உம்மன் சாண்டி
உம்மன் சாண்டி (Oommen Chandy, மலையாளம்: ഉമ്മന് ചാണ്ടി, 31 அக்டோபர் 1943 – 18 சூலை 2023) இந்திய அரசியல்வாதியும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் 2004 முதல் 2006 வரையும் பின்னர் 2011 முதல் 2016 வரையும் முதலமைச்சராகப் பணியாற்றினார்.[1] 2006 முதல் 2011 வரை கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.[2] இவர் 1970 முதல் 2023 இல் இறக்கும் வரை புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக மிக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் இவர் ஒருவரே ஆவார், அத்துடன் இந்திய மாநில சட்டமன்ற வரலாற்றில் மிக நீண்டகாலம் பதவியில் இருந்தவரும் இவரே ஆவார். ஐக்கிய நாடுகள் அவையினால் பொது சேவைக்காக விருது வழங்கப்பட்ட ஒரேயொரு இந்திய முதலமைச்சரும் இவராவார்.[3]
உம்மன் சாண்டி Oommen Chandy | |
---|---|
கேரளத்தின் 10-ஆவது முதலமைச்சர் | |
பதவியில் 18 மே 2011 – 20 மே 2016 | |
ஆளுநர் | |
முன்னையவர் | வி. எஸ். அச்சுதானந்தன் |
பின்னவர் | பிணறாயி விஜயன் |
பதவியில் 31 ஆகத்து 2004 – 12 மே 2006 | |
ஆளுநர் | ஆர். எல். பாட்டியா |
முன்னையவர் | அ. கு. ஆன்டனி |
பின்னவர் | வி. எஸ். அச்சுதானந்தன் |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1970–2023 | |
முன்னையவர் | ஈ. எம். சியார்ச் |
தொகுதி | புதுப்பள்ளி |
உட்துறை அமைச்சர், கேரள அரசு | |
பதவியில் 18 மே 2011 – 13 ஏப்ரல் 2012 | |
முதலமைச்சர் | இவரே |
முன்னையவர் | கோடியேரி பாலகிருஷ்ணன் |
பின்னவர் | திருவாங்கூர் இராதாகிருஷ்ணன் |
பதவியில் 31 ஆகத்து 2004 – 12 மே 2006 | |
முதலமைச்சர் | இவரே |
முன்னையவர் | அ. கு. ஆன்டனி |
பின்னவர் | கோடியேரி பாலகிருஷ்ணன் |
பதவியில் 28 திசம்பர் 1981 – 17 மார்ச்சு 1982 | |
முதலமைச்சர் | கே. கருணாகரன் |
முன்னையவர் | டி. கே. இராமகிருஷ்ணன் |
பின்னவர் | வயலார் ரவி |
நிதி அமைச்சர், கேரள அரசு | |
பதவியில் 10 நவம்பர் 2015 – 20 மே 2016 | |
முதலமைச்சர் | இவரே |
முன்னையவர் | க. மா. மாணி |
பின்னவர் | டி. எம். தாமஸ் ஐசக் |
பதவியில் 2 சூலை 1991 – 22 சூன் 1994 | |
முதலமைச்சர் | கே. கருணாகரன் |
முன்னையவர் | வி. விஸ்வநாத மேனன் |
பின்னவர் | சி. வி. பதமராஜன் |
எதிர்க்கட்சித் தலைவர், கேரள சட்டமன்றம் | |
பதவியில் 18 மே 2006 – 14 மே 2011 | |
ஆளுநர் | |
முன்னையவர் | வி. எஸ். அச்சுதானந்தன் |
பின்னவர் | வி. எஸ். அச்சுதானந்தன் |
ஆந்திரப் பிரதேசம், இந்திய தேசிய காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 6 சூன் 2018 – 18 சூலை 2023 | |
குடியரசுத் தலைவர் |
|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புதுப்பள்ளி, திருவிதாங்கூர், இந்தியா (இன்றைய கோட்டயம், கேரளம்) | 31 அக்டோபர் 1943
இறப்பு | 18 சூலை 2023 பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 79)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மாரியம்மா உம்மன் |
பிள்ளைகள் | 3 |
வாழிடம்s |
|
முன்னாள் கல்லூரி |
|
இணையத்தளம் | www |
2018 சூன் 6 இல், காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான அனைத்திந்திய காங்கிரசுக் குழுவின் பொதுச் செயலாளராக இவரை நியமித்தார். இவரது கடைசிக் காலத்தில் காங்கிரசு காரியக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ தினமணி செய்தி
- ↑ Krishnan, Anantha. "Kerala assembly elections 2011: UDF wins by narrow margin". The Times of India. http://timesofindia.indiatimes.com/assembly-elections-2011/kerala/Kerala-assembly-elections-2011-UDF-wins-by-narrow-margin/articleshow/8288245.cms.
- ↑ "തലസ്ഥാനത്തെ ഏറ്റവും കൂടുതല് പരിഗണിച്ച മുഖ്യമന്ത്രിയാര് ? കണക്കുകള് പറയുന്നു അത് ഉമ്മന്ചാണ്ടി". www.kaumudiplus.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-06.
- Chief Ministers, Ministers, and Leaders of Opposition of Kerala (PDF), திருவனந்தபுரம்: Secratriat of Kerala Legislature, 2018