ஓமான்
(ஓமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓமான் அல்லது ஒமான் சுல்தானகம் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ளது. வடமேற்கில் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழகேயும் அரபிக் கடல் அமைந்துள்ளது வடகிழக்கில் ஓமான் குடா அமைந்துள்ளது. ஓமான் தனது பெருநிலப்பரப்புக்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநிலப்பரப்புடன் தொடர்ச்சியற்ற ஒரு சிறிய பிரதேசத்தையும் கொண்டுள்ளது.[1]இதன் தலைநகரம் மஸ்கட் ஆகும்.
ஓமான் சுல்த்தானகம் سلطنة عُمان சுல்தானட் உமன் |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: none | ||||||
நாட்டுப்பண்: கடவுளே எம் மன்னரை இரட்சியும் | ||||||
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | மஸ்கட் | |||||
ஆட்சி மொழி(கள்) | அரபு மொழி | |||||
அரசாங்கம் | முடியாட்சி | |||||
• | சுல்த்தான் | கபூஸ் பின் சயிட் அல் சயிட் | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 3,09,500 கிமீ2 (70வது) 1,19,498 சதுர மைல் |
||||
• | நீர் (%) | negligible | ||||
மக்கள் தொகை | ||||||
• | யூலை 2005 கணக்கெடுப்பு | 2,567,0001 (140வது) | ||||
மொ.உ.உ (கொஆச) | 2005 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $40.923 பில்லியன் (85வது) | ||||
• | தலைவிகிதம் | $16,862 (41வது) | ||||
மமேசு (2003) | 0.781 உயர் · 71வது |
|||||
நாணயம் | ஓமானி ரியால் (OMR) | |||||
நேர வலயம் | (ஒ.அ.நே+4) | |||||
• | கோடை (ப.சே) | (ஒ.அ.நே+4) | ||||
அழைப்புக்குறி | 968 | |||||
இணையக் குறி | .om | |||||
1மக்கட்தொகை மதிப்பீட்டில் 577,293 வெளிநாட்டவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். |
ஓமனின் சிறப்புகள்தொகு
- ஓமன் நாட்டின் பாஹ்லா என்ற நகரம் மண் பாண்டங்களுக்குப் புகழ் பெற்றது.
- ஓமனை ஆளும் சுல்தான், மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்பவராக இருக்கிறார். 1970 சூலை 23 அன்று தொடங்கிய ஆட்சி தற்போதும் தொடர்கிறது.
- இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதி மீன்கள், பேரீச்சம்பழங்கள் மற்றும் உலோகங்கள்.
- தலைசிறந்த கப்பல் கட்டுமான நிபுணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
- இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஓமனில் அதிகமாக வாழ்கின்றனர்.
- ஓமன் நாட்டில் வருமானவரி வசூலிக்கப்படுவதில்லை.