சியாமா சிங்

இந்திய அரசியல்வாதி

சியாமா சிங் (Shyama Singh) (பிறப்பு 26 நவம்பர் 1942 - 11 செப்டம்பர் 2017) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் [1] நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.[2] அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டர். இவர்,[3] நாகாலாந்து, கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக இருந்த நிகில் குமாரை திருமணம் செய்து கொண்டார். தில்லியில் நடந்த ஒரு சமூக நிகழ்வில் சந்தித்த இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின்[4] முயற்சியால் இவர் காங்கிரசில் சேர்ந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, தனது மாமனாரும் பீகார் முதல்வருமான சத்யேந்திர நாராயண் சின்கா மூலம் நபிநகர் சூப்பர் அனல் மின் திட்டத்தை புத்துயிர் பெற வைத்தார்.[4] சியாமா சிங் பீகாரின் பிரதேச காங்கிரசு குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[5]

சியாமா சிங்
இந்திய மக்களவை உறுப்பினர்
for அவுரங்காபாத்
பதவியில்
1999–2004
முன்னையவர்சுசில் குமார்
பின்னவர்நிகில் குமார்
தொகுதிஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி
பீகார் பிரதேச காங்கிரசு குழுவின்
துணைத் தலைவர்
பதவியில்
2004–2017
தொகுதிஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-11-26)26 நவம்பர் 1942
பட்னா, பீகார்
இறப்பு11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 74)
தில்லி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நிகில் குமார்
வாழிடம்(s)தில்லி, பட்னா
As of 7 செப்டம்பர், 2009
மூலம்: [1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சுதந்திர இந்தியாவின் முதல் நிதிச் செயலாளராக பணியாற்றிய[6] இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான சர் டி. பி. சிங்கிற்கும்,[7] பூர்ணியா மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாதுரி சிங்கிற்கும் மகளாகப் பிறந்தார். தனது பள்ளிக்கல்வியை பாட்னாவில் முடித்த இவர் பிறகு, இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். இவரது மூத்த சகோதரர் என்.கே.சிங் (பீகாரின் 1964 தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி)[8] இந்தியாவின் வருவாய் செயலாளராகவும் பிரதமரின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய இளைய சகோதரர் உதய் சிங் பீகாரின் பூர்ணியா மக்களவைத் தொகுதியை இரண்டு முறை மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவரது மாமனாரும், மறைந்த முன்னாள் பீகார் முதல்வர் சத்யேந்திர நாராயண சின்காவும், அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து [9] ஏழு முறை தொடர்ந்து மக்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்டர்.

குடும்பம்

தொகு

இவரது கணவர் நிகில் குமார் நாகாலாந்தின் ஆளுநராகவும்,[10][11] கேரள ஆளுநராகவும் பணி புரிந்தார்.[12]

சியாமா சிங் தோட்ட ஆர்வலராவார்.[13][14] பிரம்மாண்டமான தோட்டத்தை சுமார் 30 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் கொண்டிருந்தனர்.[15] தில்லியில் நடைபெறும் அனைத்து மலர் கண்காட்சியிலும் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்

தொகு

சியாமா, ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவர்,[4] தனது நாடாளுமன்ற தொகுதியில் இவர் பள்ளிகள், மகளிர் கல்லூரி போன்ற பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கினா. மேலும், மாவட்டத்தில் ஒரு புதிய கணினி மையம் அமைக்கப்பட்டது.

மறைவு

தொகு

2017 செப்டம்பர் 17 அன்று உடல்நலக் குறைவு காரணமாக இவர் காலமானார்.[5][7][16][17]

மேற்கோள்கள்

தொகு
  1. Lok Sabha Website. "Shyama Singh MP(13th Lok Sabha)". Official Website. பார்க்கப்பட்ட நாள் 2009-02-04.
  2. "MP-Shyama Singh". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 2009-07-06.
  3. "Profyl of nagaland Governor Nikhil Kumar". Nagaland Government. பார்க்கப்பட்ட நாள் 2009-07-06.
  4. 4.0 4.1 4.2 "Sisters Under The Skin". www.telegraphindia.com.
  5. 5.0 5.1 "Former MP Shyama Sinha passes away at 74 in Delhi, to be cremated on Sept 13; Bihar CM mourns death". Hindustan Times. 11 September 2017.
  6. "Home". The Tribhuvan School. 2017-12-05. பார்க்கப்பட்ட நாள் 2019-09-12.
  7. 7.0 7.1 "Former Cong MP Shyama Singh passes away".
  8. Prabhu Chawla. "N K Singh:India's supercrat". India Today. Archived from the original on 3 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2004.
  9. "Goodbye to good life for heirloom". www.telegraphindia.com.
  10. PTI. "ex Delhi Police Chief Nikhil Kumar sworn in as Nagaland Governor". Press Trust of India. பார்க்கப்பட்ட நாள் 2009-10-15.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. The Indian Express. "Constant gardener has left". Official Site. பார்க்கப்பட்ட நாள் 2006-03-12.
  12. "Nikhil Kumar sworn in as Governor of Kerala". 23 March 2013 – via www.thehindu.com.
  13. "Jaya: the sole exception - Indian Express". archive.indianexpress.com.
  14. The Relegraph. "Shyama Sinha's house-Delhi's best kept garden". Official Site. பார்க்கப்பட்ட நாள் 2006-03-12.
  15. The Relegraph. "Shyama Sinha's house-Delhi's best kept garden". Official Site. பார்க்கப்பட்ட நாள் 2006-03-12.
  16. "Former Congress MP Shyama Singh passes away". The New Indian Express.
  17. "Nitish condoles death of former MP Shyama Singh".

ஆதாரங்கள்

தொகு
  • Mere Sansmaran, an autobiography by Dr. Anugrah Narayan Sinha
  • Anugrah Abhinandan Granth samiti. 1947 Anugrah Abhinandan Granth. Bihar.
  • Anugrah Narayan centenary year celebration Committee. 1987. Bihar Bibhuti : Vayakti Aur Kriti , Bihar.
  • Bimal Prasad (editor). 1980. A Revolutionary's Quest: Selected Writings of Jayaprakash Narayan. Oxford University Press, தில்லி.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாமா_சிங்&oldid=3760397" இலிருந்து மீள்விக்கப்பட்டது