இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு
இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Civil Services Examination, CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும்.[1] இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தகுதிகள்
தொகு- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.[1]
- குறைந்தபட்ச கல்வித் தகுதி, இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
தொகுஇப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்ச வயது 21 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினர்க்கு 32 வயது, இதர பிற்படுத்த பிரிவினருக்கு 35 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு 37 வயதாகும்.[2]
எத்தனை முறை தேர்வு எழுதலாம்
தொகுஇப்போட்டித் தேர்வுகள் வகுப்பு வாரியாக குறிப்பிட்ட தடவைகள் மட்டும் எழுதலாம்.[3]
- பொதுப் பிரிவினர் மற்றும் கிரீமிலேயர் (Creamy Layer in OBC) அதிகபட்சமாக ஆறு (6) முறை எழுதலாம்.[4]
- இதர பிற்படுத்த வகுப்பினர் அதிகபட்சமாக ஏழு முறை எழுதலாம்.
- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
தேர்வில் இடஒதுக்கீடு
தொகுஇப்போட்டித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளின்படி போட்டியாளர்களைத் தெரிவு செய்வர்.
வகுப்பினர் | இட ஒதுக்கீடு |
---|---|
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் (SC) | 15.0% |
பழங்குடியின வகுப்பினர்கள் (ST) | 7.5% |
இதர பிற்படுத்த வகுப்பினர் (OBC) | 27% |
மொத்த இட ஒதுக்கீடு | 49.5% |
பொது ( SC/ST மற்றும் OBC பிரிவினர் உட்பட ) | 50.5% |
தேர்வு முறைகள்
தொகு- இத்தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
- முதனிலை தேர்வு (Preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
- முதனிலையில் தேறியவர்கள் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.
- முதன்மைத் தேர்வானது இரு கட்டங்களை உடையது. விளக்க எழுத்துத் தேர்வு (Descriptive written) & நேர்முகத் தேர்வு (Interview Test).
- முதன்மை விளக்க எழுத்துத் தேர்வில் தேர்வு பெற்றோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
- முறையே முதன்மை விளக்க எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைகளை மத்திய பணியாளர் அமைச்சகத்துக்கு அனுப்பும்.
- பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சகம் தேர்வானோருக்கான பணி ஆணைகளை வழங்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Union Public Service Commission Central Civil Services Examination, 2011 Notice" (PDF). upsc.gov.in. Archived (PDF) from the original on 9 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ http://www.civilserviceindia.com/civil-services-eligibility.html
- ↑ "FAQs". upsc.gov.in. Archived from the original on 9 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-04. பார்க்கப்பட்ட நாள் 2015-05-23.