யாழ்ப்பாணக் குடாநாடு

யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் வடக்கு அந்தலையில் அமைந்துள்ளது. இதன் வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ளது. இந்தக் குடாநாடு, ஆனையிறவு என்ற இடத்தில் ஒரு ஒடுங்கிய நிலப்பகுதி தென் எல்லையாக அமைந்து ஆனையிறவு கடல் நீரேரி வன்னிப் பகுதியை பிரிக்கிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்படம்

யாழ்ப்பாணக் குடாநாடு, உப்பாறு கடல்நீரேரி, தொண்டைமானாறு கடல்நீரேரி என்பவற்றால் கிட்டத்தட்ட மூன்று தீவுகளாகப் பிரிக்கப்பட்டது போல் தோற்றமளிக்கிறது. இந்த இயற்கைப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, யாழ் குடாநாடு, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுகள் என நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.[1]

மக்கட்பரம்பலைப் பொறுத்தவரை யாழ் குடாநாடு மிகவும், மக்கள் அடர்த்தி கூடிய ஒரு பகுதியாகும். 1981 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வட மாகாணத்தின் 11.6% நிலப்பரப்பைக் கொண்ட குடாநாட்டில் 66.59% மக்கள் வாழும் அதேவேளை, 88.4% மிகுதிப் பகுதியில், 33.41% மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.

உசாத்துணை

தொகு
  1. "Geographic Features". Ministry of Public Administration & Home Affairs (Sri Lanka). Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்ப்பாணக்_குடாநாடு&oldid=3919379" இலிருந்து மீள்விக்கப்பட்டது