காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர்

காவல் துறை பதவி

உதவிக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ( ஏ.எஸ்.பி, assistant superintendent of police ) என்பது பிரித்தானியப் பேரரசில் காவல்துறைப் படைகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு பதவியாகும். இது பொதுநலவாய நடுகளில் உள்ள பல காவல்துறைப் படைகளில் இன்னும் பயன்படுத்தப்படுகிறது. இது அக்காலத்தில் பொதுவாக ஒரு ஐரோப்பிய அதிகாரி வகிக்கக்கூடிய மிகக் குறைந்த தரப் பதவியாகும். அவர்களில் பெரும்பாலோர் காவல்துறையில் இந்த வரிசையில் சேர்ந்தனர். 20 ஆம் நூற்றாண்டில், இது பல பிரதேசங்களில் ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்தியா தொகு

ஏஎஸ்பியின் முத்திரை, முதல் ஆண்டு சேவை
ஏஎஸ்பியின் முத்திரை, இரண்டாம் ஆண்டு சேவை
ஏஎஸ்பியின் முத்திரை, மூன்றாம் ஆண்டு சேவை
இந்தியாவில் உதவி காவல் கண்காணிப்பாளரின் முத்திரை)

உதவிக் காவல் கண்காணிப்பாளர் (ஏ.எஸ்.பி) பதவியானது இந்தியாவில் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. அங்கு இந்தப் பதவியை வகிக்கும் அதிகாரி இந்திய காவல் பணியைச் சேர்ந்தவராவார். இருப்பினும், உதவி காவல் கண்காணிப்பாளர் தகுதிகாண் பதவியின்போது (ஐபிஎஸ் அதிகாரியின் பணியின் இரண்டாம் ஆண்டு வரை) மற்றும் சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமியில்ல் பயிற்சியின் போது அதிகாரிகளால் இந்தப் பதவிக்கான பேட்ச் அணியப்படும். அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் உதவி காவல் கண்காணிப்பாளராகவே தங்கள் பணியை தொடங்குகின்றனர். மாநில பணிநிலை அதிகாரி இந்த பதவியில் இருக்க முடியாது. இந்த பதவிக்கு இணையான துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவியை அவர்கள் பெறுவர்.

குறிப்புகள் தொகு