இந்திய ஆட்சிப் பணி

இந்திய ஆட்சிப் பணி (அ) இ.ஆ.ப, (ஐ.ஏ.எஸ்) (இந்தி: भारतीय प्रशासनिक सेवा, பாரதீய பிரஷாசனிக் சேவா) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய வனப் பணி (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு மூலம் இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது.

வரலாறுதொகு

இந்திய ஆட்சிப் பணியின் முன்னோடியாக இந்தியாவில் இருந்த அமைப்பு இந்தியக் குடியுரிமைப் பணி (கலெக்டர்-ஆட்சியர்) என்ற அமைப்பாக இந்தியா பிரித்தானியரின் காலனி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இருந்தது. இந்தியா விடுதலையடைந்த பின் இவ்வமைப்பு இந்திய ஆட்சிப் பணி என்று பெயர் மாற்றம் கண்டது.

தேர்வு மற்றும் பயிற்சிகள்தொகு

ஒருவர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்தியக் காவல் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி நடுவண் அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக நடுவண் அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன).

தேர்வு நிலைகள்தொகு

  • இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
    • முதனிலை தேர்வு (Preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
    • முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் (Main) தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    • இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் (Interview) தேர்வுக்கு புது தில்லிக்கு அழைக்கப்படுகின்றனர்.
  • முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவர் கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவற்றைத் தவிர வேறு ஒரு விருப்பப் பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு நடைமுறைதொகு

இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளின் மதிப்பீடு
தேர்வுகள் பாடம் கேட்கப்படும் கேள்விகள் ஒரு கேள்விக்கான மதிப்பெண் மொத்த மதிப்பெண்
முதனிலைத் தேர்வு பொதுப் பாடம் (தாள்-I) 100 2 200
குடிமை பணி உளச்சார்பு தேர்வு (தாள்-II) 80 2.5 200
முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண் 400
முக்கியத் தேர்வு
(9 தாள்கள் கொண்டது)
கட்டுரை """" 250 250 ஆங்கிலம் தாள் (தகுதி வாய்ந்தனவாக)
கட்டாய மொழி தாள் (தகுதி வாய்ந்தனவாக)
பொதுப் பாடம் 4 தாள்கள் (தாள்கள் I,II,III மற்றும் IV) ஒவ்வொரு தாளுக்கும் 250 ம.பெ 1000
விருப்ப பாடம் 2 தாள்கள் (தாள்கள் I மற்றும் II) ஒவ்வொரு தாளுக்கும் 250 ம.பெ 500
மேற்கண்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர்
நேர்காணல் 275

விருப்பப் பாடங்கள்தொகு

வேளாண்மை (Agriculture)

கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல்(Animal Husbandry and Veterinary Science)

மானுடவியல்(Anthropology)

தாவரவியல் (Botany)

வேதியியல் (Chemistry)

Civil Engineering

வர்த்தகம் மற்றும் கணக்கியல்(Commerce and Accountancy)

பொருளியல் (Economics)

Eletrical Engineering

நிலவியல் (Geography)

புவியியல்(Geology)

வரலாறு (History)

சட்டம் (Law)

மேலாண்மை (Management)

கணிதம் (Mathematics)

Mechanical Engineering

மருத்துவ அறிவியல் (Medical Science)

தத்துவம்(Philosophy)

இயற்பியல் (Physics)

அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள்(Political Science and International Relations)

உளவியல்(Psychology)

பொது நிர்வாகம்(Public Administration)

சமூகவியல்(Sociology)

புள்ளியியல் விவரங்கள் (Statistics)

விலங்கியல்(Zoology)

அசாமி(Assamese)

பெங்காலி(Bengali)

போடோ(Bodo)

டோக்ரி (Dogri)

குஜராத்தி (Gujarati)

இந்தி(Hindi)

கன்னடம் (Kannada)

காஷ்மிரி (Kashmiri)

கொங்கனி (Konkani

மைதலி (Maithali)

மலையாளம் (Malayalam)

மணிப்புரி(Manipuri)

மராத்தி(Marathi)

நேபாளி(Nepali)

ஒடியா(Odia)

பஞ்சாபி (Punjabi)

சமற்கிருதம் (Sanskrit)

சந்தலி (Santhali)

சிந்தி(Sindhi)

தமிழ் (Tamil)

தெலுங்கு (Telugu)

உருது(Urdu)

ஆங்கிலம்(English)

தமிழ் பாடத்திட்டம்தொகு

விருப்பப் பாடத்தாள்-1

பகுதி-அ

பிரிவு 1

தமிழ் மொழியின் வரலாறு:

1.முக்கிய இந்திய மொழிக் குடும்பங்கள்

2.பொதுவாக இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் இடம் மற்றும் குறிப்பாக திராவிட மொழிகள் தமிழ் மொழியின் இடம்

3.திராவிட மொழிகளின் எண்ணிக்கை மற்றும் பங்கீடு

4.சங்க இலக்கியங்கள்

5.இடைக்கால தமிழ் இலக்கியங்கள்-பல்லவர் காலம்

6.பெயர்ச்சொல் வினைச்சொல் பெயரெச்சம் குறிச்சொற்கள் ஆகியவற்றின் வரலாற்று ஆய்வுகள்

7.காலத்தைச் சுட்டும் சொற்கள் மற்றும் வழக்குகளைச் சுட்டும் சொற்கள்


பிரிவு -2 தமிழ் மொழியின் வரலாறு

1.தொல்காப்பியம்- சங்க இலக்கியம்

2.அகப்புற பிரிவுகள்

3.சங்க இலக்கியத்தில் மதச்சார்பற்ற பண்புநலன்கள்

4.அற இலக்கியங்களின் வளர்ச்சி

5.சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைபிரிவு 3

பக்தி இலக்கியம் (ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள்)


1.ஆழ்வார் பாடல்களில் திருமண ஆன்மீக வாதம்

2.சிற்றிலக்கியங்களின் வடிவங்கள் - தூது, உலா, பரணி, குறவஞ்சி.

3. நவீன வளர்ச்சிக்கான சமூக காரணிகள்

தமிழ் இலக்கியம்:

நாவல் சிறுகதை மற்றும் புதுக்கவிதை ஆகிய தற்கால படைப்புகளில் காணப்படும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களின் தாக்கம்.பகுதி - ஆ பிரிவு 1

தற்காலத் தமிழ் கல்வியின் போக்கு

1. திறனாய்விற்கான அணுகுமுறைகள்: சமூக, உளவியல், வரலாற்று, மற்றும் தார்மீக திறனாய்வின் பயன்பாடு.

2. இலக்கியத்தில் பல்வேறு நுட்பங்கள்:

1.உள்ளுறை

2.இறைச்சி

3.தொன்மம்

4.ஒட்டுருவகம்

5.அங்கதம்

6.மெய்ப்பாடு

7.படிமம்

8.குறியீடு

9.இருண்மை

3.ஒப்பிலக்கியத்தின் கருத்துக்கள்

4.ஒப்பிலக்கியத்தின் கொள்கைகள்பிரிவு 2

தமிழ் நாட்டுப்புற இலக்கியம்

1. கதைப்பாடல்கள், பாடல்கள், பழமொழிகள் மற்றும் புதிர்கள்

2.தமிழ் நாட்டுப்புறவியல் பற்றிய சமூகவியல் ஆய்வு

3.மொழிபெயர்ப்பின் பயன்கள்

4.பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்மொழிப் படைப்புகள்

5. தமிழில் பத்திரிகைகளின் வளர்ச்சிபிரிவு 3

தமிழர்களின் கலாச்சார பாரம்பரியம்

1.காதல் மற்றும் போர் பற்றிய கருத்துக்கள்

2.அறம் சார்ந்த கருத்துக்கள்

3.பண்டைய தமிழர்கள் போரில் கடைப்பிடித்த நெறிமுறைகள்

4.ஐந்திணைகளில் காணப்படும் சடங்குகள் வழிபாட்டு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள்

5.சங்க இலக்கியங்களுக்கு பின் இலக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்ட கலாச்சாரம் மாற்றங்கள்

6.இடைக்காலத்தில் கலாச்சார இணைப்பு ( சமணம் மற்றும் பௌத்தம்)

7.பல்லவர்கள் பிற்காலச் சோழர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் மூலம் கலை மற்றும் கட்டிடக் இடையில் ஏற்பட்ட வளர்ச்சி

8.தமிழ் சமுதாயத்தில் பல்வேறு அரசியல் சமூக மத மற்றும் கலாச்சார இயக்கங்களின் தாக்கம்

9.தற்காலத்திய தமிழ் சமூகத்தின் கலாச்சார மாற்றத்தில் வெகுஜன ஊடகங்களின் பங்கு


தமிழ் விருப்பப் பாடத்தாள்-2

பாடத்திட்டம்

பிரிவு-1

செவ்வியல் இலக்கியம்

1.குறுந்தொகை - (1-25 பாடல்கள்)

2. புறநானூறு- (182-200 பாடல்கள்)

3. திருக்குறள் (பொருட்பால்)-அரசியலும் அமைச்சியலும் (இறைமாட்சி - அவையஞ்சாமை)

பிரிவு-2

காப்பிய இலக்கியம்

1.சிலப்பதிகாரம்- மதுரைக்காண்டம் மட்டும்

2.கம்பராமாயணம்- கும்பகர்ணன் வதைப்படலம்

பிரிவு-3

பக்தி இலக்கியம்

1.திருவாசகம்-நீத்தார் விண்ணப்பம்

2.திருப்பாவை- பாடல்கள் முழுவதும்

பகுதி-ஆ

பிரிவு-1

கவிதை

1. பாரதியார்- கண்ணன் பாட்டு

2. பாரதிதாசன்-குடும்ப விளக்கு

3. நா.காமராசன்- கறுப்பு மலர்கள்

உரைநடை

1. மு.வரதராசனார்- அறமும் அரசியலும்

2.சி.என.அண்ணாத்துரை- ஏ! தாழ்ந்த தமிழகமே.

பிரிவு-2

புதினம்(நாவல்), சிறுகதை மற்றும் நாடகம்

1.அகிலன்- சித்திரப்பாவை(புதினம்) 2.ஜெயகாந்தன்- குருபீடம் (சிறுகதை) 3. சோ- யாருக்கும் வெட்கமில்லை ( நாடகம்)

பிரிவு-3

நாட்டுப்புற இலக்கியம்

1. முத்துப்பட்டன் கதை- நா.வானமாமலை

2.மலையருவி- கி.வ.ஜகந்நாதன்

பதவி உயர்வு இந்திய ஆட்சிப் பணிதொகு

இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை நேரடியாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பணிகளில் சேர்வது ஒரு வகையாக இருந்தாலும், அரசுத் துறைகளில் பணியாற்றி வருபவர்கள் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக மாநில அரசுகளின் வழியாகத் தரம் உயர்த்தப்படும் முறையும் இந்தியாவில் உள்ளது.

பத்தாம் வகுப்புதொகு

இந்தப் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகத் தரம் உயர்த்தப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்புதான். 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணிக்கான நான்காம் பிரிவுத் தேர்வின் மூலம் வருவாய்த்துறையில் பள்ளிப்பட்டு வட்டத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்த இவர் படிப்படியாக துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவி உயர்வு பெற்று பல நிலைகளில் தமிழ்நாடு அரசுப் பணியில் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளிப்புற இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஆட்சிப்_பணி&oldid=3363732" இருந்து மீள்விக்கப்பட்டது