யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்

யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் அல்லது யாகாய் பாருசாவிச் சியால்டோவிச் ForMemRS[1] (பெலருசிய மொழி: Якаў Барысавіч Зяльдовіч, உருசியம்: Я́ков Бори́сович Зельдо́вич; (8 மார்ச் 1914 – 2 திசம்பர் 1987) ஒரு பெயர்பெற்ர சோவியத் ஒன்றிய இயற்பியலாளர். இவர் பைலொருசியாவில் பிறந்தவர். இவர் சோவியத் அணுக்கரு ஆயுத/படைக்கல திட்டத்தில் முதன்மையான பங்களிப்பு செய்தவர். இவர் பங்களித்த அறிவியல் புலங்களாவன: பரப்பீர்ப்பு, வினையூக்கவியல், அதிர்ச்சியலைகள், அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், வானியற்பியல், அண்ட இயற்பியல், பொதுச் சார்பியல் கோட்பாடு.

யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்
பிறப்பு8 மார்ச் 1914
மின்சுக், உருசியப் பேரரசு (அண்மைய பைலோருசு)
இறப்பு2 திசம்பர் 1987(1987-12-02) (அகவை 73)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் (அண்மைய உருசியா)
குடியுரிமைசோவியத் ஒன்றியம்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்வேதி இயற்பியல் நிறுவனம்
மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
சுட்டென்பர்கு வானியல் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்புனித பீட்டர்சுபர்கு அரசுப் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்உரோமன் யசுகீவிச்

Igor Dmitriyevich Novikov
Sergei Kopeikin
Sergei Shandarin

Alexei Starobinsky
அறியப்படுவதுசோவியத் அணுகுண்டுத் திட்டம்
செல்டோவிச் இயங்கமைப்பு
அணுக்கருத் தொடர்வினைகள் கோட்பாடு
வானியற்பியலும் அண்டவியலும்
விருதுகள்அக்டோபர் புரட்சிப் பட்டயம் (1962)
செம்பதாகைப் பட்டயங்கள்
டிராக் விருது (1985)

இளமையும் கல்வியும் தொகு

இவர் மின்சுக்கில்(இப்போது பைலோருசு) இருந்த ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார்.[2] இவர் பிறந்த நான்கு மாதங்களில் இவரது குடுமம்பம் புனித பீட்டர்சு பெர்கு நகருக்கு இடம்பெயர்ந்தது. இவர்கள் 1924 முதல் 1991 வரை இலெனின்கிராது எனப்பட்ட அங்கே 1941ஆகத்து வரை வாழ்ந்துவந்தனர். அப்போது செல்டோவிச் தான் பணிபுரிந்த நிறுவனத்தோடு கழானுக்கு காலிசெய்து, மாபெரும் நாட்டுப்பற்றுப் போரில் இருந்து தவிர்க்க கொண்டுசெல்லப்பட்டார். அவர்கள் 1943 கோடை வரை கழானில் வாழ்ந்தனர் பிறகு செல்டோவிச் மாஸ்கோவுக்கு நகர்ந்தார். இவர் யூதக் குடும்பத்தில் பிறந்திருந்தபோதும் பின்னர் இவர் இறைமறுப்பாளரானார்.[3][4]

செல்டோவிச் தனக்கு 17 அகவை முடிந்த 1931 மே மாதத்தில் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழகத்தின் இயல் வேதியியல் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளராகச் சேர்ந்தார். இவர் 1936 இல் தன் ஆய்வுரையை முடிக்கும் வரை அந்நிறுவனத்தில் இருந்தார். இவர் பலபடித்தான மேற்பரப்புகளில் பரப்பீர்ப்பும் வினையூக்கமும் எனு தலைப்பில் ஆய்வை முடித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார். இதன் மிகமுதன்மைப் பகுதியாக செவ்வியல் பரப்பீர்ப்பு(பிரீயுன்டிலிக் பரப்பீர்ப்பு) சமவெப்பநிலைக் கோடு ஆய்வு அமைந்தது. செல்டோவிச் இந்த ஆய்வு நோக்கீட்டுக்கான கோட்பாட்டு அடிப்படையை உருவாக்கினார். இவர் 1939 இல் இயற்பியலிலும் கணிதவியலிலும் முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றார். இதற்கான ஆய்வுத் தலைப்பு காலக(நைதர்சன்) ஆக்சைடாக்கமாகும். இவர் இயல் வேதியியலில் இந்த இயங்கமைப்பைக் கண்டுபிடித்தார். இது வெப்ப நைதரசன் ஆக்சைடு(NO) இயங்கமைப்பு அல்லது செல்டோவிச் இயங்கமைப்பு எனப்படுகிறது.

சோவியத் அணுக்கரு மின்திட்டங்கள் தொகு

இவர் 1937 முதல் 1948 வரை தீப்பற்றல், கனற்சி, எதிர்வெடிப்புக் கோட்பாட்டில் பணியாற்றினார். இவர் யூரி கார்த்தோனுடன் இணைந்து, 1939 முதல் 1940 வரை அணுக்கருத் தொடர்வினைகளில் முதன்மையான முடிவுகளை எட்டினார். இவர் 1943 இல் சோவியத் அணுகுண்டுச் செயல்திட்டத்தில் இகோர் குர்ச்சத்தோவ் உடனிணைந்து பங்களிக்கத் தொடங்கினார். இவரது அணுக்கருவாயுதப் பணி 1963 அக்தோபர் வரை தொடர்ந்தது.

துகள், அணுக்கரு இயற்பியல் புலங்களுக்கான பங்களிப்பு தொகு

இவர் 1952 முதல் அ௶இப்படைத் துகள்களிலும் அவற்றின் உருமாற்றங்களிலும் பணிபுரியத் தொடங்கினார்.ஐவர் பை மேசானின் பீட்ட அச் சிதைவை முன்கனித்தார். இவர் எசு. கெர்ழ்சுட்டைனுடன் இணைந்து மென் ஊடாட்டத்துக்கும் மின்கந்டூடாட்டங்களுக்கும் இடையிலான ஒப்புமையை கவனித்துள்ளார். இவர் 1960 இல் மூவான் வினையூக்கத்தை (மேலும் துல்லியமான மூவான் வினையூக்க dt-பிணைவு) நிகழ்வை முன்கணித்தார். இவர் 197ரில் பியோதோர் சாப்பிரோவுடன் இனைந்து குர்ச்சதோவ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளார். இது சோவியத் ஒன்றியத்திலேயே அணுக்கரு இயற்பியலில் மிக உயர்ந்த விருதாகும். விருது உரையில் " மீத்தண் நொதுமிகளின் இயல்புகளின் முன்கணிப்புக்கும் கண்டுபிடிப்புக்கும் அவற்றின் ஆய்வுக்கும் தரப்பட்டது" எனக் கூறப்பட்டுள்ளது. இவர் 1958 ஜூன் 20 இல் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்வ்க்கழக கல்வியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1965 முதல்1983 ஜனவரி வரை,சோவியத் ஒன்றிய அறிவியல் கல்வ்க்கழகத்தின் கெல்டிழ்சு பயன்முறைக் கணிதவியல் நிறுவனப் பிரிவின் தலைமையை வகித்தார்.

வானியற்பியல், அண்டவியல் ஆய்வுகள் தொகு

 
செல்டோவிச் (வலது) வானியற்பியலாளர் அயோசிப் சக்கலோவ்சுகியுடன், 1977

இவர் 1960 களின் தொடக்கத்தில் வானியற்பியலிலும் அண்டக் கட்டமைப்பியலிலும் பணிசெய்யத் தொடங்கினார். இவரும் டுவின் சால்பீட்டரும் 1964 இல் தனியாக சார்பின்றி, முதன்முதலில் பாரிய அருந்துளையைச்சுற்றியுள்ள அகந்திரள் வட்டுகள் தாம் குவேசார்கள் வெளியிடும் பேரளவு ஆற்றல் வெளியீட்டுக்குப் பொறுபாகும் என முன்மொழிந்தனர்.[5][6] இவர் 1965 இல் இருந்து, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துரையின் பேராசிரியாகவும் சுட்டென்பெர்கு வானியல் நிறுவனத்தின் சார்பியல் வானியற்பியலின் கோட்டத் தலைவராகவும் விளங்கினார்.

செல்டோவிச் வெம்புடவிக் கோட்பாட்டிலும் அண்ட நுண்ணலைப் பின்னணியின் இயல்புகளிலும் பேரியல் அண்டக் கட்டமைப்பிலும், கருந்துளைகள் கோட்பாட்டிலும் பணிபுரிந்தார். இவர் [[இரசீத் சூன்யயேவ்|இரசீத் சூன்யயேஉடன்னிணைந்து அண்ட நுன்னலைப் பின்னணி தலைக்கீழ் காம்ப்ட்டன் சிதறலுக்கு ஆட்படவேண்டும் என முன்மொழிந்தார். இது சூன்யயேவ்-செல்டோவிச் விளைவு எனப்படுகிறது. அத்காமா அண்டவியல் தொலைநோக்கியும் தென்முணைத் தொலைநோக்கியும் சேர எடுத்த அளவீடுகள் பால்வெளிக்கொத்து அண்டவியல் நோக்கீட்டு ஆய்கருவிகளாக அவற்றை நிறுவின. செல்டோவிச் பேரியல் அண்டக் கட்டமைப்பின் தன்மை பற்றிய கூர்மையான கண்னோட்டத்துக்குப் பங்களித்துள்ளார். குறிப்பாக,றீலாகுரேஞ்சிய சுற்றுலைவுக் கோட்பாட்டையும் ( செல்டோவிச் தோராயம்) the application of th ஒட்டுமைத் தோராயம் வழியிலான பர்கெரின் சமன்பாட்டு அணுகலையும் பயன்படுத்தி விளக்கியுள்ளார்.

கருந்துளை வெப்ப இயங்கியல் தொகு

செல்டோவிச் ஆக்கிங் கதிர்வீச்சுக் (கருந்துளை ஆவியாதல்) கண்டுபிடிப்பில் முதன்மையான பங்களிப்பு செய்துள்ளார். மாஸ்கோவுக்கு 1973 இல்சுட்ட்டீவன் ஆக்கிங் வந்திருந்தபோது சோவியத் அறிவியலாளர்காகிய செல்டோவிச்சும் அலெக்சி சுதாரோபின்சுகியும் அவருக்கு கவைய இயக்கவியல் உறுதியின்மை நெறிமுறைப்படி, சுழலும் கருந்துளைகள் துகளகலாஉ உருவாக்கி உமிழவேண்டும் என்பத்தைக் காட்டினர்.[7]

ஏற்பும் மதிப்புகளும் தொகு

இகோர் குர்ச்சதோவ் இவரை "பேரறிஞர்" என்றார். ஆந்திரேய் சக்காரொவ் " வனைத்துப் பொது அறிவியல் ஆர்வங்கள் கொண்டவர்" என்றார். சுட்டீவன் ஆக்கிங் ஒருதடவை செல்டோவிச்சிடம்: " உம்மைப் பார்ப்பதற்கு முன்பு, நிக்கோலசு பவிர்பாக்கி போல நீர் ஒரு குழு ஆசிரியர் என நம்பியிருந்தேன். " எனக் கூறியுள்ளார்.

தகைமைகளும் விருதுகளும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Vitaly Ginzburg (1994). "Yakov Borissovich Zel'dovich. 8 March 1914-2 December 1987". Biographical Memoirs of Fellows of the Royal Society 40: 430–426. doi:10.1098/rsbm.1994.0049. 
  2. "This day in Jewish history / A self-taught nuclear physicist is born". Haaretz. 8 March 2013. பார்க்கப்பட்ட நாள் 8 November 2013.
  3. Zel'dovich, Yakov Borisovich (2004). Sunyaev, R.A.. ed. Zeldovich: Reminiscences. CRC Press. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415287906. "I think that you know me well enough: I am an absolute atheist, and all days of the week are completely the same to me." 
  4. Andrei Sakharov: Facets of a Life. Atlantica Séguier Frontières. 1991. பக். 599. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9782863320969. "Speaking about religion, Yakov Borisovich could say unambiguously, "I'm an absolute atheist"." 
  5. Collin, Suzy (2006). "Quasars and Galactic Nuclei, a Half-Century Agitated Story". AIP Conf. Proc. 861: 587. doi:10.1063/1.2399629. 
  6. Zel'dovich, Ya.B. (1964). "The Fate of a Star and the Evolution of Gravitational Energy Upon Accretion". Sov. Phys. Dokl. 9: 195. Bibcode: 1964SPhD....9..195Z. 
  7. Hawking, Stephen (1988) A Brief History of Time, Bantam Books.

மேலும் படிக்க தொகு