பி4எம்கே1
பி4எம்கே1 பாக்கிஸ்தான் நாட்டில் தயாரிக்கபட்ட மனிதர்களுக்கு எதிரான மிதிவெடியாகும். இது இலங்கை, ஆப்கானிஸ்தான், அங்கோலா, எரித்திரியா, எதியோப்பியா இந்தியா ஆகிய நாடுகளிற் பயன்படுத்தப்பட்டது. இது 30 கிராம் அளவிலான Tetryl வெடிபொருளைக் கொண்டிருக்கும். . ஜொனி 99 இதைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டதாக சிலராற் கூறப்பட்டாலும் ஜொனி 99 அளவிற் பெரியதுடன் கூடுதலான வெடிபொருளையும் கொண்டுள்ளது. குறைந்தளவே உலோகத்தைக் கொண்டிருப்பதால் பெரும்பாலான மிதிவெடிகளை கண்டுபிடிக்கும் உபகரணங்களால் கண்டுபிடிப்பது சிரமமானதாகும். இது 4 செண்டிமீட்டர் உயரமானதுடன் விட்டம் 7 செண்டிமீட்டர் அளவானது. இவை மண்ணிறத்தில் இருக்கும் சிலசமயங்களில் பச்சைநிறத்தில் இருக்கலாம் கூறப்பட்டாலும் இலங்கையில் பச்சை நிறத்தில் இவை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உசாத்துணை
தொகு- ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கையில் உள்ள மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய துண்டுப்பிரசுரம்.
- பி4எம்கே1, பி4எம்கே2 பரணிடப்பட்டது 2012-07-06 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- ஹலோ ரஸ்ட் இன் வெடிபொருள் அகற்றுவோரின் புத்தகம் (ஆங்கில மொழியில்)
மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி | |
---|---|
ஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95 |