1943
1943 (MCMXLIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- பிப்ரவரி 2 - நாஜிப்படைகள் சரணடைந்தனர்
- பிப்ரவரி 10 - மார்ச் 3 - மகாத்மா காந்தி தனது சிறை வாசத்திற்கெதிராக உண்ணாநோன்பு இருந்தார்.
- பிப்ரவரி 22 - வெள்ளை ரோசா என்று நாட்சி ஜெர்மனியில் அழைக்கப்பட்டவர்களை அடால்ப் ஹிட்லர் கொன்று குவித்த நாள்.
- மார்ச் 22 - இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் காட்டின் (Khatyn) நகரின் அனைத்து மக்களும் ஜெர்மனியினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
- ஜூலை 28 - ஜெர்மனியின் ஹம்பேர்க் நகரில் பிரித்தானியர் குண்டு போட்டதில் 42,000 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 22 - லெபனான் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- நவம்பர் 28 - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் டெஹ்ரானில் சந்தித்தனர்.
- நவம்பர் - இலங்கையில் இருந்து சென்னை சென்ற இலங்கை-இந்தியத் தொடருந்து சென்னைக்கு அருகில் செந்தனூரில் விபத்துக்குள்ளாகியதில் 30 பேர் இறந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[1]
- டிசம்பர் 20 - பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.
- டிசம்பர் 30 - சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் போட் பிளேர் என்ற இடத்தில் ஜப்பான் சார்பு இந்திய அரசை அமைத்தார்.
பிறப்புகள்
தொகு- சூன் 30 - அகமது சோபா, வங்காளதேச எழுத்தாளர், சிந்தனையாளர், புதின எழுத்தாளர், கவிஞர்
இறப்புகள்
தொகுநோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - ஆட்டோ ஸ்டர்ன்
- வேதியியல் - ஜியார்ஜ் டி கிவிசி
- மருத்துவம் - கார்ல் ஹென்றிக் டாம், எட்வர்ட் டொயிசி, ஜெரார்டு டொமாக்
- இலக்கியம் - வழங்கப்படவில்லை
- அமைதி - வழங்கப்படவில்லை
இவற்றையும் பார்க்கவும்
தொகு1943 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னைப் புகையிரத விபத்து". ஈழகேசரி. 21-11-1943. pp. 1.