானிய காலனிய கால கராச்சி கோட்டைக் கருவூலக் கட்டடம், மொஹட்டா அரண்மனை, கராச்சி கோட்டை
அடைபெயர்(கள்): கியாத் நகரம்,[1] ஆசியாவின் பாரிசு,[2][3] விளக்குகள் நகரம்,[2] நகரங்களின் மணமகள்[4] (عروس البلاد[5])
கராச்சி is located in Sindh
கராச்சி
கராச்சி
Location in Pakistan
கராச்சி is located in பாக்கித்தான்
கராச்சி
கராச்சி
கராச்சி (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 24°51′36″N 67°0′36″E / 24.86000°N 67.01000°E / 24.86000; 67.01000
நாடுபாக்கித்தான் பாக்கித்தான்
மாகாணம்சிந்து
பெருநகர மாநகராட்சி2011
மாநகர சபைநகர மாளிகை, குல்ஷன் ஊர்
மாவட்டங்கள்[9]
அரசு
 • வகைபெருநகரம்
 • கராச்சி மேயர்வசிம் அக்தர்
 • கராச்சி துணை மேயர்டாக்டர் அர்ஷத் ஏ. வோரா
பரப்பளவு
 • மொத்தம்3,780 km2 (1,460 sq mi)
ஏற்றம்
8 m (26 ft)
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்2,75,06,000[6][7][8]
 • தரவரிசை1 (பாக்கித்தான்)
இனம்கராச்சியர்
நேர வலயம்ஒசநேஒ.ச.நே + 05:00 (PKT)
அஞ்சல் குறியீட்டு எண்
74XXX – 75XXX
தொலைபேசி குறியீட்டு எண்+9221-XXXX XXXX
HDI0.69 [12]
ம.வ.மே. வகைநடுத்தரம்
இணையதளம்www.kmc.gos.pk

கராச்சியின் சுற்றுப்புறங்களில் மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வந்தாலும்,[18] இது கோலாச்சி [19] என்ற கிராமமாக 1729 ஆம் ஆண்டில் இந்த நகரம் அமைக்கப்பட்டது.[20] இந்த குடியிருப்பானது, பிரித்தானிய காலனித்துவவாதிகளின் வருகையைக்குப் பின்னர் பெருமளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆனது. பிரித்தானியர் இந்த நகரத்தை ஒரு முக்கிய துறைமுகமாக மாற்றியமைப்பதற்கான முக்கிய பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல், அவர்களின் விரிவான தொடர்வண்டி வலைப்பின்னலுடன் இணைத்தனர்.[19] இந்தியப் பிரிவினை காலகட்டத்தில், சிந்து மாகாணத்தில் 400,000 மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நகரமாக ஆனது.[17] பாக்கிஸ்தானின் சுதந்திரத்தைத் தொடர்ந்த்து உடனடியாக, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம் குடியேறிகளின் வருகையுடன் நகரின் மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்தது,[21] 1950 கள் மற்றும் 1960 களில் இந்திய முஸ்லீம் குடியேறிகளின் முதன்மை இலக்காக கராச்சி இருந்தது.[22]  பாக்கித்தானின் விடுதலைக்குப் பின் இந்த நகரம் விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்டது, பாக்கிஸ்தான் மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து இடம்பெயர்பவர்களை இது பெருமளவில் ஈர்த்தது.[23]

கராச்சி பாகிஸ்தானின் மிகவும் மதச்சார்பற்ற மற்றும் சமூக தாராளவாத நகரங்களில் ஒன்றாகும்.[24][25][26]   இது பாக்கிஸ்தானில் மொழியியலில், இனவியலில், சமயவியலில் என பல்வேறு வகைகளில் மிகவும் மாறுபட்ட நகரமாகும்.[17] 15 மற்றும் 23.5 மில்லியன் மக்களுக்கு இடைப்பட்ட மக்கள் தொகை கொண்ட பல்வள இயைபு பிராந்தியத்தில்,[8][27]   முஸ்லீம் உலகில் கராச்சி மிகப்பெரிய நகரமாகக் கருதப்படுகிறது,[28] உலகின் 7 வது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற ஒருங்கிணைப்பாகவும் இது உள்ளது.[29][30] கராச்சி உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும்.[31]   மேலும் பாக்கிஸ்தானின் ஒவ்வொரு இன குழுவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்கள் கிட்டத்தட்ட உள்ளன.   கராச்சியில் 2 மில்லியனுக்கும் அதிகமான வங்கதேச குடியேறியவர்கள், 1 மில்லியன் ஆப்கானிய அகதிகள், மியான்மர் நாட்டிலிருந்து வந்த 400,000 ரோகிஞ்சா மக்கள் உள்ளனர்.[32][33][34]

பாகிஸ்தான் தோன்ற காரணமாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முகமது அலி ஜின்னா, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் இங்கு பிறந்தவர்கள்.

கராச்சி இப்போது பாகிஸ்தானின் முதன்மை தொழில் மற்றும் பொருளாதார மையமாக உள்ளது. 2014 ஆம் ஆண்டிற்குள், இதன் முறையான பொருளாதாரம் 113 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாக மதிப்பிடப்படுகிறது.[35] கராச்சி பாகிஸ்தானின் வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் அளிக்கிறது,[36] மேலும் பாக்கிஸ்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% பங்களிக்கிறது.[37][38] பாக்கிஸ்தானிய தொழில்துறை உற்பத்தியில் கராச்சியில் இருந்து ஏறத்தாழ 30% நடக்கிறது,[39] கராச்சியின் துறைமுகங்கள் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் 95% ஐ கையள்கின்றன.[40] பாகிஸ்தானில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களில் 90% கராச்சியை தலைமையிடமாக கொண்டு உள்ளன.[40] கராச்சி தொழிலாளர்களில் 70% வரை அமைப்பு சாரா தொழிலாளர்கள்,[41]   இது பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.[42]

விபத்து

தொகு

செப்படம்பர் 12, 2012 அன்று கராச்சி நகரின் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குறைந்தது 250 பேர் உயிரிழந்தனர்.[43] இது மேலும் அதிகரிக்கும் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.[44]

காலநிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், Karachi
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.8
(91)
36.1
(97)
41.5
(106.7)
44.4
(111.9)
47.8
(118)
47.0
(116.6)
42.2
(108)
41.7
(107.1)
42.8
(109)
43.3
(109.9)
38.5
(101.3)
34.5
(94.1)
47.8
(118)
உயர் சராசரி °C (°F) 25.6
(78.1)
26.4
(79.5)
28.8
(83.8)
30.6
(87.1)
32.3
(90.1)
33.3
(91.9)
32.2
(90)
30.8
(87.4)
30.7
(87.3)
31.6
(88.9)
30.5
(86.9)
27.3
(81.1)
30.0
(86)
தாழ் சராசரி °C (°F) 14.1
(57.4)
15.9
(60.6)
20.3
(68.5)
23.7
(74.7)
26.1
(79)
27.9
(82.2)
27.4
(81.3)
26.2
(79.2)
25.3
(77.5)
23.5
(74.3)
20.0
(68)
15.7
(60.3)
22.2
(72)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.0
(32)
3.3
(37.9)
7.0
(44.6)
12.2
(54)
17.7
(63.9)
22.1
(71.8)
22.2
(72)
20.0
(68)
18.0
(64.4)
10.0
(50)
6.1
(43)
1.3
(34.3)
0.0
(32)
மழைப்பொழிவுmm (inches) 3.6
(0.142)
6.4
(0.252)
8.3
(0.327)
4.9
(0.193)
0
(0)
3.9
(0.154)
66.4
(2.614)
44.8
(1.764)
22.8
(0.898)
0.3
(0.012)
1.7
(0.067)
4.5
(0.177)
167.6
(6.598)
Source #1: HKO (normals, 1962–1987)[45]
Source #2: PakMet (extremes, 1931–2008)[46]

மேற்கோள்கள்

தொகு
 1. Sarina Singh 2008, ப. 164.
 2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; nadeemf.paracha என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. Ghosh, Palash (Aug 22, 2013). "Karachi, Pakistan: Troubled, Violent Metropolis Was Once Called ‘Paris Of The East’". International Business Times. http://www.ibtimes.com/karachi-pakistan-troubled-violent-metropolis-was-once-called-paris-east-1396265. பார்த்த நாள்: 8 January 2017. 
 4. Hunt Janin & Scott A. Mandia 2012, ப. 98.
 5. Sind Muslim College 1965.
 6. (Note: no census conducted in Pakistan after 1998)
 7. Brinkhoff, Thomas. "The Principal Agglomerations of the World". citypopulation.de. City Population. பார்க்கப்பட்ட நாள் 8 April 2015.
 8. 8.0 8.1 "Population explosion: Put an embargo on industrialisation in Karachi". tribune.com.pk. 6 October 2013. http://tribune.com.pk/story/614409/population-explosion-put-an-embargo-on-industrialisation-in-karachi/. பார்த்த நாள்: 17 January 2014. 
 9. "District in Karachi". Karachi Metropolitan Corporation. பார்க்கப்பட்ட நாள் 6 May 2014.
 10. "Government". Karachi Metropolitan Corporation. பார்க்கப்பட்ட நாள் 6 May 2014.
 11. "Geography & Demography". City District Government of Karachi. பார்க்கப்பட்ட நாள் 22 August 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
 12. "SOCIAL DEVELOPMENT IN PAKISTAN ANNUAL REVIEW 2014-15" (PDF). SOCIAL POLICY AND DEVELOPMENT CENTRE. 2016. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 13. "Population size and growth of major cities". Pakistan Bureau of Statistics. 1998. Archived from the original (PDF) on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
 14. "GaWC – The World According to GaWC 2008". Lboro.ac.uk. 3 June 2009. பார்க்கப்பட்ட நாள் 14 September 2009.
 15. "GAWC World Cities Ranking List". Diserio.com. Archived from the original on 22 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 14 September 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 16. "PIGJE". pigje.com.pk. Archived from the original on 30 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 17. 17.0 17.1 17.2 Inskeep, Steve (2012). Instant City: Life and Death in Karachi. Penguin Publishing Group. p. 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143122166. Archived from the original on 30 October 2016. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.
 18. Mahim, Maher (3 November 2013). "Karachi's Stone Age proves history didn’t start with the Muslims". Express Tribune. http://tribune.com.pk/story/626458/the-flintstones-karachis-stone-age-proves-history-didnt-start-with-the-muslims/. பார்த்த நாள்: 16 October 2016. 
 19. 19.0 19.1 Gayer, Laurent (2014). Karachi: Ordered Disorder and the Struggle for City. HarperCollins Publishers. p. 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351160861. Archived from the original on 30 October 2016. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.
 20. Askari, Sabiah (2015). Studies on Karachi: Papers Presented at the Karachi Conference 2013. Cambridge Scholars Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1443877442. Archived from the original on 30 October 2016. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.
 21. "Port Qasim | About Karachi". Port Qasim Authority. பார்க்கப்பட்ட நாள் 10 February 2014.
 22. KHALIDI, OMAR (1998-01-01). "FROM TORRENT TO TRICKLE: INDIAN MUSLIM MIGRATION TO PAKISTAN, 1947—97". Islamic Studies 37 (3): 339–352. http://www.jstor.org/stable/20837002. 
 23. Brunn, Stanley (2008). Cities of the World: World Regional Urban Development. Rowman & Littlefield. p. 647. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780742555976. Archived from the original on 30 October 2016. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.
 24. Nadeem F. Paracha. "Visual Karachi: From Paris of Asia, to City of Lights, to Hell on Earth". dawn.com. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
 25. Abbas, Qaswar. "Karachi: World's most dangerous city". India Today. http://indiatoday.intoday.in/story/worlds-most-dangerous-country/1/149333.html. பார்த்த நாள்: 24 October 2016. "Karachi, Pakistan's largest city, with a population of 1.9 crore (Mumbai has 2 crore people), is the country's most liberal and secular metropolis." 
 26. "Pakistani journalists face threats from Islamists". Deutsche Welle. http://www.dw.com/en/pakistani-journalists-face-threats-from-islamists/a-16221061. பார்த்த நாள்: 24 October 2016. "This all happened in the heart of Karachi – a relatively liberal city with a population of more than 15 million" 
 27. Ponsford, Matthew (17 November 2016). "Stop the sprawl, teach slum dwellers to build skywards – leading Pakistani architect". Euronews இம் மூலத்தில் இருந்து 20 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220091117/http://www.euronews.com/2016/11/17/stop-the-sprawl-teach-slum-dwellers-to-build-skywards-leading-pakistani-architect. பார்த்த நாள்: 6 December 2016. 
 28. "World Urbanization Prospects, 2009 revision (online data)". Archived from the original on 31 October 2013. பார்க்கப்பட்ட நாள் 11 May 2011.
 29. "Populations of 150 Largest Cities in the World". worldatlas. 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
 30. "Demographia: World Urban Areas: 12th Annual Edition: 2016:04" (PDF). demographia.com. Archived from the original (PDF) on 13 October 2016. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.
 31. Kotkin, Joel. "The World's Fastest-Growing Megacities". forbes.com.
 32. "Falling back". Daily Times. Archived from the original on 5 August 2011. பார்க்கப்பட்ட நாள் 24 August 2010.
 33. "Chronology for Biharis in Bangladesh". Center for International Development and Conflict Management, University of Maryland. 10 January 2007. Archived from the original on 2 June 2010. பார்க்கப்பட்ட நாள் 6 May 2010.
 34. Craig, Time. "Pakistan cracks down on Afghan immigrants, fearing an influx as U.S. leaves Afghanistan". Washington Post. https://www.washingtonpost.com/world/pakistan-cracks-down-on-afghan-immigrants-fearing-an-influx-as-us-leaves-afghanistan/2014/05/12/74057f62-cfa9-11e3-b812-0c92213941f4_story.html. பார்த்த நாள்: 24 October 2016. "Qaim Ali Shah, the chief minister of Sindh province in southern Pakistan, said at a news conference in February that there were already more than 1 million illegal Afghan immigrants living in Karachi, a rapidly growing city of 22 million people." 
 35. Centre for Risk Studies at the University of Cambridge Judge Business School. "Karachi factsheet: Lloyd's City Risk Index". Lloyd's City Risk Index 2015–2025. Lloyd's. Archived from the original on 24 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 November 2016. {{cite web}}: |author1= has generic name (help)
 36. "The importance of Karachi – The Express Tribune". The Express Tribune (in அமெரிக்க ஆங்கிலம்). 12 October 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-06-13.
 37. Asian Development Bank. "Karachi Mega-Cities Preparation Project" (PDF). Archived from the original (PDF) on 6 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 1 January 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 38. The Trade & Environment Database. "The Karachi Coastline Case". Archived from the original on 11 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 1 January 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 39. Pakistan and Gulf Economist. "Karachi: Step-motherly treatment". Archived from the original on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 15 October 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 40. 40.0 40.1 Drivers of Long-Term Insecurity and Instability in Pakistan: Urbanization. Rand Corporation. 2014. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780833087508.
 41. Hasan, Arif (April 2015). "Land contestation in Karachi and the impact on housing and urban development". Environment and Urbanization (SAGE) 27 (1): 217–230. doi:10.1177/0956247814567263. பப்மெட்:26321797. 
 42. "The Informal Economy: Fact Finding Study" (PDF). Department for Infrastructure and Economic Cooperation. பார்க்கப்பட்ட நாள் 1 December 2016.
 43. பிபிசி ஆடை தொழிற்சாலை விபத்து
 44. 289 பேர் பலி என தகவல்
 45. "Climatological Information for Karachi, Pakistan". Hong Kong Observatory. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2011-05-02.
 46. "Karachi (During 1931-2008)". Pakistan Meteorological Department. Archived from the original on 2010-04-22. பார்க்கப்பட்ட நாள் 2011-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கராச்சி&oldid=3928569" இலிருந்து மீள்விக்கப்பட்டது