சத்யேந்திர நாராயண் சின்கா

இந்திய அரசியல்வாதி

சத்யேந்திர நாராயண் சின்கா (Satyendra Narayan Sinha) (12 ஜூலை 1917 - 4 செப்டம்பர் 2006) ஓர் இந்திய அரசியல்வாதியும், விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவருமாவார். நெருக்கடி நிலை காலத்தில் ஜெயபிரகாஷ் நாராயணின் 'முழுமையான புரட்சி இயக்கத்தின்' முன்னணி நபராகவும்,[5] பீகாரின் முதல்வராகவும் மூத்த இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவரும், ஏழு முறை வென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாவார்]].[6][7][8]

சத்யேந்திர நாராயண் சின்கா
பீகாரின் 19வது முதலமைச்சர்
பதவியில்
11 மார்ச் 1989 - 6 திசம்பர் 1989
முன்னையவர்பகவத் ஜா ஆசாத்
பின்னவர்முனைவர் ஜெகந்நாத் மிசுரா
தொகுதிஅவுரங்காபாத்
பீகாரின் கல்வியமைச்சர்.[1]
பதவியில்
18 பிப்ரவரி 1961 – 1 அக்டோபர் 1963
பதவியில்
1 அக்டோபர் 1963 – 5 மார்ச் 1967
முதலமைச்சர்பினோதனந்த் ஜா,
கே. பி. சஹாய்
முன்னையவர்ஆச்சார்ய பத்ரிநாத் வர்மா
பின்னவர்கர்ப்பூரி தாக்கூர்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான சர்வதேச குழுவின் முன்னாள் தலைவர்.[2]
பதவியில்
1977–1987
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்.[3]
பதவியில்
26 ஜனவரி 1950 – 17 ஏப்ரல் 1952
பிரதம அமைச்சர்ஜவகர்லால் நேரு
மாநிலம்பீகார்
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்முதலாவது மக்களவை
அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1952–1961
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்இரமேஷ் ப்ரிஅசாத் சிங்
பதவியில்
1971–1989
முன்னையவர்முத்ரிகா சிங்
பின்னவர்இராம் நரேஷ் சிங்
பீகாரின் வேளாண்மைத் துறை அமைச்சர்.[4]
பதவியில்
18 பிப்ரவரி 1961 – 1 அக்டோபர் 1963
பதவியில்
1 அக்டோபர் 1963 – 5 மார்ச் 1967
முதலமைச்சர்பினோதனந்த் ஜா,
கே. பி. சஹாய்
ஜனதா கட்சியின் தலைவர், பீகார்
பதவியில்
1973–1984
தேசியத் தலைவர்சந்திரசேகர்
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்இல்லை
பீகாரின் நபிநகர் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1962–1967
பதவியில்
1967–1969
முன்னையவர்முனைவர் அனுக்கிரகா நாராயண் சிங்
பின்னவர்மகாவீர் பண்டிட் அகேலா
பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1961–1962
முன்னையவர்கமலா ராய். சின்கா இடைத் தேர்தலில் வெற்றிப் பெற்றார்.
பின்னவர்அப்துல் கப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-07-12)12 சூலை 1917
பொய்வான், பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போதைய பீகார், இந்தியா)
இறப்பு4 செப்டம்பர் 2006(2006-09-04) (அகவை 89)
பட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1940–1969,1984–2006)
நிறுவன காங்கிரசு (1969–1977)
ஜனதா கட்சி (1977–1984)
துணைவர்கிஷோரி சின்ஹா
பிள்ளைகள்நிகில் குமார்
வாழிடம்(s)சோபன், பட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்
புனைப்பெயர்(s)சோட்டா சாஹேப், சத்யேந்திர பாபு, எஸ்என் சின்கா

பின்னணி தொகு

சத்யேந்திர நாராயண் சின்கா பீகாரின், அவுரங்காபாத் மாவட்டம், பொய்வானில் ஒரு பிரபுத்துவ அரசியல் குடும்பத்தில் பிறந்தார். இவர் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர். இவர், இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முதல் துணை முதல்வராகவும் நிதியமைச்சருமாவார். [9]

அலகாபாத்தில் தனது மாணவப் பருவத்தை[10] லால் பகதூர் சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ் கழித்தார். அரசியல் சூழலில் வளர்ந்த சின்கா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து இலக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றார். பின்னர் , பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார், ஆனால் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர தனது வேலையை விட்டுவிட்டு 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் அரசியல் கைதிகளுக்கு சட்ட உதவி திட்டங்களை ஏற்பாடு செய்தார்.

அரசியல் வாழ்க்கை தொகு

சுதந்திரத்திற்குப் பிறகு இவர் 1950இல் பீகாரிலிருந்து தற்காலிக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் காலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இளம் துருக்கியப் பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார்.[11]

 
பாட்னாவின் சத்யேந்திர நாராயண் சின்கா பூங்காவில் உள்ள சத்யேந்திர நாராயண் சின்காவின் சிலையை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்

சொந்த வாழ்க்கை தொகு

நாட்டின் முதல் சத்தியாகிரக இயக்கமான சம்பரண் சத்தியாகிரக இயக்கத்தில் இராசேந்திர பிரசாத்துடன் சேர்ந்து[12] மகாத்மா காந்திக்கு நெருக்கமாக உதவி செய்த அனுக்ரா நாராயண் சின்கா இவரது தந்தையாவார்.[13][14][15] இவரது மனைவி கிஷோரி சின்கா வைசாலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவருடைய மருமகள் சியாமா சிங் அவுரங்காபாத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.[16] முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவரது மகன் நிகில் குமார்[17][18] இந்திய மாநிலமான நாகாலாந்தின் ஆளுநராகவும், கேரள ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.[19]

மேற்கோள்கள் தொகு

  1. "Ministers of Education". Central Advisory Board of Education. Archived from the original on 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 10 July 2007.
  2. "Lok Sabha Debates". பார்க்கப்பட்ட நாள் 10 July 2007.
  3. "Some Facts of Constituent Assembly". Parliamentofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 22 December 2013.
  4. [1]
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. Official website. "PM condoles passing away of Satyendra Narayan Singh". PM's Messages. Archived from the original on 13 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2006-09-05.
  8. Magnificent Bihar. "Nikhil Kumar on Bihar". Archived from the original on 8 December 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-09-20.
  9. Kamat. "Biography: Anugrah Narayan Sinha". Kamat's archive. பார்க்கப்பட்ட நாள் 25 June 2006.
  10. "SN Sinha -spent his student years under Lal Bahadur Shastri's (future PM) tutelage". PATNA DAILY OFFICIAL WEBSITE. Archived from the original on 15 July 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.
  11. "SN Sinha -spent his student years under Lal Bahadur Shastri's (future PM) tutelage". PATNA DAILY OFFICIAL WEBSITE. Archived from the original on 15 July 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011."SN Sinha -spent his student years under Lal Bahadur Shastri's (future PM) tutelage".
  12. "Remembering the first Satyagraha: 100 years of Champaran". Hindustan Times. 14 April 2017.
  13. "First Bihar Deputy CM cum Finance Minister;Dr. A N Sinha". Indian Post. official Website. பார்க்கப்பட்ட நாள் 2008-05-20.
  14. [2]
  15. "First Bihar Deputy CM cum Finance Minister;Dr. A N Sinha". Indian Post. official Website. பார்க்கப்பட்ட நாள் 20 May 2008.
  16. A.J. Philip. "A gentleman among politicians". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2006-09-05.
  17. Home Page on the Parliament of India's Website]. "Member Bio Data". Loksabha. Archived from the original on 19 November 2007. பார்க்கப்பட்ட நாள் 2006-09-25. {{cite web}}: |last= has generic name (help)
  18. Official Website. "Nagaland Governor". Raj Bhavan. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
  19. "Nikhil Kumar sworn in as Governor of Kerala". The Hindu. 23 March 2013.

ஆதாரங்கள் தொகு

  • Mere Sansmaran, an autobiography by Dr. Anugrah Narayan Sinha
  • Anugrah Abhinandan Granth samiti. 1947 Anugrah Abhinandan Granth. பீகார்.
  • Anugrah Narayan centenary year celebration Committee. 1987. Bihar Bibhuti : Vayakti Aur Kriti , பீகார்.
  • Bimal Prasad (editor). 1980. A Revolutionary's Quest: Selected Writings of Jayaprakash Narayan. Oxford University Press, தில்லி.