சூலை 15
நாள்
(ஜூலை 15 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 15 (July 15) கிரிகோரியன் ஆண்டின் 196 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 197 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 169 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 70 – உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர்.
- 1099 – முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர்.
- 1149 – திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது.
- 1240 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
- 1381 – இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
- 1741 – உருசியக் கப்பல் கலபதி அலெக்சி சிரிக்கோவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே அலாஸ்காவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.
- 1799 – நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார்.
- 1815 – நெப்போலியப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் பெலரபோன் என்ற கப்பலில் வைத்து சரணடைந்தான்.
- 1816 – பிரெஞ்சு இயற்பியலாளர் அகத்தீன் பிரெனெல் ஒளியின் விளிம்பு விளைவுக்கான பின்னிணைப்பாகத் தனது புகழ் பெற்ற பிரெனெல் வலயங்கள் பற்றி அறிமுகப்படுத்தினார்.
- 1823 – உரோமை நகரில் பண்டைய சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் தீயில் சேதமடைந்தது.
- 1834 – எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை மன்று 356 ஆண்டுகளின் பின்னர் கலைக்கப்பட்டது.
- 1857 – சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
- 1860 – இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் செப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.[1]
- 1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
- 1870 – ரூபர்ட்சுலாந்தும் வட-மேற்கு பிராந்தியமும் கனடாவுக்குக் கொடுக்கப்பட்டன. இப்பெரும் நிலப்பகுதிகளில் இருந்து மானிட்டோபா, வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய கனடிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
- 1888 – சப்பானின் பண்டாய் சுழல்வடிவ எரிமலை வெடித்ததில் 500 பேர் உயிரிழந்தனர்.
- 1916 – வாசிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் இணைந்து போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
- 1927 – வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் ஆத்திரியக் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1946 – ஐக்கிய இராச்சியம் வடக்கு போர்னியோவை (இன்றைய மலேசியாவின் சபாவில்) தனதாக்கியது.
- 1955 – அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர் மேலும் 34 பேர் கையெழுத்திட்டனர்.
- 1959 – ஐக்கிய அமெரிக்காவில் எஃகுத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் ஆரம்பமானது. இது அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு எஃகு இறக்குமதிக்கு வழிவகுத்தது.
- 1974 – சைப்பிரசு, நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் இராணுவப் புரட்சியை ஆரம்பித்து அரசுத்தலைவர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோசு சாம்ப்சனைத் தலைவராக்கினார்கள்.
- 1975 – விண்வெளிப் போட்டி: முதலாவது அமெரிக்க-சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் அப்பல்லோ-சோயூசு விண்கலம் ஐந்து அமெரிக்க-சோவியத் விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.
- 1983 – பாரிசில் ஓர்லி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
- 1991 – இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
- 1998 – இலங்கை, வவுனியாவில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் புளொட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சண்முகநாதன் கொல்லப்பட்டார்.[2]
- 2002 – அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல்லைப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த அகமது சேக் கிற்கு பாக்கித்தான் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
- 2003 – டைம் வார்னெர் நெட்சுகேப் நிறுவனத்தைக் கலைத்தார். இதே நாளில் மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 2006 – டுவிட்டர் சமூக வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.
- 2014 – மாஸ்கோவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 24 பேர் உயிரிழந்தனர், 160 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1606 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669)
- 1858 – எம்மலின் பான்கர்ஸ்ட், ஆங்கிலேய செயற்பாட்டாளர் (இ. 1928)
- 1873 – ஹென்றி புய்சன், பிரெஞ்சு வளிமண்டல ஆய்வாளர் (இ. 1944)
- 1876 – மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950)
- 1903 – காமராசர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1975)
- 1915 – ஆல்பர்ட் கியோர்சோ, அமெரிக்க அறிவியலாளர் (இ.2010)
- 1918 – பிரெண்டா மில்னெர், ஆங்கிலேய-கனடிய உளவியலாளர்
- 1922 – பி. ராஜம் ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2009)
- 1922 – என். சங்கரய்யா, தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி
- 1930 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 2004)
- 1933 – எம். டி. வாசுதேவன் நாயர், இந்திய எழுத்தாளர்
- 1935 – திலகன், இந்திய நடிகர் (இ. 2012)
- 1937 – கானாயி குஞ்ஞிராமன், கேரள சிற்பி
- 1943 – ஜோசெலின் பெல் பர்னல், வடக்கு அயர்லாந்து வானியற்பியலாளர், வானியலாளர்
- 1946 – ஹஸனல் போல்கியா, புருணை சுல்தான்
- 1947 – லிடியா டேவிசு, அமெரிக்க எழுத்தாளர்
- 1949 – முகமது பின் ராஷித் அல் மக்தூம், ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலமைச்சர்
- 1953 – முத்தையா முதலியார், இந்திய அரசியல்வாதி (பி. 1883)
- 1956 – ஜோ சத்ரியானி, அமெரிக்க பாடகர்
- 1959 – ரமேசு போக்கிரியால், இந்திய அரசியல்வாதி, இந்தி மொழிப்புலவர்
- 1961 – பொரஸ்ட் விடேகர், அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1965 – பெ. கருணாகரன், தமிழக எழுத்தாளர்
- 1970 – அனு ஹாசன், தமிழ்த் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர்
- 1973 – பிறையன் ஆஸ்டின் கீரின், அமெரிக்க நடிகர்
- 1976 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (இ. 2014)
இறப்புகள்
- 998 – அபுல் வபா, பாரசீக கணிதவியலாளர்,. வானியலாளர் (பி. 940)
- 1274 – பொனெவெந்தூர், இத்தாலிய ஆயர், புனிதர் (பி. 1221)
- 1868 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன், அமெரிக்க மருத்துவர் (பி. 1819)
- 1904 – ஆன்டன் செக்கோவ், உருசிய எழுத்தாளர் (பி. 1860)
- 1907 – சியூ சின், சீனப் புரட்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் (பி. 1875)
- 1919 – எர்மான் எமில் பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1852)
- 1953 – முத்தையா முதலியார், தமிழக அரசியல்வாதி (பி. 1883)
- 1976 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (இ. 2014)
- 1991 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)
- 2002 – எம். எச். எம். ஷம்ஸ், இலங்கையின் ஊடகவியலாளர் (பி. 1940)
- 2003 – என். கே. பத்மநாதன், ஈழத்தின் நாதசுவரக் கலைஞர் (பி. 1931)
- 2013 – எம். கே. ஆத்மநாதன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர்
- 2016 – கந்தீல் பலோச்சு, பாக்கித்தானிய நடிகை, பெண்ணிய செயற்பாட்டாளர் (பி. 1990)
- 2020 – பத்மா சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1934)
- 2022 – பிரதாப் போத்தன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் (பி. 1952)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 29
- ↑ "Principal Ceylon Events, 1998". Ferguson's Ceylon Directory, Colombo. 1999.