இந்தியத் தேசிய நாட்காட்டி

இந்தியத் தேசிய நாட்காட்டி (சில நேரங்களில் சக சம்வாட் எனவும் அறியப்படும்) இந்தியாவின் அலுவல்முறை குடிமை நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் இந்திய அரசிதழ் (Gazette of India), அனைத்திந்திய வானொலி,மற்றும் நடுவண் அரசின் நாட்காட்டிகள், ஆணைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இது குழப்பமாக இந்து நாட்காட்டி எனவும் அழைக்கப்படுகிறது; தவிர சக சகாப்தம் பல நாட்காட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

நாட்காட்டி அமைப்ப

தொகு
எண் மாதம் காலம் துவங்கும் நாள் (கிரெகொரியின்) இணையான தமிழ் மாதப் பெயர்கள்
1 சைத்ர 30/31 மார்ச் 22* சித்திரை
2 வைசாக 31 ஏப்ரல் 21 வைகாசி
3 ஜ்யேஷ்ட 31 மே 22 ஆனி
4 ஆஷாட 31 சூன் 22 ஆடி
5 சிராவண 31 சூலை 23 ஆவணி
6 பாத்ரபத 31 ஆகத்து 23 புரட்டாசி
7 ஆஷ்வின 30 செப்டம்பர் 23 ஐப்பசி
8 கார்த்திக 30 அக்டோபர் 23 கார்த்திகை
9 அக்ரஹாயன/மார்கசீர்ஷ 30 நவம்பர் 22 மார்கழி
10 பௌஷ 30 திசம்பர் 22 தை
11 மாக 30 சனவரி 21 மாசி
12 பால்குன 30 பிப்ரவரி 20 பங்குனி

நெட்டாண்டுகளில், சைத்ராவிற்கு 31 நாட்கள் உண்டு மற்றும் ஆண்டு மார்ச் 21 அன்றே துவங்கும். சூரியன் மெதுவாக நகரும் ஆண்டின் முன்பகுதியில் உள்ள மாதங்கள் அனைத்துமே 31 நாட்களைக் கொண்டிருக்கும்.இந்து நாட்காட்டியின் மாதங்களின் பெயர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட மாதம் எந்த நாட்காட்டியைக் குறிக்கிறது என்ற குழப்பம் ஏற்படுவதுண்டு.

ஆண்டுகள் சக சகாப்தத்தில் எண்ணப்படுகின்றன. ஆண்டு 0 விற்கு இணையான கிரெகொரியின் ஆண்டு கி.பி 78 ஆகும்.இணையான கிரெகொரியின் ஆண்டு நெட்டாண்டு எனில் சக ஆண்டும் நெட்டாண்டு ஆகும்.

1957ஆம் ஆண்டு நாட்காட்டி சீரமைப்பு குழுவினரின் பரிந்துரையின்படி இந்த நாட்காட்டி 1957 மார்ச், 22-ம் தேதி முதல் தேசிய நாட்காட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு