மிதிவெடி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மிதிவெடிகள் அல்லது கண்ணிவெடிகள் (ⓘ) ஒருபோதும் தூங்குவதில்லை மலிவானவை என்பதால் யுத்தத்தில் பெருமளவிற் பாவிக்கப்பட்டது. கிளைமோர் மிதிவெடிகள் நிலத்தில் மேல் வைக்கப்படுபவை. இவை தவிர ஏனையவை பொதுவாக நிலத்தில் ஒருசில செண்டிமீட்டர் ஆழத்திலேயே புதைக்கப்படுபவை. எனினும் மிதிவெடி அகற்றுபவர்கள் பெரும்பாலும் 15 சென்டிமீட்டர் (6 அங்குலம்) வரை நிலத்தைச் சோதனை செய்து மிதிவெடிகள் அற்றது என்பதை உறுதி செய்துகொள்வர். மிதிவெடிகள் மிதிப்பதால் வெடிப்பவை ஆகவேதான் அவை மிதிவெடிகள் என்று அழைக்கப்படுகின்றது. ஜெய்ஹிந்த்,கோ போன்ற திரைப்படங்களில் வருவது போல மிதித்து எடுக்கும் போது வெடிப்பவை அல்ல, அப்படியாயின் அவை மிதித்து எடுத்தால் வெடி என்றவாறு அல்லவா அழைக்கவேண்டும். கிளைமோரில் உருக்கு உருளைகள் பொருத்தப்பட்டு எதிரியின் பக்கம் எனக்குறிப்பிடப்பட்ட ஓர் திசையில் வெடிக்கும். இவை ஒரு தடவை வெடித்தால் நூறுதடவை வெடிப்பது போல் உருக்கு உருளைகள் சிதறிச் சேதத்தை உண்டுபண்ணும். சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப மிதிவெடிகள் நிலத்தில் புதைக்கப்படும்போது ஓர் தளக்கோலத்திற் புதைக்கப்பட்டு அவை உரியமுறையில் பதிவு செய்யப்படும். இவை பின்னர் மிதிவெடிகளை அகற்றுவதற்கு உதவியாக இருக்கும். இலங்கையில் இலங்கை இராணுவத்தினர் புரிந்துணர்வு ஒப்பந்ததின் பின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மிதிவெடி நடவடிக்கைப் பிரிவிற்குக் மிதிவெடி புதைக்கப்பட்ட அறிக்கைகளைக் கையளித்தனர்.
மிதிவெடியின் வடிவங்கள்
தொகு- கனவுரு வடிவம் (ஜொனி 95)
- உருளை வடிவம் (ஜொனி 99, மேஜர் இளவழுதி, பி4எம்கே1, விஎஸ் 50)
மிதிவெடியின் நிறங்கள்
தொகுவிடுதலைப் புலிகள் பிளாஸ்டிக் கதிரைகள், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி மிதிவெடிகளைத் தயார்செய்ததால், விடுதலைப் புலிகளின் மிதிவெடிகளை நிறங்கள் ஊடாக அடையாளம் காண்பது கடினமானதாகும்.
மிதிவெடிகள் இரண்டு வகைப்படும்
மனிதர்களுக்கு எதிராவை
தொகுஇராணுவரீதியாக போரில் ஒருவரைக் கொல்வதை விட காயப்படுத்துவது உளரீதியாகவும் (காயப்பட்டவர் சண்டையில் ஈடுபடுவரின் பக்கத்திற்கே கொண்டுவரவேண்டி இருப்பதாலும் அவர் வரும் போது ஆ, ஊ என ஒலி எழுப்புவதாலும்) ஆட்பலரீதியாகவும் (காயப்பட்டவருடன் காயப்பட்டவர்களைத் தூக்குவதற்கு ஆட்கள் தேவைப்படுவதால்) சண்டையில் ஈடுபடுவர்களில் பலம் குறைவடைகிறது. இலங்கையில் இவையே மிகப்பெருமளவிற் பாவிக்கப்பட்டது. மனிதர்களுக்கு எதிரான மிதிவெடிகள் மனிதர்களுக்கு மாத்திரம் அல்லாமல் பசுக்களிற்கும் பாதிப்பை உண்டு பண்ணும்.
இலங்கையிற் பாவிக்கப்பட்டவை
- ஜொனி 95, ஜொனி 99 (ரங்கன்), ஜொனி மின்சார மிதிவெடி
- மேஜர் இளவழுதி
- பாக்கிஸ்தானிய பி4எம்கே1
- விஎஸ் 50
- ரைப் 72
- எம் 969
- கிளைமோர்
வாகனங்களுக்கு எதிரானவை
தொகுஇவை பெரும்பாலும் கவச வாகனங்களை இலக்கு வைத்தே நிலத்தில் புதைக்கப்படுபவை, என்றாலும் வாகனங்கள் சென்றாலும் வெடிக்கூடியவை. அமெரிக்க எம் 15 போன்றவை சுமார் 100 கிலோ எடைக்கு மேற்பட்டால் மாத்திரமே வெடிக்கூடியவை, எனவே மனிதர்கள் நடந்து போனாலும் வெடித்தல் நிகழாது. எனினும் ஏனையவற்றில் வெடித்தலை ஆரம்பிப்பது மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி என்பதால் மனிதர்கள் போனாலும் வெடிக்ககூடியவை. இவை கூடுதலான வெடிபொருட்களைக் கொண்டிருப்பதால் பாரிய சேதத்தை உண்டுபண்ணும் ஆயினும் இவை எண்ணிக்கையிற் குறைவாகவே இலங்கையிற் காணப்படுகிறது.
இலங்கையிற் பாவிக்கப்பட்டவை
- அம்மான்
- அம்மான் 2000
- சலாகை
- எம் 15