முதன்மை பட்டியைத் திறக்கவும்
அரபிக்கடல்

அரபிக்கடல் இந்தியப் பெருங்கடலின் இந்தியாவின் தெற்கு திசையில் அமையப்பெற்றிருக்கும் கடலாகும். இது அரேபிய தீபகற்பத்திற்கும், இந்திய துணைக்கண்டத்திற்கும் இடையில் உள்ளது. அரபிக்கடலின் அதிகபட்ச அகலம் சுமார் 2400 கிலோமீட்டரும், அதிகபட்ச ஆழம் 4652 மீட்டரும் ஆகும். இந்த கடலில் கலக்கும் நதிகளில் சிந்து நதி குறிப்பிடத்தக்கது. அரபிக்கடலோரத்தில் உள்ள நாடுகள் இந்தியா, ஈரான், ஓமன், பாகிஸ்தான், யேமன், ஐக்கிய அரபு அமீரகம், சோமாலியா, மாலத்தீவுகள் மேற்கு கரையோர இலங்கை ஆகியவை. அரபிக்கடலோரத்தில் அமைந்த முக்கிய நகரங்கள் மும்பை, கராச்சி ஆகியவை.[1]

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபிக்கடல்&oldid=1924708" இருந்து மீள்விக்கப்பட்டது