1905
1905 (MCMV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1905 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1905 MCMV |
திருவள்ளுவர் ஆண்டு | 1936 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2658 |
அர்மீனிய நாட்காட்டி | 1354 ԹՎ ՌՅԾԴ |
சீன நாட்காட்டி | 4601-4602 |
எபிரேய நாட்காட்டி | 5664-5665 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1960-1961 1827-1828 5006-5007 |
இரானிய நாட்காட்டி | 1283-1284 |
இசுலாமிய நாட்காட்டி | 1322 – 1323 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 38 (明治38年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2155 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4238 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 1 - டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- ஜனவரி 2 - சீனாவின் போர்ட் ஆர்தர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் ஜப்பானியரிடம் ரஷ்யா சரணடைந்தது. இந்நிகழ்வு உலக நாடுகள் பலவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- ஜனவரி 5 - யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
- ஜனவரி 22 - (ஜனவரி 9 பழைய நாட்காட்டியில்) சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிரான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 23 - ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
- மார்ச் 3 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மன்னன் டூமா என அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் அவையை ஏற்படுத்த இணங்கினான்.
- மார்ச் 11 - இலங்கையில் மதவாச்சியில் இருந்து வட பகுதிக்கான தொடருந்துப் பாதை இணைப்பு வேலைகள் முழுமையாக முடிவடைந்தன.
- ஏப்ரல் 4 - இந்தியாவில் இமாசலப் பிரதேசம், கங்கிரா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 23 - யாழ்ப்பாணத்துக்கு முதலாவது தானுந்து வந்தது.
- மே 11 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
- ஜூன் - இலங்கையில் இந்திய சீர்தர நேரம் (ஒ.ச.நே.+5:30) அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூன் 7 - நோர்வே நாடாளுமன்றம் சுவீடனுடனான கூட்டமைப்பை ரத்துச் செய்வதாக அறிவித்தது. நோர்வே முழுமையான விடுதலை பெற்றது.
- ஜூன் 30 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் சார்புக் கோட்பாடு பற்றிய விளக்கங்களை அறிவித்தார்.
- ஆகஸ்ட் 1 - இலங்கையின் வடபகுதிக்கான 198 மைல் நீள தொடருந்து பாதை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
- அக்டோபர் 16 - ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 16 - வங்காளப் பிரிவினை நடந்த நாள்.
- நவம்பர் 28 - ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிரிஃபித் முழூ அயர்லாந்துக்குமான விடுதலையை வேண்டி சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.
- டிசம்பர் 9 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகுபிறப்புகள்
தொகு- சி. பா. ஆதித்தனார், தமிழகப் பத்திரிகையாளர் (இ. 1981)
- மே 13 - பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இ. 1977)
- ஜூலை 29 - டாக் ஹமாஷெல்ட், ஐக்கிய நாடுகள் அவையின் 2வது பொதுச் செயலர் (இ. 1961)
- ஆகத்து 31 - எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ. 2000)
இறப்புகள்
தொகு- ஆகஸ்ட் 19 - வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (பி. 1825)
- அக்டோபர் 6 - பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், ஜெர்மானிய புவியியலாளர் (பி. 1833)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - பிலிப் எடுவார்ட் ஆண்டன் வொன் லெனார்ட்
- வேதியியல் - ஜொஹான் ஃபிரீட்ரிக் வில்ஹெம் அடொல்ஃப் வொன் பேயெர்
- மருத்துவம் - ரொபேர்ட் கொக்
- இலக்கியம் - ஹெண்ட்ரிக் சியென்கியேவிச்
- அமைதி - Baroness Bertha Sophie Felicita Von Suttner