அலகாபாத் பல்கலைக்கழகம்

அலகாபாத் பல்கலைக்கழகம் (The University of Allahabad, அல்லது வழமையாக Allahabad University (இந்தி: इलाहाबाद विश्वविद्यालय) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலகாபாத் நகரில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை நடுவண் பல்கலைக்கழகம் ஆகும். செப்டம்பர் 23, 1887இல் நிறுவப்பட்ட ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக கொண்ட இது பழமைவாய்ந்த இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மாகாணத்தின் ஆளுநர்களில் ஒருவரான சேர் வில்லியம் மூயரின் நினைவாகத் தோற்றுவிக்கப்பட்ட மூயர் நடுவண் கல்லூரியே வளர்ச்சியடைந்து அலகாபாத் பல்கலைக்கழகமாக உருப்பெற்றது.[1][2] ஒரு சமயத்தில் இது "கிழக்கின் ஆக்சுபோர்டு " என அறியப்பட்டது.[3] நூற்றாண்டுவிழாவின் போது வைக்கப்பட்ட கோரிக்கைகளின்படி சூன் 24, 2005இல் இதற்கு நடுவண் அரசுப் பல்கலைக்கழகமாக தகுதி வழங்கப்பட்டது.[4]

அலகாபாத் பல்கலைக்கழகம்
इलाहाबाद विश्वविद्यालय
அலகாபாத் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறையின் அங்கமாக விளங்கும் மூயர் நடுவண் கல்லூரி
குறிக்கோளுரைQuot Rami Tot Arbores
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Every branch yields a tree
ஒவ்வொரு கிளையும் மரமாகிறது
வகைபொது
உருவாக்கம்1887
வேந்தர்பேரா. கோவர்தன் மேத்தா
துணை வேந்தர்பேரா. அனில் கே. சிங்
அமைவிடம்
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புயுஜிசி, என்ஏஏசி, இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்
இணையதளம்www.allduniv.ac.in

சான்றுகோள்கள்

தொகு
  1.    "Muir, Sir William". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.  "In 1885 he was elected principal of எடின்பரோ பல்கலைக்கழகம்"
  2. History Allahabad University website.
  3. Allahabad Varsity to become a central university தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, May 11, 2005.
  4. Central University status restored for Allahabad University மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), Press Information Bureau, இந்திய அரசு. June 24, 2005.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகாபாத்_பல்கலைக்கழகம்&oldid=1783649" இலிருந்து மீள்விக்கப்பட்டது