திசம்பர் 2
நாள்
(டிசம்பர் 2 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 2 (December 2) கிரிகோரியன் ஆண்டின் 336 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 337 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது.
- 1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான்.
- 1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் அமெரிக்கா நடுநிலைமை வகிக்கும் என அறிவித்தார், அதேவேளையில் ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காக்களில் தலையிடக்கூடாது எனவும் எச்சரித்தார்.
- 1843 – யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.[1]
- 1848 – முதலாம் பிரான்சு யோசப்பு ஆத்திரியாவின் பேரரசராக முடிசூடினார்.
- 1851 – புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் லூயி-நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் இரண்டாம் குடியரசைக் கலைத்தார்.
- 1852 – மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசராக முடிசூடினார்.
- 1859 – அடிமை ஒழிப்பு செயற்பாட்டாளரும் போராளியுமான ஜான் பிரவுன் மேற்கு வர்ஜீனியாவில் அக்டோபர் 16 இல் நடத்திய முற்றுகைக்காக தூக்கிலிடப்பட்டார்.
- 1908 – பூயி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.
- 1942 – மன்காட்டன் திட்டம்: என்ரிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்படப் பல கப்பல்கள் மூழ்கின.
- 1946 – பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.
- 1947 – பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து எருசலேமில் கலவரம் மூண்டது.
- 1950 – கொரியப் போர்: வட கொரியாவிலிருந்து ஐநா படையினர் முற்றாக விலக்கப்பட்டனர்.
- 1954 – சீனக் குடியரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடு வாசிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
- 1956 – பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.
- 1961 – பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
- 1970 – ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆரம்பமானது.
- 1971 – சோவியத்தின் செவ்வாயை நோக்கி ஏவப்பட்ட மார்ஸ் 2 விண்கலம் தரையிறங்கி ஒன்றை அங்கு இறக்கியது. இது வெற்றிகரமாகத் தரையிறங்கினாலும், தொடர்புகளை இழந்தது. செவ்வாயில் மெதுவாகத் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1971 – அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், உம் அல்-குவைன் ஆகிய நாடுகள் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் இணைந்தன.
- 1975 – பத்தே லாவோ என்பவர் லாவோசின் தலைநகர் வியஞ்சானைக் கைப்பற்றி, லாவோ மக்கள் சனநாயகக் குடியரசை அமைத்தார்.
- 1976 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1980 – எல் சல்வடோரில் நான்கு அமெரிக்கக் மதப்பரப்புனர்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
- 1982 – யூட்டா பல்கலைக்கழகத்தில் உலகின் முதலாவது செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
- 1984 – ஒதியமலைப் படுகொலைகள்: முல்லைத்தீவு மாவட்டம், ஒதியமலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 32 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1988 – பெனசீர் பூட்டோ பாகித்தானின் முதல் பெண் பிரதமரானார்.
- 1989 – மலேசிய - தாய்லாந்து அரசுகளுக்கும் மலாயக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி ஒப்பந்தத்தை அடுத்து மலேசியக் கம்யூனிசக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
- 1990 – ஒன்றுபட்ட செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் எல்முத் கோல் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
- 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற உக்ரைனை கனடாவும் போலந்தும் முதல் நாடுகளாக அங்கீகரித்தன.
- 1993 – கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் தலைவன் பப்லோ எசுகோபர் மெதெயின் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
- 1993 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1995 – யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
- 1999 – பெல்பாஸ்ட் உடன்பாடு: ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் அரசியலதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக் கொண்டது.
- 2002 – இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
- 2006 – பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
- 2006 – பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
- 2016 – கலிபோர்னியா, ஓக்லாந்தில் களஞ்சியச் சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
தொகு- 1859 – யோர்ச் சோரா, பிரான்சிய ஓவியர் (இ. 1891)
- 1880 – க்ஷிதி மோகன் சென், வங்காள எழுத்தாளர், கல்வியாளர் (இ. 1960)
- 1885 – ஜார்ஜ் மினாட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1950)
- 1912 – நாகிரெட்டி, திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் (இ. 2004)
- 1930 – கேரி பெக்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2014)
- 1933 – கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்
- 1937 – மனோகர் ஜோஷி, மகாராட்டிராவின் 15வது முதலமைச்சர்
- 1946 – டேவிட் மெக்காலே, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்
- 1960 – சில்க் ஸ்மிதா, தென்னிந்திய நடிகை (இ. 1996)
- 1963 – சிவா ஐயாதுரை, இந்திய-அமெரிக்க கணினி அறிவியலாளர், தொழிலதிபர்
- 1963 – நெப்போலியன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
- 1973 – மோனிக்கா செலசு, செர்பிய-அமெரிக்க டென்னிசு வீராங்கனை
- 1978 – நெல்லி ஃபர்ட்டடோ, கனடியப் பாடகி, நடிகை
- 1981 – பிரிட்னி ஸ்பியர்ஸ், அமெரிக்கப் பாடகி, நடிகை
- 1982 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)
இறப்புகள்
தொகு- 1547 – எர்னான் கோட்டெஸ், எசுப்பானிய தேடலறிஞர் (பி. 1485)
- 1594 – கிரார்துசு மெர்காதோர், பிளெமிய கணிதவியலாளர், நிலப்படவரைவாளர் (பி. 1512)
- 1881 – ஜென்னி வான் வெசுட்பலென், செருமானிய எழுத்தாளர், கார்ல் மார்க்சின் மனைவி (பி. 1814)
- 1911 – பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)
- 1933 – எஸ். ஜி. கிட்டப்பா, நாடக நடிகர், பாடகர் (பி. 1906)
- 1971 – வீ. கே. வெள்ளையன், இலங்கைத் தொழிற்சங்கவாதி, மலையக அரசியல்வாதி (பி. 1918)
- 1973 – வை. பொன்னம்பலம், தமிழ்ப் புலவர், தமிழாசிரியர் (பி. 1904)
- 1985 – பிலிப் லர்கின், ஆங்கிலேயக் கவிஞர், நூலாசிரியர் (பி. 1922)
- 1987 – யாகோவ் போரிசோவிச் செல்டோவிச், பெலருசிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1914)
- 1993 – பப்லோ எசுகோபர், கொலம்பியாவின் போதைக் கடத்தல் குழுத் தலைவர் (பி. 1949)
- 2002 – ஐவன் ஈலிச், ஆத்திரியப் போதகர், மெய்யியலாளர் (பி. 1926)
- 2008 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)
- 2014 – ஏ. ஆர். அந்துலே, மகாராட்டிராவின் 8வது முதலமைச்சர் (பி. 1929)
- 2015 – எம். ஏ. எம். ராமசாமி, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி 1931)
- 2016 – கோ. சி. மணி, தமிழக அரசியல்வாதி (பி. 1929)
சிறப்பு நாள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 21