தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது[1] பெரிய காவல்துறை ஆகும்.
தமிழ்நாடு காவல்துறை | |
Logo of the தமிழ்நாடு காவல்துறை. | |
Motto | வாய்மையே வெல்லும் |
Agency overview | |
---|---|
Legal personality | Governmental: Government agency |
அதிகார வரம்பு முறைமை | |
General nature |
|
செயல்பாட்டு முறைமை | |
வரலாறுதொகு
முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.
துறை அமைப்புதொகு
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 1,21,215 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, திருப்பூர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 38 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.
காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்தொகு
- சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
- ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
- பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
- பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
- கடலோர காவல் துறை (Coastal Security Group)
- குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
- பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
- செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
- இரயில்வே காவல்துறை (Railways)
- சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
- சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
- குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
- போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
- மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
- குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
- பயிற்சிப் பிரிவு (Training)
காவல்துறைப் பதவிகள்தொகு
தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;
பதவி | பதவிச் சின்னம் |
---|---|
காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) | அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைத் தலைவர் (IGP) | ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைத் துணைத்தலைவர் (DIG) | அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) | அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து |
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP) | அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) | அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து |
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP) | மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து |
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) | மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து |
ஆய்வாளர் (Inspector) | மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும் |
உதவி ஆய்வாளர் (Sub-Inspector) | இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும் |
தலைமைக் காவலர் (Head Constable) | சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும் |
முதல்நிலைக் காவலர் (PC-I) | சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும் |
இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) | பட்டை எதுவுமில்லை. |
தமிழகத்தில் குற்றங்கள்தொகு
தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாகக் குற்றங்கள் குறைந்து வருவதாகக் காவல்துறை தெரிவிக்கின்றது.
வ.எண் | குற்றம் | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | கொலை | 1594 | 1647 | 1487 | 1389 | 1365 | 1273 | 1521 | 1630 | 1644 |
2 | ஆதாயத்திற்காகக் கொலை | 81 | 75 | 104 | 73 | 74 | 89 | 102 | 105 | 123 |
3 | குழுக் கொள்ளை | 158 | 178 | 95 | 72 | 73 | 95 | 88 | 100 | 97 |
4 | வழிப்பறி | 669 | 650 | 514 | 464 | 437 | 450 | 495 | 662 | 1144 |
5 | வீட்டில் கொள்ளை | 5957 | 5532 | 4849 | 4147 | 3738 | 3300 | 3717 | 3849 | 4221 |
6 | திருட்டு | 16940 | 18614 | 18213 | 17530 | 15851 | 13651 | 13217 | 15019 | 15712 |
7 | மொத்தம் | 25399 | 26696 | 25262 | 23675 | 21538 | 18859 | 19140 | 21365 | 22941 |
காவல்துறையில் பெண்கள்தொகு
இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது
காவலர் பயிற்சிக் கல்லூரிதொகு
காவலர்களுக்குப் பயிற்சி அளிக்க காவலர் பயிற்சிக் கல்லூரி (Police training college) சென்னை அசோக்நகரில் அமைந்துள்ளது. இங்கு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது.
விமர்சனங்கள்தொகு
தமிழ்நாடு காவல்துறை மீது மனித உரிமை மீறல்கள், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், லஞ்ச ஊழல் பரவல், அரசியல்மயமாக்கம் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.[2][3][4] 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் காவல் நிலையங்களில் புகார் செய்யும் போது அதை பதிவு செய்யாத காவலர்கள் மீது வழக்கு பதியலாம் என்று டிஜீபிக்கு 8 கட்டளைகளை கொடுத்துள்ளது.[5]
தமிழக காவல்துறை பயன்படுத்தும் ஆயுதங்கள் சிலதொகு
ஆதாரம்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ தமிழ்நாடு காவல்துறை இணையம்-தமிழ்நாடு காவல்துறைப் பற்றி பார்த்து பரணிடப்பட்ட நாள் 05.05.2009
- ↑ Unlawful killings by the police in Tamil Nadu
- ↑ Report details police atrocities
- ↑ Rival's revenge in Tamil Nadu
- ↑ காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு