பயர் பாக்சு

மொசில்லா நிறுவனம் உருவாக்கிய இணைய உலாவி

மொசிலா பயர் பாக்சு என்பது ஒரு இலவச திறந்தமூல இணைய உலாவியாகும். இது மொஸிலா நிறுவனத்தாலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களாலும் உருவாக்கப் பட்டதாகும். திசம்பர் 2013 இன்படி உலகின் 18.35% வீதமானவர்கள் இந்த உலாவியைப் பயன்படுத்துகின்றார்கள். இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் வலையுலாவியாக மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளருக்கு அடுத்தாக விளங்குகின்றது.[11]

Mozilla Firefox
மேம்பாட்டாளர்Mozilla Foundation and contributors
மொசில்லா நிறுவனம்
தொடக்க வெளியீடுசெப்டம்பர் 23, 2002; 21 ஆண்டுகள் முன்னர் (2002-09-23)
எழுதப்பட்ட மொழிசி++, யாவாக்கிறிட்டு, C, மீயுரைக் குறியிடு மொழி, Rust[1]
இயக்க அமைப்புமைக்ரோசாப்ட் விண்டோசு, macOS, லினக்சு, Android, ஐஓஎஸ்[2] (Unofficial ports to BSDs, Solaris, OpenSolaris, illumos)
அளவு
  • Windows: 44 MB[3][4]
  • macOS: 82 MB[5]
  • Linux: 54 MB[6]
  • Android: 30 MB[7]
  • iOS: 79 MB
  • Source code: 186 MB[8]
வளர்ச்சி நிலைActive
வகைஉலாவி
Feed reader
Mobile web browser
உரிமம்MPL 2.0[9][10]
வலைத்தளம்mozilla.org/firefox
சீர்தரம்HTML5, விழுத்தொடர் பாணித் தாள்கள், ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்), Atom
பயர் பாக்சு - தற்போதைய பெயருடன் கூடிய சின்னம் (2017 முதல்)

இணையப்பக்கங்களைக் காட்டுவதற்கு இந்த உலாவியானது ஜிக்கோ வடிவமைப்பு இயந்திரத்தைப் பயனபடுத்துகின்றது. இது இணையத்தின் தற்போதைய தரநிர்ணயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக சீர்தரங்களாக வரக்கூடியவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பயர்பாக்சு தத்தல் முறையிலான இணைய உலாவல், எழுத்துப் பிழைதிருத்தி வசதிகளுடன் கூடிய தெரித்தெழு தத்தல்களை தடுத்தல் (pop up blocker), திறந்த நியம முறையூடாக மாற்றியமைக்கப்பட்ட நிகழ்நிலைப்புத்தககுறிப்பு (live Book mark), திறந்த நியமங்களை ஆதரித்தல் மற்றும் இடைமுகங்களை வேண்டியவாறு மாற்றுதல் வசதிகளுடன் பதிவிறக்க மேலாளர் (Download Manager) வசதிகளுடன் ஒருங்கிணைந்த விரும்பியடி மாற்றக்கூடிய தேடுபொறியைத் தன்னகத்தே உள்ளடக்கிய ஓர் உலாவியாகும். இதன் வசதிகளானது பொருத்துக்கள் (addons) மூலம் மென்பொருள் விருத்தியாளர்களூடாக விரிவாக்கப்படக்கூடியவை. பயர்பாக்சு மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்சுபுளோரர் மற்றும் ஆப்பிள் கணினிகளுக்கான சபாரி இணைய உலாவிகளை ஓர் மாற்று உலாவியாக விளங்குகின்றது.

பயர்பாக்சு விண்டோசு, மாக், லினக்சு, யுனிக்சு போன்ற இயங்குதளங்களில் இயங்கக்கூடியது.

வரலாறு

தொகு

ஆரம்பத்தில் பயர் பாக்சு ஓர் சோதனைப் பதிப்பாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.

 
பயர் பாக்சு உலாவியின் முதல் பதிப்பின் சின்னம்

ஆரம்பத்தில் பீனிக்ஸ் (வீனிக்ஸ், Phoenix) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது கணினிகளின் BIOS தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பதிப்புரிமை சம்பந்தாமான பிரச்சினைகளால் இப்பெயரானது மாற்றப் பட்டு பயர்பேட் எனமாற்றப்பட்டது. இதுவும் பின்னர் இலவசமான தகவற் தளத்தமான ஓர் மென்பெயரானது இப்பெயரில் இருப்பதால் இது பெப்ரவரி 9, 2004 இல் இருந்து மொஸிலா பயர் பாக்சு அல்லது சுருக்கமாக பயர் பாக்சு என மாற்றப்பட்டது. பயர் பாக்சு 1.0 ஐ அறிமுகம் செய்ய முன்னரே பயர் பாக்சு உலாவியின் பல பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. தற்போதைய பதிப்பான பயர் பாக்சு 2.0 ஐ வெளியிட முன்னர் பயர் பாக்சு 1.0 நவம்பர் 9, 2004 உம், பயர் பாக்சு 1.5 நவம்பர் 29, 2004 இலும் வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் இரண்டாவது பதிப்பு (2.0) பசிபிக் நேரப்படி அக்டோபர் 24, 2006 பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் மூன்றாவது பதிப்பு (3.0) ஜூன் 17, 2008 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.

பயர் பாக்ஸ் 2.0

தொகு

ஃபயர்ஃபாக்ஸின் இரண்டாவது பதிப்பு பசிபிக் நேரப்படி அக்டோபர் 24 பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கு முன்னரே பீட்டாநியூஸ் இணையத்தளமூடாகப் பதிவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது.

பொன் எக்கோ (Bon Echo) எனச் செல்லப் பெயரிடப்பட்ட இத் திட்டமானது இதம் முதலாவது பீட்டாப் பதிப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக பயர் பாக்சு 2.0 என்றே அறியப்பட்டது.

இதிலுள்ள வசதிகள்

  • புதிய விண்டோஸ் நிறுவலானது நல்சாப்ட்டின் (Nullsoft) ஸ்கிரிப்ட் முறையிலானது.
  • இணைய மோசடிகளைத் தடுக்கும் முறைகள்
  • ஓளிந்திருக்கும் பலதேர்வுகள் எவ்வாறு தத்தல் முறையிலான உலாவல்கள் தோற்றமளிக்கும் முறைகள்.
  • தத்தல் முறையில் மூடப்பட்டவற்றின் சரித்திரங்களும் அவற்றை மீளத்திற்க்கும் முறையும்.
  • உலாவியானது நிலைகுலைந்து மீள ஆரம்பித்தால் விட்ட இடத்திலிருந்து தொடரும் வசதி.
  • புதிய தீம்கள், புதிய சின்னங்கள், மற்றும் புதிய தத்தல் முறையிலான
  • எழுத்துப் பிழைகளைச் சிகப்புக் கோடிட்டுக் காட்டுதல் இப்பதிப்பில் அறிமுகம் செய்யப்படுகின்றது அத்துடன் மாற்றுப் பெருமாபலும் சரியான சொல்லையும் தருகின்றது.
  • தேடல் ஆலோசனைகள் தானகவே சொற்களை முழுமையாக்கும் வசதி, யாகூ! தேடல், கூகிள் தேடல் மற்றும் ஆன்ஸ்சில் கிடைக்கின்றது.
  • புதிய தேடற் சேவையானது திறந்த தேடல்கள் மற்றும் ஷெர்லாக் தேடல்களை ஆதரிக்கின்றது.
  • நீட்சிகள், தீம்கள் போன்றவற்றைக் கையாள்வதற்கான சேர்க்கைகள் மனேஜர் என்ற வசதி.
  • புதிய தேடற்பொறிப் பொருத்தானது தேடுபொறிகளை அகற்றுவதற்கும் மீளஒழுங்கமைப்பதற்கும் பயன்படுகின்றது.
  • RSS மற்றும் Atom ஊட்டுக்களைப் பெறும் வசதியானது மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • ஜாவாஸ்கிரிப்ட் 1.7 இன் முழுஆதரவும் 1.6 இன் ஆதரவும்.

பயர் பாக்ஸ் 3.0

தொகு

பயர் பாக்ஸ் 3.0 ஜூன் 17, 2008 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. மைன்ஸ்பீட்" என்று செல்லப்பெயரால் அறியப்படும் இதன் மூன்றாவது பதிப்பானது விண்டோஸ் 95, 98 மற்றும் மில்லேனியம் மற்றும் NT ஆகிய இயங்குதளங்க்ளை ஆதரிக்காது. ஜூன் 2008 கணக்கின் படி பயர் பாக்ஸ் 3.0 உலாவி 2.31% உலாவி சந்தையை கொண்டுள்ளது. வெளியிடப்பட்ட அன்று 8 மில்லியன் தனிப்பட்ட தரவிரக்கம் செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

பயர் பாக்ஸ் 4.0

தொகு

பயர் பாக்ஸ் 4.0 மார்ச் 22 2011 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.

தற்போதைய பதிப்பு

தொகு

பயர்பாக்சு 41.0.2 பதிப்பு தற்போது பயன்பாட்டில் உள்ளது.[12]

வசதிகள்

தொகு
 
முதலாவது ஃபயர் பாக்ஸ் உலாவியின் தோற்றம். தத்தல் உலாவல் முறையினை இந்த பதிப்பு கொண்டிருக்கிறது

பயர்பாக்சு உலாவியானது பயனர்களால் உருவாக்கப் பட்ட நீட்சிகள் மற்றும் பொருத்துக்களை நிறுவிப்பாவிக்கூடியது. பயர்பாக்சு உலாவியானது பிரதான வசதிகளான தத்தல் முறையில் உலாவுதல், தேடல் வசதிகள், நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு, பதிவிறக்கங்களை விரும்பியவாறு ஒழுங்கமைக்கக்கூடிய வசதி போன்றவற்றினால பெரிதும் விரும்பப் படுகின்றது.

பயர்பாக்சு பல மென்பொருள் நியமங்களை ஆதரிக்கின்றது. இதில் HTML, XML, xHTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட், DOM, MathML, DTD, XSL, XVG, XPath மற்றும் PNG முறையிலான பட கோப்பு வடிவங்களை ஆதரிக்கின்றது.

மொஸிலா பயர்பாக்சு ஓர் பல் இயங்குதள உலாவியாகும் இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் விண்டோஸ் 98, 98 இரண்டாம் பதிப்பு, மில்லேனியம், NT, 2000, XP மற்றும் சேவர் 2003 இயங்குவதோடு, ஆப்பிள் மாக் ஓஸ் X மற்றும் லினக்ஸ் எக்ஸ்விண்டோ முறையில் இயங்கும். இதன் இலவசமான திறந்த மூலநிரலைக் கொண்டு FreeBSD, OS/2, சொலாரிஸ், ஸ்கைஓஎஸ் (SkyOS), பீஈஓஎஸ் (BeOS) மற்றும் விண்டோஸ் XP 64 பிட் பதிப்பிலும் இயங்கும்.

இணையவிருத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் சூழலை வழங்குகின்றது. இதில் ஜாவாஸ்கிரிப்ட் கன்சோல், DOM ஐ மேற்பார்வையிடுதல் மற்றும் வெங்காமான் ஸ்கிரிப்ட் டீபகர் ஆகியவற்றை வழங்குகின்றது.

பன்மொழி ஆதரவு

தொகு

பயர்பாக்சு உலாவியானது பல மொழிகளில் கிடைக்கின்றது. தமிழ் பயர்பாக்சு முயற்சிகள் தமிழா இணையத்தளமூடாக ஆரம்பிக்கப்பட்டு அதன் 1.5.0.1 பதிப்பானது தமிழ் மொழியில் உள்ளீடு செய்யக் கூடிய வகையில் கிடைக்கின்றது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

சந்தை நிலவரம்

தொகு

ஐரோப்பாவில் 20% மானவர்கள் பயர்பாக்சு உலாவியைப் பயன்படுத்துவதாகத் தெரிகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Languages summary". OpenHub. Black Duck. பார்க்கப்பட்ட நாள் 18 March 2017.
  2. "Supported Devices". பார்க்கப்பட்ட நாள் 2015-08-08.
  3. "Latest Firefox Windows installer". Mozilla. December 31, 2015. பார்க்கப்பட்ட நாள் December 31, 2015.
  4. "History of FireFox distribution size". Linexp.ru. March 23, 2013. Archived from the original on May 15, 2013. பார்க்கப்பட்ட நாள் July 1, 2013.
  5. "Latest Firefox OS X installer". Mozilla. December 31, 2015. பார்க்கப்பட்ட நாள் December 31, 2015.
  6. "Latest Firefox Linux installer". Mozilla. December 31, 2015. பார்க்கப்பட்ட நாள் December 31, 2015.
  7. "Firefox for Android on Google Play". பார்க்கப்பட்ட நாள் November 19, 2012.
  8. "Latest stable Firefox release". Mozilla. June 20, 2016.
  9. "Mozilla". Mozilla. பார்க்கப்பட்ட நாள் October 20, 2014.
  10. Mozilla Licensing Policies, mozilla.org, archived from the original on April 2, 2013, பார்க்கப்பட்ட நாள் January 5, 2012
  11. பிரபலாமன உலாவிகளின் சந்தை நிலவரம் அணுகப்பட்டது ஜனவரி 2014 (ஆங்கில மொழியில்)
  12. பயர்பாக்சு 41.0.2 https://www.mozilla.org/en-US/firefox/41.0.2/releasenotes/=மொசிலா பயர்பாக்சு 41.0.2. பார்க்கப்பட்ட நாள் அக் 31, 2015. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |accessdate= (help); Missing or empty |title= (help)

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயர்_பாக்சு&oldid=3865159" இலிருந்து மீள்விக்கப்பட்டது