ரைப் 72
ரைப் 72 எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த மிதிவெடி சீனத் தயாரிப்பாகும். பச்சைநிறமான இந்த ரைப் 72 மிதிவெடியில் A, B, C ரகங்கள் உள்ளது. இதில் B,C ரகங்கள் இலத்திரனியல் முறையில் இயக்கப்படுபவை. இதில் இருக்கும் ஊசியை விட மீதி எல்லாம் ஒன்றாகவே காட்சியளிக்கும் இது இலத்திரனியல் இரகமா அல்லது சாதரணமானதா எனக்கண்டுபிடிப்பது கடினமானது. மிதிவெடி அகற்றுபவர்கள் இதை அதே இடத்தில் வைத்து வெடிக்க வைக்குமாறே பரிந்துரை செய்யப்படுகின்றனர். 51 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும் இது 7.8 முதல் 8 செண்டிமீட்டர் வரையிலான விட்டமும்*3.8 முதல் 4 செண்டிமீட்டர் உயரமும் உடையது. குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கலாம்.
உசாத்துணை
தொகு- ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கையில் உள்ள மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய துண்டுப்பிரசுரம். (ஆங்கில மொழியில்)
- ஹலோ ரஸ்ட் இன் வெடிபொருள் அகற்றுவோரின் புத்தகம் (ஆங்கில மொழியில்)
- மனிதர்களுக்கு எதிரான சிதறும் மிதிவெடி - ரைப் 72 (ஆங்கில மொழியில்)
மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி | |
---|---|
ஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95 |