பூட்டா சிங்

இந்திய அரசியல்வாதி (1934-2021)

பூட்டா சிங் (ஆங்கில மொழி: Buta Singh, பிறப்பு:21 மார்ச் 1934) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஆவார்.இவர் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர். மேலும் இவர் 2007 முதல் 2010 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவராகவும் இருந்துள்ளார். 2004 முதல் 2006 வரை பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3]

பூட்டா சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு 21 மார்ச்சு 1934 (1934-03-21) (அகவை 89)
முஸ்தபாபூர், ஜலந்தர், பஞ்சாப் , இந்தியா
இறப்பு 02 சனவரி 2021
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் முஸ்தபாபூர், ஜலந்தர், பஞ்சாப் , இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

இறப்பு தொகு

அவருக்கு 2020 அக்டோபர் மாதத்தில் மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு நினைவிழந்த உணர்வற்ற நிலையில் இருந்தார். இதன் காரணமாக அவர் தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி 2021 சனவரி 2 ஆம் நாள் இறந்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டா_சிங்&oldid=3792716" இருந்து மீள்விக்கப்பட்டது