இந்தியக் காவல் பணி
இந்தியக் காவல் பணி (Indian Police Service), பொதுவாக இந்தியக் காவல் என்று அழைக்கப்படும் (அ) இ.கா.ப அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, மக்களின் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய வனப் பணி ஆகும்.
இந்தியக் காவல் பணி | |
---|---|
சுருக்கம் | ஐபிஎஸ் |
துறையின் கண்ணோட்டம் | |
Formed | 1948 |
Preceding agency |
|
பணியாளர்கள் | 4730[1] |
அதிகார வரம்பு அமைப்பு | |
National agency (Operations jurisdiction) | IND |
செயல்பாட்டு அதிகார வரம்பு | IND |
சட்ட அதிகார வரம்பு | ![]() |
செயல்பாட்டு அமைப்பு | |
Elected officer responsible | |
Parent agency | உள்துறை அமைச்சகம் |
Website | |
http://mha1.nic.in/ips/ips_home.htm |
1947 இல் இந்தியா பிரித்தானியரிடமிருந்து விடுதலைப் பெற்ற பிறகு 1948 இல் பேரரசுக் காவல் என்றிருந்தப் பெயர் இந்தியக் காவல் பணி (இ.கா.ப) என்று பெயர் மாற்றம் கண்டது.
காவல் நிலையம்தொகு
காவல் நிலையம் குறிப்பிட்ட பகுதியின் சட்ட ஒழுங்கை பராமரிக்கவும் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் காவல் ஆய்வாளரின் தலைமையில் இயங்குகிறது. காவல் ஆய்வாளர்க்கு பணியில் உதவிட உதவி காவல் ஆய்வாளர்களும், காவலர்களும் செயல்படுகின்றனர். ஒரு காவல் நிலையத்தின் அதிகார எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் காவலர்களுக்கான துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய தோட்டாக்களை வைத்துப் பாதுகாப்பதற்கான அறையும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்திற்கு இடமானவர்களை அடைத்து விசாரணை செய்ய சிறு அறைகளும் கொண்டுள்ளது.
காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளை பதிவு செய்த பொதுமக்களுக்கு உடனுக்குடன் முதல் தகவல் அறிக்கை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடுதொகு
தமிழ்நாட்டு காவல் நிலையங்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் அறிவிப்பு பலகைகள் மற்றும் காவல் நிலையங்களின் சுற்றுச்சுவர்கள் குறிப்பிட்ட நிறங்களில் எழுதப்பட்டு, வர்ணம் பூசப்பட்டிருக்கும்.
ஒடிசாதொகு
ஒடிசாவின் துணை மாவட்ட நிர்வாக அலகாக காவல் நிலையங்கள் உள்ளது.
தேர்வு மற்றும் பயிற்சிகள்தொகு
ஒருவர் இந்திய காவல் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் குடியியல் பணி தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்திய ஆட்சிப் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி மைய அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக மைய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது).
தேர்வு நிலைகள்தொகு
- இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
- முதனிலை தேர்வு (Preliminary Examination) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
- முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.
- இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் தேர்வுக்கு (Personality Test) புது தில்லிக்கு அழைக்கப்படுகின்றனர்.
- முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவருக்கு கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவற்றைத் தவிர வேறு இரண்டு விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு நடைமுறைதொகு
தேர்வுகள் | பாடம் | கேட்கப்படும் கேள்விகள் | ஒரு கேள்விக்கான மதிப்பெண் | மொத்த மதிப்பெண் | ||||
---|---|---|---|---|---|---|---|---|
முதனிலைத் தேர்வு | பொதுப் பாடம் (தாள்-I) | 100 | 2 | 200 | ||||
குடிமை பணி உளச்சார்பு தேர்வு (தாள்-II) | 80 | 2.5 | 200 | |||||
முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண் | 400 | |||||||
முக்கியத் தேர்வு (9 தாள்கள் கொண்டது) |
கட்டுரை | """" | 250 | 250 | ஆங்கிலம் தாள் (தகுதி வாய்ந்தனவாக) | |||
கட்டாய மொழி தாள் (தகுதி வாய்ந்தனவாக) | ||||||||
பொதுப் பாடம் | 4 தாள்கள் (தாள்கள் I,II,III மற்றும் IV) | ஒவ்வொரு தாளுக்கும் 250 ம.பெ | 1000 | |||||
விருப்ப பாடம் | 2 தாள்கள் (தாள்கள் I மற்றும் II) | ஒவ்வொரு தாளுக்கும் 250 ம.பெ | 500 | |||||
மேற்கண்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர் | ||||||||
நேர்காணல் | 275 |
இவற்றையும் பார்க்கவும்தொகு
- இந்திய ஆட்சிப் பணி
- சென்னை மாநகரக் காவல்
- இந்தியக் குடியியல் பணிகள்
- இந்திய வனப் பணி
- இந்தியப் பாதுகாப்புப் படைகள்
- முதல் தகவல் அறிக்கை
- தமிழ்நாடு காவல்துறை
உசாத்துணைதொகு
- ↑ "Ministry of Home Affairs: Annual Report 2011–2012" (PDF). உள்துறை அமைச்சகம் (இந்தியா). 21 அக்டோபர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 May 2012 அன்று பார்க்கப்பட்டது.