மும்பை பல்கலைக்கழகம்

மும்பை பல்கலைக்கழகம் (மராத்தி: मुंबई विद्यापीठ), (University of Mumbai, 1996 வரை University of Bombay ), இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தலைநகர் மும்பையில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இதனுடன் இணைந்துள்ள கல்லூரிகள் மும்பை நகர் முழுமையுமன்றி நான்கு கடலோர மாவட்டங்களான தாணே, ராய்கர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க்கிலும் பரவி உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. பல துறைகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.

மும்பை பல்கலைக்கழகம்
मुंबई विद्यापीठ
குறிக்கோளுரைசமக்கிருதம்: शीलवृतफला विद्या
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"கல்வியின் பயன் நற்குணமும் நேர்மையான நடத்தையும்"
வகைபொது
உருவாக்கம்1857
வேந்தர்மகாராட்டிர ஆளுநர்
துணை வேந்தர்முனைவர். ராசன் எம். வேலுகர்
அமைவிடம், ,
வளாகம்ஊரகப் பகுதி
சேர்ப்புயுஜிசி, என்.ஏ.ஏ.சி, ஏ.ஐ.யூ
இணையதளம்mu.ac.in

இந்தப் பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு முனைவர் ஜான் வில்சனால் துவங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் வடிவம் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களை ஒத்து இருந்தது; இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் வழியே கல்வி கற்பிக்கப்பட்டது. புனித சேவியர் கல்லூரி 1868ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு முனைவர் ஜான் வில்சன் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்றார். அவரது மனைவி மார்கெரெட் பேய்ன் வில்சன் பெண்களுக்காக 16 பள்ளிகளைத் துவங்கினார். துவக்கத்தில் எல்பின்ஸ்டன் கல்லூரி மும்பை பல்கலைக்கழகத்தின் இருப்பிடமாக இருந்தது.

1996ஆம் ஆண்டு ஓர் அரசாணை மூலம் பம்பாய் பல்கலைக்கழகம் என்றிருந்த பெயர் மும்பை பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. இதன் முதன்மை வளாகம் சான்டாகுரூசு பகுதியில் உள்ள கலினாவில் அமைந்துள்ளது. இங்கு நிர்வாக மற்றும் கல்வித்துறைகள் இயங்குகின்றன. மற்றுமொரு வளாகம் மும்பையின் ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நிர்வாகப் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_பல்கலைக்கழகம்&oldid=3255306" இலிருந்து மீள்விக்கப்பட்டது