முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆனையிறவு (Elephant Pass) இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கடலோர சமவெளி ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை வன்னிப் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈழப் போருக்கு முன்னதாக இலங்கையின் மிகப்பெரிய உப்பளம் இங்கே அமைந்திருந்தது.

ஆனையிறவு
Elephant Pass
வட மாகாணம், இலங்கை
ஆனையிறவு Elephant Pass is located in இலங்கை
ஆனையிறவு Elephant Pass
ஆனையிறவு
Elephant Pass
வகை இராணுவத் தளம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது Flag of Sri Lanka.svg இலங்கை படைத்துறை (1952-2000)
தமிழீழ விடுதலைப் புலிகள் (2000-2009)
Flag of Sri Lanka.svg இலங்கை படைத்துறை (2009-இன்று)
இட வரலாறு
கட்டிய காலம் 1952
சண்டைகள்/போர்கள் ஆனையிறவுத் தாக்குதல், 1991
ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 2000
ஆனையிறவுத் தாக்குதல், 2009

வரலாறுதொகு

1760 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் இங்கு ஒரு கோட்டையைக் கட்டி எழுப்பியதன் பின்னர் ஆனையிறவு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தளமாக இருந்து வந்துள்ளது. இக்கோட்டை பின்னர் 1776 இல் டச்சுக் காரரினாலும்,[1] பின்னர் பிரித்தானியராலும் மீளக் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் இலங்கைப் படைத்துறை இங்கு நவீன முறையில் இராணுவத் தளம் ஒன்றை இங்கு உருவாக்கியது.[1]

புவியியலும் காலநிலையும்தொகு

ஆனையிறவு கடலோர சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 3 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.[2]

ஈழப்போரில் ஆனையிறவுதொகு

ஆனையிறவு இராணுவத் தளத்தைக் கைப்பற்ற விடுதலைப் புலிகள் பல முறை முயன்ற போதும், 2000 ஆண்டு வரை இத்தளம் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1991ல் விடுதலைப் புலிகள் இத்தளத்தைக் கைப்பற்ற பெரும் சண்டையிட்டுத் தோற்றனர். 2000, ஏப்ரல் 22 அன்று இரண்டாம் ஆனையிறவுச் சண்டையின் போது விடுதலைப் புலிகள் இத்தளத்தைக் கைப்பற்றினர்.[3][4][5][6][7]. விடுதலைப் புலிகளிடம் இருந்து இத்தளத்தை இலங்கை இராணுவம் 2009, சனவரி 10 ஆம் நாள் மீண்டும் கைப்பற்றியது[8].

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனையிறவு&oldid=2772087" இருந்து மீள்விக்கப்பட்டது