பிணறாயி விஜயன்

இந்திய அரசியல்வாதியும் தற்போதைய கேரள முதல்வரும்

பிணறாயி விஜயன் (Pinarayi Vijayan, மலையாளம்: പിണറായി വിജയൻ, பிறப்பு: 24 மே 1944) இந்திய அரசியல்வாதியும், கேரள மாநிலத்தின் முதலமைச்சரும் ஆவார்.[1][2] இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினராகவும் உள்ளார்.

பிணறாயி விஜயன்
Pinarayi Vijayan
പിണറായി വിജയൻ
12வது கேரள முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 மே 2016
ஆளுநர்ப. சதாசிவம்
முன்னையவர்உம்மன் சாண்டி
தொகுதிதர்மடம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆட்சிக்குழு உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மார்ச் 2002
மின்துறை அமைச்சர், கேரளம்
பதவியில்
1996–1998
முன்னையவர்ஜி. கார்த்திகேயன்
பின்னவர்எஸ். சர்மா
கூட்டுறவுத்துறை அமைச்சர், கேரளம்
பதவியில்
1996–1998
முன்னையவர்எம். வி. இராகவன்
பின்னவர்எஸ். சர்மா
செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கேரள மாநிலக்குழு
பதவியில்
25 செப்டம்பர் 1998 – 23 பெப்ரவரி 2015
முன்னையவர்சடயன் கோவிந்தன்
பின்னவர்கொடியேரி பாலகிருஷ்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 மே 1944 (1944-05-24) (அகவை 80)
பிணறாயி, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்கமலா
பிள்ளைகள்விவேக் கிரன்
வீணா
வாழிடம்(s)பிணறாயி, கேரளம்
முன்னாள் கல்லூரிபிரென்னன் அரசுக் கல்லூரி, தலச்சேரி

ஆரம்ப வாழ்‌க்கை

தொகு

1944 ஆம் ஆண்டு‍ மார்‌ச் இருபத்தொன்றாம் நாளில் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பிணறாயி என்ற கிராமத்தில் பிறந்தவர்.[3]

அரசியல் வாழ்‌க்கை

தொகு

இவர் 1964 இல் மாணவர் சங்கத்திலிருந்து‍ கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். இவர் கேரள மாணவர் சங்கத்தின் (KSF) மாநிலத் தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தவர். அவர் கேரள வாலிபர் சங்கத்திலும் (KSYF) மாநிலத் தலைவராக இருந்தார். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 இல் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் 1977, 1991 மற்றும் 1996 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இ. கே. நாயனார் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் கூட்டுறவுத் துறைகளில் அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். 1998 இல் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொறுப்புகளில்

தொகு
  • செயலாளர் மற்றும் தலைவர் -கேரள மாணவர் சங்கம்
  • தலைவர் -கேரள வாலிபர் சங்கம்
  • தலைவர் -கேரள கூட்டுறவு வங்கி
  • கேரள சட்டமன்ற உறுப்பினராக 1970, 1977, 1991 மற்றும் 1996.
  • கேரள மாநில அரசின் மின்சாரத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் 1996 - 1998.
  • இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு‍ செயலாளர் 1998.
  • இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினர் 2002 முதல்.

கட்சியிலிருந்து‍ ஒழுங்கு‍ நடவடிக்கை

தொகு

2007 மே 26 இல் பிணறாயி விஜயன், வி. எஸ். அச்சுதானந்தன் ஆகிய இருவரும் அரசியல் தலைமைக்குழுவிலிருந்து‍ இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருவரும் கட்சியின் வரைமுறைகளை மீறி விமர்சித்துக் கொண்டதால் இடைநீக்கம் செய்ய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு‍ ஒப்புதல் அளித்தது. பின்னர் பிணறாயி விஜயன் மீண்டும் அரசியல் தலைமைக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[4]

லாவ்லின் ஊழல் வழக்கு‍

தொகு

1998 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில் மின்துறை அமைச்சராக பிணறாயி விஜயன் இருந்தார். அப்போது, 3 நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்க கனடா நாட்டைச் சேர்ந்த எஸ். என். சி. லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ. 374.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தப்படி மலபார் புற்றுநோய் மையத்துக்கு ரூ. 92.3 கோடியை அளிக்கவில்லை என்பதையும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.[5]

லாவ்லின் ஊழல் வழக்கிலிருந்து‍ விடுதலை

தொகு

லாவ்லின் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டு, ஓராண்டு ஆகியும், மத்திய புலனாய்வுத்துறைத் தரப்பில் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, ஆர். ரகு தலைமையிலான சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் பிணறாயி விஜயன் மற்றும் ஐந்து பேரை வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாகத் தீர்ப்பளித்தது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Know the Chief Minister Pinarayi Vijayan". Kerala CM. 8 May 2020. Archived from the original on 1 டிசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 8 May 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Pinarayi Vijayan to be sworn-in as Kerala chief minister on May 25". http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pinarayi-vijayan-to-be-sworn-in-as-kerala-chief-minister-on-may-25/articleshow/52371911.cms. 
  3. "CPI(M) cadres happy with Pinarayi's re-election". Chennai, India: The Hindu. 24 February 2005 இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104095302/http://www.hindu.com/2005/02/24/stories/2005022405010300.htm. 
  4. "Achuthanandan, Pinarayi Vijayan suspended". Chennai, India: The Hindu. 27 May 2007 இம் மூலத்தில் இருந்து 28 மே 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070528075400/http://www.hindu.com/2007/05/27/stories/2007052706140100.htm. 
  5. "லாவ்லின் ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு: பிணறாயி விஜயன் மகிழ்ச்சி". தி தமிழ் இந்து‍. நவம்பர் 6, 2013. Archived from the original on டிசம்பர் 21, 2013. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 21, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "லாவ்லின் ஊழல் வழக்கிலிருந்து பினராயி விஜயன் விடுவிப்பு". தினமலர். நவம்பர் 5, 2013. Archived from the original on 2013-11-07. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 21, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணறாயி_விஜயன்&oldid=3990593" இலிருந்து மீள்விக்கப்பட்டது