மோனிக்கா செலசு

யுகோஸ்லோவியா நாட்டு தொழிற்முறை பெண் டென்னிஸ் வீராங்கனை

மோனிகா செலஸ் (பிறப்பு - டிசம்பர் 2, 1973) முன்னாள் யுகோஸ்லோவியா நாட்டு தொழிற்முறை பெண் டென்னிஸ் வீராங்கனை. இவர் அங்கேரி இனத்தை சேர்ந்தவர். இவர் யுகோசுலோவியா நாட்டிலுள்ள நோவி சேட் என்னுமிடத்தில் பிறந்து வளர்ந்தார். 1994ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையை பெற்றார்.[1] யூன் 2007ஆம் ஆண்டு அங்கேரியின் குடியுரிமையையும் பெற்றார். இவர் ஒன்பது முறை கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை பெற்றுள்ளார். இதில் எட்டு முறை யுகோசுலோவியா குடியுரிமையுடனும் ஒரு முறை அமெரிக்க குடியுரிமையுடனும். தன் 16 வயதில்பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை 1990ஆம் ஆண்டு வென்றார். இது வரை வேறுயாரும் இந்த இளவயதில் பிரெஞ்சு ஒப்பன் பட்டம் பெற்றதில்லை.[2].

மோனிக்கா செலசு
நாடு யுகோசுலாவியா (1988–1994)
 ஐக்கிய அமெரிக்கா (1994–2008)
வாழ்விடம்சரசோட்டா, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
உயரம்1.78 m (5 அடி 10 அங்) (5 அடி 10 அங்)
தொழில் ஆரம்பம்1989
இளைப்பாறல்2008 (last match 2003)
விளையாட்டுகள்இடக்கை
பரிசுப் பணம்US$ 14,891,762
Int. Tennis HoF2009 (member page)
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்595–122 (82.98%)
பட்டங்கள்53
அதிகூடிய தரவரிசைஇல. 1 (மார்ச் 11, 1991)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (1991, 1992, 1993, 1996)
பிரெஞ்சு ஓப்பன்W (1990, 1991, 1992)
விம்பிள்டன்F (1992)
அமெரிக்க ஓப்பன்W (1991, 1992)
ஏனைய தொடர்கள்
Tour FinalsW (1990, 1991, 1992)
ஒலிம்பிக் போட்டிகள் வெண்கலம் (2000)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்89–45
பட்டங்கள்6
அதியுயர் தரவரிசைNo. 16 (ஏப்ரல் 22, 1991)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்SF (1991, 2001)
பிரெஞ்சு ஓப்பன்3R (1990)
விம்பிள்டன்QF (1999)
அமெரிக்க ஓப்பன்QF (1999)
அணிப் போட்டிகள்
கூட்டமைப்புக் கோப்பை United States
W (1996, 1999, 2000)
ஒப்மேன் கோப்பை யுகோசுலாவியா
W (1991)
 United States
F (2001, 2002)
பதக்கத் தகவல்கள்
Women's tennis
நாடு  United States
Olympic Games
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2000 சிட்னி Singles

அனைத்து கிராண்ட் ஸ்லாம்களையும் தன் இருபது வயதிற்குள் பெற்றார். 1991- 1992 ஆம் ஆண்டுகளில் பெண்களில் முதல் தர வரிசை ஆட்டக்காரரக இருந்தார். ஏப்பரல் 23, 1993 ஆடுகளத்தில் ஒன்பது அங்குல கத்தியால் பின்புறமிருந்து ஒரு ஆளால் குத்தப்பட்டார்.[3] குத்தியவரை கைது செய்து விசாரித்தபோது அவர், ஸ்டெஃபி கிராப் ரசிகர் என்பது தெரியவந்தது.

“நான் ஸ்டெஃபி கிராஃப் ரசிகன். என்னால் செலஸ், ஸ்டெஃபியை வெற்றிகொள்வதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் என் வன்மத்தை தீர்த்துக் கொண்டேன்” என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.


இந்த காயம் காரணமாக இரண்டு ஆண்டுகளாக அவர் டென்னிஸ் விளையாடவில்லை. 1995ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் டென்னிஸ் களத்துக்கு திரும்பினார். 1996-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை நான்காவது முறையாக வென்றார். இருந்தாலும், மோனிகாவின் பழைய ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை. கடைசியாக தொழிற்முறை ஆட்டத்தை 2003-ல் விளையாடினார். 2008 பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஓய்வுக்குப் பின் Post traumatic stress disorder என்னும் மனநோயினால் பாதிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Monica Seles Biography
  2. "Ask Steven: Rafael Nadal the youngest French Open winner?". இஎசுபிஎன். பார்க்கப்பட்ட நாள் மார்ச் 10, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 1993: Tennis star stabbed
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிக்கா_செலசு&oldid=3010079" இலிருந்து மீள்விக்கப்பட்டது