ஒதியமலைப் படுகொலைகள்
ஒதியமலைப் படுகொலைகள் (Othiyamalai massacre) இலங்கையின் வடக்கு மாகாணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒதியமலை என்ற கிராமத்தில் இலங்கைத் தரைப்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.[1][2] 1984 டிசம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பதவிய இராணுவ முகாமில் இருந்து நெடுங்கேணிக்கு 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒதியமலைக் கிராமத்திற்குள் புகுந்த கிட்டத்தட்ட 30 இராணுவத்தினர் அக்கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை மட்டும் தனியான ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டுப் படுகொலை செய்தனர். இவ்வாறு 27 ஆண்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 ஆண்களைத் தம்முடன் கூட்டிச் சென்றனர். ஆனாலும், இவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை.[3][4][5]
ஒதியமலைப் படுகொலைகள் Othiyamalai massacre | |
---|---|
இடம் | ஒதியமலை, முல்லைத்தீவு, வட மாகாணம், இலங்கை |
நாள் | 2 திசம்பர் 1984 (+8 ஒசநே) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இலங்கைத் தமிழ் மக்கள் |
இறப்பு(கள்) | 29-32 |
காயமடைந்தோர் | தெரியவில்லை |
தாக்கியோர் | இலங்கை ஆயுதப் படைகள் |
நிகழ்வு
தொகுபன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையில், நிகழ்வை நேரில் கண்ட சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளன.[3] 1984 டிசம்பர் 1 சனிக்கிழமை நள்ளிரவில் 30 இற்கும் 40 இற்கும் இடைப்பட்ட இராணுவத்தினர் கிராமத்துள் புகுந்து, அங்குள்ள மலைக்காடு கோவிலில் தங்கியிருந்தனர். டிசம்பர் 2 அதிகாலை குடிமனைகளுக்குள் புகுந்து ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆண்களை அவர்களது கண்களையும் கைகளையும் கட்டி இழுத்துச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் அங்கிருந்த சனசமூக நிலையக் கட்ட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 27 பேர் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3] மேலும் ஐவர் (50 வயதானவர்கள்) 25 சிறீ 6511 என்ற இலக்கத்தகடு கொண்ட இழுவை இயந்திரம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இவர்கள ஐவரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இவர்களில் இருவரது எரிந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் உடுப்புகளைக் கொண்டு பின்னர் அடையாளம் காணப்பட்டனர்.[3]
இதே நாளில் இராணுவத்தினரின் இன்னும் ஒரு குழு செம்மலை என்ற தமிழ்க் கிராமம் ஒன்றுக்கு சென்றது. ஆனால், அவர்கள் அங்கு வரு முன்னரே கிராமத்தவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி முல்லைத்தீவுக்குச் சென்று விட்டனர்.[4]
நினைவுத்தூபி
தொகுபடுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக ஒதியமலைக் கிராமத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இராணுவத்தினர் இடித்து அழித்தனர்.[1] பின்னர் 2018 திசம்பர் 2 அன்று புதிய நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.[6]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை: 31 வது வருட நினைவு தினம் அனுஷ்டிப்பு". தினகரன். 4 திசம்பர் 2015. Archived from the original on 2018-11-30. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2018.
- ↑ "Othiyamalai massacre of 32 Tamils by Sri Lankan military remembered". Tamil Guardian. 3 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2018.
- ↑ 3.0 3.1 3.2 3.3 K T Rajasingham (16 மார்ச் 2002). "SRI LANKA: THE UNTOLD STORY Chapter 31". Asia Times. Archived from the original on 2006-06-15. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ 4.0 4.1 ரி. சபாரத்தினம் (28 மே 2008). "The ignored side of Balraj story". The Bottom Line. Archived from the original on 2008-07-05. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2018.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Janaka Perera, LankaNewspapers.com, 7 October 2008
- ↑ "ஒதியமலை படுகொலை: 34 ஆவது ஆண்டு நினைவு, நினைவுத்தூபி திறப்பு". வீரகேசரி (இதழ்). 2-12-2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help)