கல்ப் நியூஸ்

கல்ப் நியூஸ் (en:Gulf News தமிழில் - வளைகுடா செய்தி) ஐக்கிய அரபு எமிரேட்ஸின்,துபாயிலிருந்து 1978 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் ஒரு ஆங்கில தினசரி செய்தித்தாள். தற்போது ஐக்கிய அரபு எமிரேட் முழுவதும் மற்றும் பிற பாரசீக வளைகுடா நாடுகளிலும் விநியோகிக்கப்படுகிறது. இதன் இணையதள பதிப்பு 1996 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.

வரலாறு தொகு

கல்ப் நியூஸ் 30 செப்டம்பர் - 1978 ஆண்டில் அமீரக தொழிலதிபர் அப்துல் வஹாப் கலாதாரியால் சிறுபத்திரிகை வடிவத்தில் துவங்கப்பட்டது. இதன் அலுவலகம் துபாய் விமான நிலைய சாலையில் அப்பொழுது அமைந்திருந்தது. [1][2]

நவம்பர் 1984 இல், அமீரகத்தின் மூன்று தொழிலதிபர்கள், இந்நிறுவனத்தினை வாங்கி அல் நிஸ்ர் என்ற பதிப்பகத்தை உருவாக்கினர். நாளிதழின் புதிய உரிமையாளர்கள் ஒபைத் ஹுமைத் அல் தாயிர், அப்துல்லா அல் ரோஸ்தாமணி மற்றும் ஜுமா அல் மஜித். புதிய உரிமையாளர்களின் கீழ், கல்ப் நியூஸ் (வளைகுடா செய்திகள்) 10 டிசம்பர் 1985 இல் மீண்டும் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. பிப்ரவரி 1986 முதல் ஒரு திர்ஹத்திற்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பிற நாடுகளில் தொகு

1986 இல் புதிய வளாகத்திற்குச் சென்ற பிறகு, செய்தித்தாள்களை பிற வளைகுடா நாடுகளுக்கு விநியோகிக்கத் தொடங்கின: செப்டம்பர் 1987 முதல் பகுரைனிலும், ஏப்ரல் 1989 முதல் ஓமனிலும், மார்ச் 1989 முதல் சவுதி அரேபியாவிலும், ஏப்ரல் 1989 முதல் [[கத்தார்|கத்தாரிலும், ஆகஸ்ட் 1988 முதல் பாகிஸ்தானிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. அதன் வாசகர்களுக்கு சிறந்த உள்ளூர் கவரேஜ் வழங்குவதற்காக, வளைகுடா செய்தி பல்வேறு பணியகங்களைத் திறந்தது: அபுதாபி பணியகம் 1982 இல் திறக்கப்பட்டது; ஜனவரி 1988 இல் பகுரைன் பணியகம், 1989 இல் ஓமன் பணியகம், ஆகஸ்ட் 1990 இல் மணிலா பணியகம், 1994 இல் அல் ஐன் பணியகம், மே 1995 இல் சார்ஜா அமீரகம் பணியகம் நவம்பர் 1995 இல்புதுடெல்லி பணியகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "The History of Gulf News". gulfnews.com. Archived from the original on 2015-05-11. பார்க்கப்பட்ட நாள் 2019-07-24.
  2. "Gulf News prepares to mark four decades as a regional media leader". Gulf News. Dubai: Al Nisr Publishing. 8 September 2018. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்ப்_நியூஸ்&oldid=3251640" இலிருந்து மீள்விக்கப்பட்டது