துபாய்

ஐக்கிய அறபு அமீரகத்திலுள்ள ஒரு நகரம்

துபாய் அல்லது துபை (Dubai, அரபு மொழி: دبيّ‎, துபாய்ய்) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் சீர்படுத்துவதற்காகச் வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் அபுதாபி அமீரகத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது[4]. துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை மட்டுமே நடுவண் அரசின் முக்கிய தீர்மானங்களுக்கு எதிர்வாக்கு (வீட்டோ) அதிகாரம் கொண்டுள்ள அமீரகங்கள் ஆகும்[5].

துபாய்
إمارة دبيّ
துபாய் அமீரகம்
துபாய்-இன் கொடி
கொடி
Location of துபாய்
நாடுஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்துபாய்
நகரவாக்கம்9 ஜூன் 1833
விடுதலை2 டிசம்பர் 1971
(பிரித்தானியாவிடம் இருந்து)
தோற்றுவித்தவர்மக்தூம் இப்னு பதீ இப்னு சுகைல் (1833)
தொகுதிதுபை
துணைப் பிரிவுகள்
நகரங்களும் ஊர்களும்
  • ஜெபல் அலி
  • அட்டா
  • அல் உனைவா
  • அல் அவீர்
  • அல் அஜரெயின்
  • அல் லுசாயிலி
  • அல் மர்க்காப்
  • அல் பாக்
  • எயில்
  • அல் சுஃபாரி
  • உட் அல்-பைளா
  • அல் மலாய்கா
  • அல் மடம்
  • மார்கம்
  • உர்கூப் ஜுவைசா
  • அல் கீமா
அரசு
 • வகைஅரசியலமைப்பு முடியாட்சி[1]
 • மன்னர்முகமது பின் ராஷித் அல் மக்தூம்
 • முடிக்குரிய இளவரசர்ஹமதான் இப்னு முகமம்து இப்னு ராசித் அல்-மக்தூம்
பரப்பளவு
 • அமீரகம்4,114 km2 (1,588 sq mi)
மக்கள்தொகை
 (2008)[3]
 • அமீரகம்22,62,000
 • அடர்த்தி408.18/km2 (97/sq mi)
 • பெருநகர்
34,10,737
 • தேசியம் 
(2005)
17% அமீரகர்
9.1% அரபுக்கள்
42.3% இந்தியர்
13.3% பாக்கிஸ்தானியர்
7.5% வங்காளிகள்
2.5% பிலிப்பீனியர்
1.5% இலங்கையர்
0.9% ஐரோப்பியர்
0.3% அமெரிக்கர்
5.7% வேறு நாடுகள்
நேர வலயம்ஒசநே+4 (அமீரக நேரம்)
இணையதளம்துபை அமீரகம்
துபை மாநகராட்சி

துபாய் மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக் குளித்தல் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபி பகுதியிலிருந்து, "பனியாஸ்" என்னும் இனக்குழுவினர் அல்-மக்தூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

2012 ஆம் ஆண்டில், துபாய் உலகிலேயே மிக விலையுயர்ந்த 22 நகரமாகவும் மத்திய கிழக்கில் மிகவும் விலையுயர்ந்த நகரமாகவும் இருந்தது.[6][7] 2014 ஆம் ஆண்டில், ஜெனீவாவுக்குப் பிறகு, உலகின் மிக அதிக விலையுயர்ந்த ஹோட்டல் அறைகளாக துபாயின் ஹோட்டல் அறைகள் மதிப்பிடப்பட்டன.[8] அமெரிக்க உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெர்சர் மூலம் மத்திய கிழக்கில் வாழும் சிறந்த இடங்களில் துபாய் மதிப்பிடப்பட்டது.[9]

புவியியல்

தொகு

துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாரசீக வளைகுடா கரையோரத்தில் அமைந்துள்ளது மற்றும் இது கடல் மட்டத்திலிருந்து 16 மீற்றர் உயரத்தில் உள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,588 சதுர மைல் ஆகும். துபாய் நேரடியாக அரேபிய பாலைவனத்தில் உள்ளது. துபாயின் நிலப்பரப்பு, துபாய் வனப்பகுதிகளின் தெற்குப் பகுதியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வித்தியாசமாக உள்ளது, இது மணல் பாலைவகை வடிவங்களால் உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் க்வெவர் பாலைவனங்கள் நாட்டின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்துகின்றன.[10] இங்குள்ள மணல் நொறுங்கிய சிப்பிகள், பவளங்களைக் கொண்டுள்ளதுடன் வெள்ளை நிறத்தில் நல்ல நிலையில் காணப்படுகின்றது. நகரத்தைச் சுற்றியுள்ள மணல் பாலைவனமானது காட்டு புற்கள் மற்றும் அவ்வப்போது பேரீச்சை மரங்களையும் கொண்டுள்ளது.

மக்கட்தொகைப் பரம்பல்

தொகு

மக்கட்தொகையைப் பொறுத்தமட்டில் துபாய் மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே ஒரு தனித்தன்மை உடையதாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் வெளிநாட்டினராக உள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்திலும், அரசுப் பணிகளிலும் பிற நாட்டினர் நுழையப் பல தடைகள் உள்ளன. மேலும், இந்நாட்டின் குடிமகனாவதற்கு கடுமையான பல சட்ட திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இந்நாட்டு மக்கள் சிறுபான்மை இனமாகவே இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது.

துபாய் அமீரகத்தின் மக்கள்தொகை சுமார் 22 லட்சம் ஆகும்.

மதம்

தொகு

துபாய் மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இசுலாமிய மதத்தைப் பின்பற்றும் ஒரு நாடாகும்.

இந்நாட்டில் வாழும் வெளிநாட்டினர்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவற்றுள் இசுலாமியர், கிறித்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும், அங்கு வசிக்கும் மற்ற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக எல்லா மதத்தவர்களுக்கும் அவர் அவர் விருப்பபடி வணங்குவதற்கு கோயில், கிறித்தவக் கோவில்கள் மற்றும் சீக்கியக் கோயிலும் உள்ளது.

துபாய் பொருளாதாரம்

தொகு
 
துபையின் இரவுக் காட்சி

2008 தரவுகளின்படி துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்[11]. துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும். அபுதாபியை விட நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் பல மடங்கு சிறிய ஒரு அமீரகம் துபாய். துபாய் அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போதுமானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்பதை அந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்தே இருந்தது. இதன் காரணமாக, துபாய் அரசு எண்ணெய் சாரா பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக துபாய் கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக 2005-ல் வெளிநாட்டவர்கள் துபாயில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்தது வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணம் ஆகும்.

 
ஷேக் சயத் சாலை, துபாய்

துபாயின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, உருசியா, ஈரான், பாகித்தான் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாக அமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள்.

காலநிலை

தொகு

துபாய் வெப்ப பாலைவனக் காலநிலையைக் கொண்டது ஆகும். பொதுவாக ஆகஸ்ட் மாதமே அதிகூடிய வெப்பம் நிலவும் மாதம் ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Dubai
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 31.8
(89.2)
37.5
(99.5)
41.3
(106.3)
43.5
(110.3)
47.0
(116.6)
47.9
(118.2)
48.5
(119.3)
47.5
(117.5)
45.1
(113.2)
42.4
(108.3)
38
(100)
33.2
(91.8)
48.5
(119.3)
உயர் சராசரி °C (°F) 24.2
(75.6)
25.6
(78.1)
28.6
(83.5)
33.2
(91.8)
37.8
(100)
39.7
(103.5)
41.2
(106.2)
41.4
(106.5)
39.1
(102.4)
35.6
(96.1)
30.7
(87.3)
26.3
(79.3)
33.4
(92.1)
தினசரி சராசரி °C (°F) 19.3
(66.7)
20.6
(69.1)
23.2
(73.8)
27.2
(81)
31.4
(88.5)
33.6
(92.5)
35.7
(96.3)
36.0
(96.8)
33.4
(92.1)
30.0
(86)
25.4
(77.7)
21.3
(70.3)
28.09
(82.57)
தாழ் சராசரி °C (°F) 14.4
(57.9)
15.5
(59.9)
17.7
(63.9)
21.2
(70.2)
24.9
(76.8)
27.5
(81.5)
30.2
(86.4)
30.5
(86.9)
27.7
(81.9)
24.3
(75.7)
20.0
(68)
16.3
(61.3)
22.5
(72.5)
பதியப்பட்ட தாழ் °C (°F) 6.1
(43)
6.9
(44.4)
9.0
(48.2)
13.4
(56.1)
15.1
(59.2)
18.2
(64.8)
20.4
(68.7)
23.1
(73.6)
16.5
(61.7)
15.0
(59)
11.8
(53.2)
8.2
(46.8)
6.1
(43)
பொழிவு mm (inches) 18.8
(0.74)
25.0
(0.984)
22.1
(0.87)
7.2
(0.283)
0.4
(0.016)
0.0
(0)
0.8
(0.031)
0.0
(0)
0.0
(0)
1.1
(0.043)
2.7
(0.106)
16.2
(0.638)
94.3
(3.713)
ஈரப்பதம் 65 65 63 55 53 58 56 57 60 60 61 64 59.8
சராசரி பொழிவு நாட்கள் 5.4 4.7 5.8 2.6 0.3 0.0 0.5 0.5 0.1 0.2 1.3 3.8 25.2
சூரியஒளி நேரம் 254.2 229.6 254.2 294.0 344.1 342.0 322.4 316.2 309.0 303.8 285.0 254.2 3,508.7
Source #1: Dubai Meteorological Office[12]
Source #2: climatebase.ru (extremes, sun),[13] NOAA (humidity, 1974–1991)[14]
Climate data for Dubai
Month Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Year
Average sea temperature °C (°F) 23.4
(74.2)
21.9
(71.4)
23.2
(73.8)
25.5
(77.9)
28.8
(83.8)
31.6
(88.8)
32.7
(90.9)
33.5
(92.3)
33.1
(91.5)
31.3
(88.4)
28.6
(83.4)
25.4
(77.8)
28.3
(76.6)
Average Ultraviolet index 6 8 10 11+ 11+ 11+ 11+ 11+ 11 8 6 5 9.1
Source #1: seatemperature.org [15]
Source #2: Weather Atlas [16]


இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "UAE Constitution". Helplinelaw.com. பார்க்கப்பட்ட நாள் 21 July 2008.
  2. ஐக்கிய அரபு அமீரகத்தின் பரப்பளவு செயற்கைத் தீவுகளையும் உள்ளடக்கியது.
  3. "Dubai: Profile of geographical entity including name variants. World Gazetteer.
  4. "United Arab Emirates: metropolitan areas". World-gazetteer.com. Archived from the original on 2012-12-04. பார்க்கப்பட்ட நாள் 2010-07-01.
  5. The Government and Politics of the Middle East and North Africa. D Long, B Reich. p.157
  6. Lucy Barnard (6 March 2013). "Cost of living in Dubai rising rapidly – The National". Thenational.ae. Archived from the original on 22 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Oslo, Zürich and Tokyo are most expensive cities". Thepeninsulaqatar.com. 14 September 2012. Archived from the original on 27 February 2015. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
  8. "Dubai second-most expensive city to stay in, report says". பார்க்கப்பட்ட நாள் 30 September 2014.
  9. Gillian Duncan (8 March 2013). "Abu Dhabi and Dubai are best places to live in the Middle East, survey says – The National". Thenational.ae. Archived from the original on 17 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Environmental Development and Protection in the UAE பரணிடப்பட்டது 2016-12-20 at the வந்தவழி இயந்திரம். Aspinall, Simon
  11. ""Gross Domestic Product (GDP) of the Emirate of Dubai 2006–2008"". Dubai Statistics Centre. Archived from the original on 2010-05-20. பார்க்கப்பட்ட நாள் 2010-07-01.
  12. "Climate (Average Temperatures:1977–2015;Precipitation:1967-2009)". Dubai Meteorological Office. Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2008.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  13. "Dubai, Emirates". Climatebase.ru. பார்க்கப்பட்ட நாள் 10 February 2013.
  14. "Climate Normals for Dubai". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 10 February 2013.
  15. "Monthly Dubai water temperature chart". Seatemperatures.org. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014.
  16. "Dubai, United Arab Emirates - Climate data". Weather Atlas. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துபாய்&oldid=3632608" இலிருந்து மீள்விக்கப்பட்டது