மணிலா ( Manila ) , பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமும் , கியூசான் நகரத்திற்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது பிலிப்பீன்சு தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவான லூசான் தீவில் அமைந்துள்ளது. மேலும் மணிலா அந்நாட்டின் தேசியத் தலைநகரப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ மணிலா ஒருங்கிணைந்த நகரப் பகுதியில் அங்கம் வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் .

மணிலா நகரம்
Lungsod ng Maynila or Siyudad ng Maynila
மணிலா விரிகுடா
மணிலா விரிகுடா
அலுவல் சின்னம் மணிலா நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): "Perla del Oriente (கிழக்கின் வைரம்)", "அன்பு நகரம்", "விரிகுடாவின் நகரம்"
குறிக்கோளுரை: லினிசின், இகரங்கல் அங் மனிலா
நாடுபிலிப்பீன்ஸ்
பகுதிதேசிய தலைநகரப் பகுதி
மாவட்டங்கள்1வது முதல் 6வது வரை மணிலாவின் மாவட்டங்கள்
பரங்கெய்ஸ்897
தோற்றம்ஜூன் 10, 1574
அரசு
 • மாநகராட்சித் தலைவர்அல்ஃபிரெடோ லிம் (2007-2010; GO)
 • அநுசாரி மாநகராட்சித் தலைவர்இச்கோ மொரேனோ (AM/PDP-லபன்/GO)
பரப்பளவு
 • மொத்தம்38.55 km2 (14.88 sq mi)
ஏற்றம்
16.0 m (52.5 ft)
மக்கள்தொகை
 (2000)
 • மொத்தம்15,81,082
 • அடர்த்தி41,014/km2 (1,06,230/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (PST)
Zip code
0900 to 1096
இடக் குறியீடு2
இணையதளம்www.manilacityph.com
மணிலா மெட்ரோ - தேசிய தலைநகரப் பகுதி

அமைவிடம்

தொகு

மணிலா நகரம், மணிலா வளைகுடாவிற்குக் கிழக்கே உள்ளது. நாட்டின் மிகப்பெரிய நகரமான கியூசான், மணிலா நகருக்கு வடகிழக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை

தொகு

2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மணிலா நகரில் 16,52,171 மக்கள் அதன் சிறிய 38.55 சதுர கி.மீ பரப்பளவில் வசிக்கின்றனர். எனவே, மணிலா உலகில் மக்களடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்றாகும்.

உள்ளாட்சி அமைப்புகள்

தொகு

மணிலா நகரம் ஆறு சட்டமன்ற மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சட்டமன்ற மாவட்டங்கள், 16 நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பின்வருமாறு:

  1. பிநோன்டோ
  2. எம்ரிடா
  3. இன்ற்றமுரோஸ்
  4. மலடே
  5. பாகோ
  6. பண்டக்கன்
  7. துறைமுகப் பகுதி
  8. குயப்போ
  9. சம்பளக்
  10. சான் அன்றேசு
  11. சான் மிகுவேல்
  12. சான் நிகோழசு
  13. சாண்டா ஆனா
  14. சாண்டா கிரசு
  15. சந்தா மேசா
  16. தொண்டோ ஆகியன ஆகும்.

காலநிலை

தொகு

மணிலா நகரம், வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் வெப்பமான சீதோசனநிலையே காணப்படுகிறது . ஈரப்பதமும் ஆண்டு முழுமைக்கும் உள்ளது. வெப்பநிலை பொதுவாக 20°C க்கு குறையாமலும் 40°Cக்கு மிகாமலும் உள்ளது. மேலும் வெப்பநிலை 45°C யைத் தாண்டவும் வாய்ப்புள்ளதாகக் கடந்தக் கால வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மழைப்பொழிவும் ஆண்டிற்கு சராசரியாக 104 நாட்கள் உள்ளது. அதிகபட்சமாக 190 நாட்கள் உள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், மணிலா,பிலிப்பீன்சு(1971-2000)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.5
(85.1)
30.5
(86.9)
32.1
(89.8)
33.5
(92.3)
33.2
(91.8)
32.2
(90)
31.1
(88)
30.6
(87.1)
30.9
(87.6)
30.9
(87.6)
30.7
(87.3)
29.7
(85.5)
31.24
(88.24)
தினசரி சராசரி °C (°F) 26.5
(79.7)
27.2
(81)
28.5
(83.3)
29.9
(85.8)
30.0
(86)
29.2
(84.6)
28.5
(83.3)
28.1
(82.6)
28.2
(82.8)
28.2
(82.8)
27.1
(80.8)
26.2
(79.2)
28.13
(82.64)
தாழ் சராசரி °C (°F) 18.5
(65.3)
20.8
(69.4)
25.9
(78.6)
26.2
(79.2)
26.7
(80.1)
26.2
(79.2)
25.8
(78.4)
25.5
(77.9)
25.5
(77.9)
25.5
(77.9)
24.9
(76.8)
23.9
(75)
24.62
(76.31)
பொழிவு mm (inches) 19.0
(0.748)
7.9
(0.311)
11.1
(0.437)
21.4
(0.843)
165.2
(6.504)
265.0
(10.433)
419.6
(16.52)
486.1
(19.138)
330.3
(13.004)
270.9
(10.665)
129.3
(5.091)
75.4
(2.969)
2,201.2
(86.661)
சராசரி மழை நாட்கள் 1 1 1 1 7 14 16 19 17 13 9 5 104
சூரியஒளி நேரம் 186.0 197.8 217.0 270.0 217.0 150.0 124.0 124.0 120.0 155.0 150.0 155.0 2,065.8
Source #1: World Meteorological Organization[1]
Source #2: Hong Kong Observatory,[2] BBC Weather (sunshine data)[3]

மக்களடர்த்தி

தொகு

மணிலா உலகின் மக்களடர்த்தி மிகுந்த பெருநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். ஒரு சதுர கி.மீ பரப்பளவிற்கு ஏறத்தாழ 43,709 மக்கள் வசிக்கிறார்கள். மேலும் ஆறு மாவட்டங்களில், ஆறாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 68,266 பேர் வசிக்கிறார்கள். அடித்தபடியாக முதலாம் மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 64,936 பேரும், இரண்டாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 64,710 பேரும் உள்ளனர். கடைசியாக, ஐந்தாம் மாவட்டத்தில் மிகவும் குறைவாக ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 19,235 பேர் வசிக்கிறார்கள். உலக அளவில் மணிலாவிற்கு அடுத்தபடியாக இந்திய நாட்டிலுள்ள, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரும், பிரித்தனியயிந்தியாவின் முன்னால் தலைநகருமான கல்கத்தா மாநகரம் ஒரு சதுர கி.மீக்கு 27,774 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மொழி

தொகு

பிலிப்பீன்சு நாட்டின் உள் நாட்டு மொழி பிலிப்பினோ என்பதாகும். ஆயினும் ஆங்கிலமே பெரும்பாலும் அலுவல், தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

நிர்வாக மாவட்டங்கள்

தொகு

மணிலாவில் 16 நிர்வாக மாவட்டங்களை உள்ளது. அவை பருங்காய் எனப்படும் குறும்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றிக்குப் பெயர் எதுவும் கிடையாது. நிர்வாக வசதிக்காக அவை எண்களால் குறிக்கப்படும் . நிர்வாக மாவட்டங்களிலுள்ள பருங்காய்கள், அவற்றின் மக்கள் தொகை, பரப்பளவு ஆகியவை கீழே,

மாவட்டங்கள் பருங்காய்கள் மக்கள்தொகை
(2010 கணக்கெடுப்பு )
பரப்பளவு
(has.)
மக்கள்ளடர்த்தி
(ஒரு சதுர கி.மீ க்கு 2)
பிநோன்டோ 10 12,985 66.11 19,641.5
எம்ரிடா 13 7,143 158.91 4,495.0
இன்ற்றமுரோஸ் 5 4,925 67.26 7,322.3
மலடே 57 77,513 259.58 29,860.9
பாகோ 43 70,978 278.69 25,468.4
பண்டக்கன் 38 73,895 166.00 44,515.1
துறைமுகப் பகுதி 5 57,405 315.28 18,207.6
குயப்போ 16 24,886 84.69 29,384.8
சம்பளக் 192 241,528 513.71 47,016.4
சான் அன்றேசு 65 115,942 168.02 69,004.9
சான் மிகுவேல் 12 15,992 91.37 17,502.5
சான் நிகோழசு 15 44,241 163.85 27,000.9
சாண்டா ஆனா 34 60,952 169.42 35,976.9
சாண்டா கிரசு 82 115,747 309.01 37,457.4
சந்தா மேசா 51 99,933 261.01 38,287.0
தொண்டோ 259 628,106 865.13 72,602.5

சட்டமன்ற மாவட்டங்கள்

தொகு
  • முதல் மாவட்டம் :தொண்டோ (ஒரு பகுதி) , துறைமுகப் பகுதி(வடக்கு)
  • இரண்டாம் மாவட்டம்:தொண்டோவின் ககலங்கின் பகுதி.
  • மூன்றாம் பகுதி:பிநோன்டோ,குயப்போ ,சான் நிகோழசு,சாண்டா கிரசு
  • நான்காவது மாவட்டம்:சம்பளக்
  • ஐந்தாவது மாவட்டம்: எம்ரிடா , மலடே , இன்ற்றமுரோஸ் , ஏனைய துறைமுகப் பகுதி
  • ஆறாவது மாவட்டம்:பாகோ,பண்டக்கன்,சான் மிகுவேல்,சாண்டா ஆனா ,சந்தா மேசா ஆகியற்றை உள்ளடக்கும்.

மணிலா நகரின் உலகளாவிய சகோதர நகரங்களாவன

தொகு
  • அக்காபுல்கோ ,மெச்சிகோ
  • அசுடானா , கசகசுத்தான் (தமிழ்ப்படுத்தி கழகசுத்தான் என்று சிலர் எழுதுகிறார்கள் ..அனால் கழகசுத்தானம் நமது தமிழகத்தை குறிக்கும் சொல்லாகும்)
  • பாங்காக்,தாய்லாந்து
  • பெய்சிங் , சீனா
  • சகார்த்தா, இடாய்ச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
  • புது தில்லி,இந்தியா

நட்பு நகரங்கள்

தொகு

பூசன்,தென்கொரியா சாங்காய் , சீனம், சி'அன் , சீனா .

மேற்கோள்கள்

தொகு
  1. "World Weather Information Service - Manila". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் January 13, 2013.
  2. "Climatological Information for Manila, Philippines". Hong Kong Observatory. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Average Conditions - Manila". BBC. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிலா&oldid=3566335" இலிருந்து மீள்விக்கப்பட்டது