ஆலப்புழா
ஆலப்புழா (ஆங்கிலம்:Alappuzha), (
மலையாளம்: ആലപ്പുഴ) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். இந்நகரம் ஒரு நகராட்சியாகவும் உள்ளது. ஆலப்புழா இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும். கயிறு தயாரிப்பதே இந்நகரின் பிரதான தொழிலாகும்.
ஆலப்புழா | |||||||
"கிழக்கு வெனிஸ்" | |||||||
— நகராட்சி மற்றும் நகரம் — | |||||||
அமைவிடம் | 9°29′N 76°20′E / 9.49°N 76.33°E | ||||||
நாடு | ![]() | ||||||
பகுதி | மத்திய திருவிதாங்கூர் | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | ஆலப்புழா மாவட்டம் | ||||||
ஆளுநர் | ப. சதாசிவம், ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பினராயி விஜயன்[2] | ||||||
நகராட்சித் தலைவர் | திருமதி. மெர்சி டீச்சர் | ||||||
மக்களவைத் தொகுதி | ஆலப்புழா | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
21,05,349 (2001[update]) • 1,492/km2 (3,864/sq mi) | ||||||
பாலின விகிதம் | 1079 ♂/♀ | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 1,414 சதுர கிலோமீட்டர்கள் (546 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.alappuzha.nic.in |
போக்குவரத்து தொகு
கொச்சி வானூர்தி நிலையம் அருகில் உள்ள வானூர்தி நிலையமாகும். திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தொடர்வண்டி நிலையமும் உள்ளது. பெங்களூர், சென்னை, கோழிக்கோடு, அமிர்தசரசு, ஆகிய நகரங்களிலிருந்து தொடர்வண்டிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 47, இந்நகரை, எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது.
மொழிகள் தொகு
இந்நகரில் மலையாளமே பிரதான மொழியாகும். இங்கு பேசப்படும் வட்டார வழக்கு திருவாங்கூர் வழக்கு ஆகும். இருப்பினும், கொங்கணி பேசுவோரும், தமிழ் பேசுவோரும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர்.
மக்கள் வகைப்பாடு தொகு
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 177,079 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆனோர் ஆண்களும் 52% ஆனோர் பெண்களும் ஆவர். ஆலப்புழா மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. ஆலப்புழா மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.
குறிப்புகள் தொகு
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு". http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: அக்டோபர் 19, 2006.