இந்தியாவின் உள்துறை அமைச்சர்
உள்துறை அமைச்சர் -(உள்விவகார அமைச்சர்) இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின் அமைச்சராவார். பிரதமருக்கு அடுத்த நிலையில் அதிக முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் வாய்ந்த அமைச்சர் பொறுப்பாகும். மாநில அளவிலும் இவ்வமைச்சகங்கள் பொறுப்பு வாயந்தனவாக கருதப்படுகின்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு இவ்வமைச்சகங்களே பொறுப்பு ஏற்கின்றன.
உள்துறை அமைச்சர் Minister of Home Affairs | |
---|---|
உள்துறை அமைச்சகம் | |
சுருக்கம் | HM |
உறுப்பினர் | மத்திய அமைச்சரவை |
அறிக்கைகள் | பிரதமர், இந்திய நாடாளுமன்றம் |
அலுவலகம் | வடக்கு தொகுதி, குடியரசுத் தலைவர் இல்லம், புது தில்லி |
நியமிப்பவர் | குடியரசுத் தலைவர் (ஆலோசனையின் பேரில் பிரதமர்) |
பதவிக் காலம் | 5 வருடம் |
முதலாவதாக பதவியேற்றவர் | சர்தார் வல்லப்பாய் படேல் |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
இணையதளம் | mha |
அமைச்சர்கள்
தொகுஇதுவரை இந்தியாவின் உள்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் பட்டியல்
№ | பெயர் | புகைப்படம் | பொறுப்பு வகித்த வருடம் | கட்சி (கூட்டணி) |
பிரதமர்கள் | ||
---|---|---|---|---|---|---|---|
1 | சர்தார் வல்லப்பாய் படேல் | 15 ஆகத்து 1947 | 12 திசம்பர் 1950 | இந்திய தேசிய காங்கிரசு | ஜவகர்லால் நேரு | ||
2 | ஜவகர்லால் நேரு | 12 திசம்பர் 1950 | 26 திசம்பர் 1950 | ||||
3 | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி | 26 திசம்பர் 1950 | 5 November 1951 | ||||
4 | கைலாசு நாத் கட்சு | 5 நவம்பர் 1951 | 10 சனவரி 1955 | ||||
5 | கோவிந்த் வல்லப் பந்த் | 10 சனவரி 1955 | 25 பெப்ரவரி 1961 | ||||
6 | லால் பகதூர் சாஸ்திரி | 25 பெப்ரவரி 1961 | 1 செப்டம்பர் 1963 | ||||
7 | குல்சாரிலால் நந்தா | 1 செப்டம்பர் 1963 | 9 நவம்பர் 1966 | ஜவகர்லால் நேரு லால் பகதூர் சாஸ்திரி இந்திரா காந்தி | |||
8 | இந்திரா காந்தி | 9 நவம்பர் 1966 | 13 நவம்பர் 1966 | இந்திரா காந்தி | |||
9 | ஒய். பி. சவாண் | 13 நவம்பர் 1966 | 27 June 1970 | ||||
(8) | இந்திரா காந்தி | 27 சூன் 1970 | 5 பெப்ரவரி 1973 | ||||
10 | உமா சங்கர் தீட்சித் | 5 பெப்ரவரி 1973 | 10 அக்டோபர் 1974 | ||||
11 | காசு பிரம்மானந்த ரெட்டி | 10 அக்டோபர் 1974 | 24 மார்ச் 1977 | ||||
12 | சரண் சிங் | 24 மார்ச் 1977 | 1 சூலை 1978 | ஜனதா கட்சி | மொரார்ஜி தேசாய் | ||
13 | மொரார்ஜி தேசாய் | 1 சூலை 1978 | 24 சனவரி 1979 | ||||
14 | கிருபாய் எம். படேல் | 24 சனவரி 1979 | 28 சூலை 1979 | ||||
(9) | ஒய். பி. சவாண் | 28 சூலை 1979 | 14 சனவரி 1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | சரண் சிங் | ||
15 | ஜெயில் சிங் | 14 சனவரி 1980 | 22 சூன் 1982 | இந்திய தேசிய காங்கிரசு | இந்திரா காந்தி | ||
16 | ரா. வெங்கட்ராமன் | 22 சூன் 1982 | 2 செப்டம்பர் 1982 | ||||
17 | பிரகாஷ் சந்திர சேத்தி | 2 செப்டம்பர் 1982 | 19 சூலை 1984 | ||||
18 | பி. வி. நரசிம்ம ராவ் | 19 சூலை 1984 | 31 திசம்பர் 1984 | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி | |||
19 | எசு. பி. சவாண் | 31 திசம்பர் 1984 | 12 மார்ச் 1986 | ராஜீவ் காந்தி | |||
(18) | பி. வி. நரசிம்ம ராவ் | 12 மார்ச் 1986 | 12 மே 1986 | ||||
20 | பூட்டா சிங் | 12 மே 1986 | 2 திசம்பர் 1989 | ||||
21 | முப்தி முகமது சயீத் | 2 திசம்பர் 1989 | 10 நவம்பர் 1990 | ஜனதா தளம் (தேசிய முன்னணி) |
வி. பி. சிங் | ||
22 | சந்திரசேகர் | 10 நவம்பர் 1990 | 21 சூன் 1991 | சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) (தேசிய முன்னணி) |
சந்திரசேகர் | ||
(19) | எசு. பி. சவாண் | 21 சூன் 1991 | 16 மே 1996 | இந்திய தேசிய காங்கிரசு | பி. வி. நரசிம்ம ராவ் | ||
23 | முரளி மனோகர் ஜோஷி | 16 மே 1996 | 1 சூன் 1996 | பாரதிய ஜனதா கட்சி | அடல் பிகாரி வாச்பாய் | ||
25 | தேவ கௌடா | 1 சூன் 1996 | 29 சூன் 1996 | ஜனதா தளம் (ஐக்கிய முன்னணி) |
தேவ கௌடா | ||
25 | இந்திரஜித் குப்தா | 29 சூன் 1996 | 19 மார்ச் 1998 | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (ஐக்கிய முன்னணி) |
தேவ கௌடா ஐ. கே. குஜரால் | ||
26 | லால் கிருஷ்ண அத்வானி | 19 மார்ச் 1998 | 22 மே 2004 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
அடல் பிகாரி வாச்பாய் | ||
27 | சிவ்ராஜ் பாட்டீல் | 22 மே 2004 | 30 நவம்பர் 2008 | இந்திய தேசிய காங்கிரசு (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) |
மன்மோகன் சிங் | ||
28 | ப. சிதம்பரம் | 30 நவம்பர் 2008 | 31 ஜூலை 2012 | ||||
29 | சுசில்குமார் சிண்டே | 31 சூலை 2012 | 26 மே 2014 | ||||
30 | ராஜ்நாத் சிங் | 26 மே 2014 | 30 மே 2019 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
நரேந்திர மோதி | ||
31 | அமித் ஷா | 30 மே 2019 | பதவியில் |
பணி
தொகுஉள்துறை அமைச்சரின் முக்கிய பொறுப்புகளாவன;
- மாநில மற்றும் மத்திய அரசின் உள்நிர்வாகம் சார்ந்த விவகாரங்களை கவனித்தல்.
- அனைத்து உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை கவனித்தல்.
- நாட்டின் அனைத்து சட்ட ஒழுங்கு நிலைமைகளை கண்காணித்தல்.
- அனைத்து குடியுரிமை மற்றும் இயற்கை பண்புகளை கொண்ட மக்கள்தொகை கணக்கெடுத்தல், தேசிய கீதம், தேசியக் கொடி, மொழிகள் இவைகளை காத்தல்.
- அரசியலமைப்பின் படி இதன் அடிப்படை செயல்பாடுகளான குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மற்றும் ஏனைய அமைச்சர்களின் சுற்றறிக்கைகள், நியமனங்கள், பொறுப்பு விலகல்கள் அல்லது விலக்கல்கள், ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்களின் நியமனம் மற்றும் விலக்கல்கள் போன்ற செயல்பாடுகள் இத்துறை அமைச்சரால் அல்லது அமைச்சகத்தால் கவனிக்கப்படுகின்றன.