நிகில் குமார்

இந்திய அரசியல்வாதி

நிகில் குமார் (Nikhil Kumar) (பிறப்பு ஜூலை 1941 15) இந்தியக் காவல் பணி அதிகாரியும், இந்திய அரசியல்வாதியுமாவார். இவர் 2009 முதல் 2013 வரை நாகாலாந்தின் ஆளுநராகவும், [4] 2013 முதல் 2014 வரை கேரள ஆளுநராகவும் இருந்தார். ஒரு நன்கு அறியப்பட்ட[5] 1963 தொகுதி இந்திய காவல் பணி அதிகாரிகளில் ஒருவரான இவர் நாட்டின் அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிசோரம், ஒன்றிய பிரதேசத்தின் இந்திய நிர்வாகச் சேவையில் பணியாற்றினார். மேலும், இவர் தேசிய பாதுகாப்புப் படை, இந்திய - திபெத் எல்லைக் காவல்படை, இரயில்வே பாதுகாப்புப் படை, ஆகியவற்றின் தலைமை இயக்குநராகவும் தில்லி காவல் ஆணையராகவும் பணியாற்றினார். இவர் 2004 முதல் 2009 வரை இந்தியாவின் பீகாரிலுள்ள அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் [[பதினான்காவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[6]

நிகில் குமார்
19வது கேரள ஆளுநர்
பதவியில்
23 மார்ச் 2013 – 5 மார்ச் 2014
முன்னையவர்எச். ஆர். பரத்வாஜ்
பின்னவர்சீலா தீக்‌சித்
15வது நாகாலாந்தின் ஆளுநர்
பதவியில்
15 அக்டோபர் 2009 – 21 மார்ச் 2013
முன்னையவர்குர்பச்சன் ஜகத்
பின்னவர்அஸ்வனி குமார்
அவுரங்காபாத்
தொகுதியின் இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னையவர்சியாமா சிங்
பின்னவர்சுசில் குமார் சிங்
தொகுதிஅவுரங்காபாத்
தேசியப்பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் [1]
பதவியில்
30 ஜூன் 1999 – 31 ஜூலை 2001
முன்னையவர்டி. ஆர். காக்கர்
பின்னவர்குருபச்சன் ஜகத்
இந்திய - திபெத் எல்லைக் காவல்படையின் தலைமை இயக்குநர் [2]
பதவியில்
3 ஏப்ரல் 1997 – 3 திசம்பர் 1997
முன்னையவர்பி. பி. நந்தி
பின்னவர்பண்டிட் கௌதம் கௌல்
புது தில்லி காவல் ஆணையர்
பதவியில்
ஜனவரி 1995 – ஏப்ரல் 1997
முன்னையவர்எம். பி. கௌசால்
பின்னவர்டி. ஆர். காக்கர்
எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர்[3]
பதவியில்
ஜூலை 1990 – திசம்பர் 1990
முன்னையவர்டி. கே. ஆர்யா
பின்னவர்பி. பிள்ளை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூலை 1941 (1941-07-15) (அகவை 83)
வைசாலி, பீகார், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சியாமா சிங்
வாழிடம்பட்னா
முன்னாள் மாணவர்அலகாபாத் பல்கலைக்கழகம்
பணிஇந்தியக் காவல் பணி
நிர்வாகி
அரசியல்வாதி
நாடாளுமன்ற உறுப்பினர்
ஆளுநர்
As of 26 செப்டம்பர், 2006
மூலம்: [1]

குடும்ப பின்னணி

தொகு
படிமம்:Bihar Governor CM Fmr Governor Kerala during public function.jpg
எஸ். என். சின்ஹா சிலை திறப்பு விழாவில் மீரா குமார், பீகார் கவர்னர் ராம் நாத் கோவிந்த், நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் , விஜய் குமார் சௌத்ரி ஆகியோருடன் குமார்

இவர், பீகாரின் முதல்வராக இருந்த மூத்த இந்திய தேசிய காங்கிரசு தலைவரும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினருமான சத்யேந்திர நாராயண் சின்காவின்[7] [8] மகனாவார்.[9] இவரது தாயார் கிஷோரி சின்ஹா வைசாலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி சியாமா சிங்கும் அவுரங்காபாத்தை மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[10]

ஒரு சிறந்த காந்தியவாதியும் "பீகார் விபூதி" என்று அழைக்கப்படும் இவரது தாத்தா டாக்டர் அனுக்ரா நாராயண் சின்கா[11] பீகாரின் முதல் துணை முதலமைச்சராகவும், முதல் நிதியமைச்சராகவும் இருந்தார். இவரது தந்தை "சோட் சாஹேப்" ஜெயபிரகாஷ் நாராயணுடன் பிற்காலத்தில் நெருக்கமாக இருந்தார். மேலும்,பீகாரில் நெருக்கடி நிலை எதிர்ப்பு இயக்கத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும், 1977 இல் ஜனதா கட்சியின் பீகார் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.

நாட்டின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவரான இவரது மைத்துனர் என். கே. சிங் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும், பதினைந்தாவது இந்திய நிதி ஆணையத்தின் தலைவராகவும்[12] இந்தியாவின் வருவாய் செயலாளராகவும், பிரதமரின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்தியக் குடியியல் பணிகள்

தொகு

நிகில் குமார், பட்னாவின் புனித சேவியர் மேல்நிலைப் பள்ளியிலும், பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார், அங்கு அவர் நவீன வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், இவர் 1963இல் இந்தியக் குடியியல் பணியில் நுழைந்து, ஒன்றியப் பிரதேசமான தில்லியில் நியமிக்கப்பட்ட ஒரு இந்தியக் காவல் பணி முன்னாள் அதிகாரியானார்.[13]

 
கடற்படைத் தலைவர் சதீஷ் சோனி மாநில கவர்னர் நிகில் குமாருக்கு நினைவு பரிசு வழங்கினார்

இவர் பல முக்கியப் பணிகளையும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளையும் வகித்துள்ளார். குறிப்பாக எல்லைப் பாதுகாப்புப் படையின் கூடுதல் தலைமை இயக்குநராகவும் (1989-91; 1992-94), 1995-97இல் புதுடெல்லியின் காவல் ஆணையராகவும் இருந்தார். 1997-99இல் இவர் உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பில் சிறப்புச் செயலாளரானார். இவர் இந்திய-திபெத் எல்லைப் படையிலும், தேசிய பாதுகாப்புப் படையிலும் தலைமை இயக்குனராகவும் [14] தான் ஜூலை 2001 இல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். பின்னர் இவர் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் (2001-03). 1977இல் புகழ்பெற்ற சேவைக்காக இவருக்கு காவலர் பதக்கமும், 1985இல் புகழ்பெற்ற சேவைக்காக குடியரசுத் தலைவர் காவலர் பதக்கமும் வழங்கப்பட்டது.[15]

நாகாலாந்து ஆளுநர்

தொகு

இவர், 15 அக்டோபர் 2009 அன்று நாகாலாந்தின் ஆளுநராக[16] [17] பதவியேற்றார். இந்தியாவில் மானாவாரி பகுதி விவசாயத்தின் சிறப்பு குறிப்புடன் விவசாயத் துறையின் உற்பத்தித்திறன், இலாபத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக இந்தியக் குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட்ட ஆளுநர்கள் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[18] [19] [20] புவனேசுவரத்திலுள்ள ஜெயதேவ் பவனில் நடந்த தேசிய கலாச்சார விழாவான வைசாக்கி உற்சவத்தின் போது இவருக்கு புகழ்பெற்ற நீலசக்ர விருது வழங்கப்பட்டது.

கேரள ஆளுநர்

தொகு
 
துணைக் குடியரசுத் தலைவர், முகம்மது அமீத் அன்சாரி திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்தபோது, கேரள ஆளுநர் நிகில் குமார் வரவேற்கிறார். மாநில முதல்வர் உம்மன் சாண்டியும் உடன் இருக்கிறார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இவரை கேரளாவின் ஆளுநராக[21] 9 மார்ச் 2013 அன்று நியமித்தார். இவர் குறுகிய காலத்திலேயே[22] மக்களின் தொடர்பு திறன் கேரளா மாநிலத்தில் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இவரது ஆழமான மற்றும் அனுதாபம் ஈடுபாடு காரணமாக கேரள மக்களின் மனதில் இடம்பெற்று "மக்களின் ஆளுநர்" என்று போற்றப்பட்டார். இவர் பீகாரிலுள்ள அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்தலில் போட்டியிட வேண்டி[23] 4 மார்ச் 2014 அன்று ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. https://web.archive.org/web/20080420072626/http://nsg.gov.in/FormerDGs.htm Director General NSG
  2. https://web.archive.org/web/20101124013740/http://itbpolice.nic.in/DGphotos.htm Director General ITBP
  3. http://www.acy.bsf.gov.in/ig.html பரணிடப்பட்டது 2019-12-31 at the வந்தவழி இயந்திரம் Director BSF Academy
  4. HT. "ex Delhi Police Chief Nikhil Kumar appointed Governor". Hindustan Times. Archived from the original on 24 October 2009. Retrieved 2009-10-04.
  5. Official Website The Hindu. "Former Nagaland Governor Nikhil Kumar sworn in as Governor of Kerala". Official News. Retrieved 2013-03-23.
  6. "Nikhil Kumar, former NSG chief". Rediff. Archived from the original on 21 August 2007. Retrieved 2007-09-04.
  7. Official website. "PM condoles passing away of Satyendra Narayan Singh". PM's Messages. Archived from the original on 13 June 2011. Retrieved 2006-09-05.
  8. Magnificent Bihar. "Nikhil Kumar on Bihar". Archived from the original on 8 December 2007. Retrieved 2007-09-20.
  9. Home Page on the Parliament of India's Website]. "Member Bio Data". Loksabha. Archived from the original on 19 November 2007. Retrieved 2006-09-25. {{cite web}}: |last= has generic name (help)
  10. A.J. Philip. "A gentleman among politicians". The Tribune. Retrieved 2006-09-05.
  11. "First Bihar Deputy CM cum Finance Minister;Dr. A N Sinha". Indian Post. official Website. Retrieved 2008-05-20.
  12. Prabhu Chawla. "N K Singh:India's supercrat". India Today. Archived from the original on 3 January 2013. Retrieved 2004-11-04.
  13. Home Page on the Parliament of India's Website. "Member Bio data". loksabha. Archived from the original on 29 May 2006. Retrieved 2006-09-05. {{cite web}}: |last= has generic name (help)
  14. NSG website. "Nikhil Kumar DG NSG". official website. Archived from the original on 6 December 2008. Retrieved 2007-07-04.
  15. P Vohra. "Governor Nikhil Kumar". Hindustan Times. Archived from the original on 12 July 2011. Retrieved 2009-10-15.
  16. "ex Delhi Police Chief Nikhil Kumar sworn in as Nagaland Governor". Retrieved 2009-10-15.[தொடர்பிழந்த இணைப்பு]
  17. Official Website President of India. "PRESIDENT APPOINTS A COMMITTEE OF GOVERNORS TO STUDY AND RECOMMEND STEPS FOR INCREASING AGRICULTURAL PRODUCTIVITY". President's Website Press Release. Retrieved 2011-12-01.
  18. "PRESIDENT APPOINTS A COMMITTEE OF GOVERNORS". PTI OFFICIAL WEBSITE. Retrieved 2011-12-01.
  19. News Website. "Neelachakra Samman Conferred on Nagaland Governor Shri Nikhil Kumar". Odisha360. Archived from the original on 2013-01-30. Retrieved 2012-04-17.
  20. IBN Internet News Website. "Nagaland Governor Shri Nikhil Kumar to be conferred with Neelachakra Samman during national cultural festival". IBN. Archived from the original on 2013-01-26. Retrieved 2012-04-04.
  21. Official News Website. "Nagaland Governor Shri Nikhil Kumar appointed new Kerala Governor". Official News article. Retrieved 2013-03-10.
  22. TP Sreenivasan. "Nikhil Kumar:People's Governor". TP Sreenivasan. Retrieved 2014-04-04.
  23. "Former Kerala Governor to contest Lok Sabha Elections from Bihar". news.biharprabha.com. Retrieved 6 March 2014.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nikhil Kumar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகில்_குமார்&oldid=3588732" இலிருந்து மீள்விக்கப்பட்டது