பெப்ரவரி 2
நாள்
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 2 (February 2) கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார்.
- 962 – புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார்.
- 1141 – லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.
- 1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.[1]
- 1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது.
- 1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.
- 1868 – சப்பானிய பேரரசு ஆதரவுப் படைகள் ஒசாக்கா கோட்டையை தோக்குகாவா படைகளிடம் இருந்து கைப்பற்றி அதனை எரித்து சாம்பலாக்கினர்.
- 1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.
- 1880 – முதலாவது மின்சார வீதி விளக்குகள் அமெரிக்காவில் இந்தியானாவில் நிறுவப்பட்டன.
- 1899 – ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
- 1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
- 1920 – எஸ்தோனியாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
- 1946 – அங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1971 – ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு தொடர்பான பன்னாட்டு ராம்சர் சாசனம் ஈரானில் கையெழுத்திடப்பட்டது.
- 1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.
- 1972 – டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
- 1982 – சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1989 – ஆப்கான் சோவியத் போர்: ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி உருசியப் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின.
- 1990 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்குவதாகவும், நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்கவிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
- 1998 – பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் உயிரிழந்தனர்.
- 2005 – கனடிய அரசு 2005 சூலை 20 முதல் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கும் குடிமைத் திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- 2012 – பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 146-165 வரையானோர் உயிரிழந்தனர்/.
பிறப்புகள்
தொகு- 1522 – லொடோவிக்கோ பெராரி, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1565)
- 1859 – ஹேவ்லாக் எல்லிஸ், பிரித்தானிய உளநலவியலாளர் (இ. 1938)
- 1871 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)
- 1882 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர், கவிஞர் (இ. 1941)
- 1896 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1967)
- 1905 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 1982)
- 1913 – மசனோபு புக்குவோக்கா, சப்பானிய வேளாண் அறிஞர், மெய்யியலாளர் (இ. 2008)
- 1915 – குஷ்வந்த் சிங், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 2014)
- 1933 – தான் சுவே, பர்மாவின் 8-வது பிரதமர்
- 1939 – தாலே தோமஸ் மார்டென்சென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2014)
- 1947 – சோ. கிருஷ்ணராஜா, ஈழத்து மெய்யியலாளர், கல்வியாளர் (இ. 2009)
- 1949 – சுனில் வெத்திமுனி, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
- 1977 – சக்கீரா, கொலம்பியப் பாடகி, நடிகை
- 1985 – உபுல் தரங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
தொகு- 1594 – கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1525)
- 1907 – திமீத்ரி மெண்டெலீவ், தனிம அட்டவணையைத் தொகுத்த உருசிய வேதியியலாளர் (பி. 1834)
- 1955 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் (பி. 1877)
- 1960 – மு. இராகவையங்கார், தமிழக ஆய்வாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர் (பி. 1878)
- 1970 – பெர்ட்ரண்டு ரசல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மெய்யியலாளர், கணிதவியலாளர் (பி. 1872)
- 1982 – மோகன் லால் சுகாதியா, இராஜஸ்தான் முதலமைச்சர் (பி. 1916)
- 1987 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1913)
- 2009 – கே. கோவிந்தராஜ், இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1949)
- 2010 – கொச்சி ஹனீஃபா, மலையாளத் திரைப்பட நடிகர், இயக்குனர் (பி. 1948)
- 2013 – ப. சண்முகம், புதுச்சேரி மாநிலத்தின் 9வது முதலமைச்சர் (பி. 1927)
- 2014 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1967)
- 2023 – கே. விஸ்வநாத், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1930)
சிறப்பு நாள்
தொகு- ஸ்டாலின்கிராத் சமர் வெற்றி நாள் (உருசியா)
- கண்டுபிடிப்பாளர் நாள் (தாய்லாந்து)
- உலக சதுப்பு நில நாள்
மேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 13