அனைத்து மகளிர் காவல் நிலையம்

முழுவதும் பெண் காவலர்களைக் கொண்ட காவல் நிலையம்

அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பது ஒரு காவல் நிலையத்தில் அனைத்து காவலர்களும் பெண்களே பணிபுரிந்துவருவதாக அமைக்கபட்ட காவல் நிலையத்தை குறிப்பதாகும். இவ்வாறான காவல் நிலையங்கள் இந்தியாவின், தமிழ்நாடு, கேரளம் போன்றவற்றில் செயல்பட்டுவருகிறது.

வரலாறு தொகு

இந்திய துணைக்கண்டத்தில் முதன் முதலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1937 இல் பெண்கள் காவல் துறையில் சேர்க்கப்பட்டனர். அடுத்த சாதனையாக கேரளத்தின், கொல்லங்கோட்டில் முழுவதும் மகளிர் காவலர்களைக் கொண்ட காவல் நிலையம் 1973 இல் துவங்கப்பட்டது. [1]

தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணிக்கு 1973 இல் இருந்து பெண்கள் சேர்க்கப்பட்டனர்.[2] அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் நிறைய பெண்கள் காவல் பணியில் சேர்க்கப்பட்டனர். பெண்களுக்கு எதிராக குற்றங்களில் சிறப்பு கவணம் செலுத்த 1992 இல் தமிழ்நாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையம் தமிழ்நாடு அரசால் துவக்கப்பட்டது.[3] அவ்வாறு முதல் அனைத்து மகளிர் காவல் நிலையமானது சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் துவக்கப்பட்டது. அதில் ஒரு காவல் ஆய்வாளர், மூன்று உதவி ஆய்வாளர்ர்கள், ஆறு தலைமைக் காவலர்கள், 24 காவலர்கள் என அனைவரும் பெண்களாகவே நியமிக்கப்பட்டனர். இந்த மகளிர் காவல் நிலையங்கள் வரவேற்பை பெற்றன. இதனால் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்பட்டன. 2022 ஆண்டில் சென்னையில் 31 மகளிர் காவல் நிலையங்களும், சென்னை உள்ளிட்டு, தமிழ்நாடு முழுவதும் 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.[4] 2023 ஆண்டைய நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் இ.கா.ப முதல் காவலர் வரை என 23,542 பெண் காவல் துறையினர் பணியாற்றுகின்றனர்.[5]

குறிப்புகள் தொகு

  1. காவல் துறையில் பெண்கள், தினமணி, 30, மே, 2018
  2. "தமிழகத்தில் புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் =Hindu Tamil Thisai". பார்க்கப்பட்ட நாள் 2022-09-10.
  3. Staff (2003-01-28). "மகளிர் காவல் நிலையங்கள் முன்னோடிகளாக விளங்க வேண்டும்: ஜெ". பார்க்கப்பட்ட நாள் 2022-09-10.
  4. "சுதந்திரச் சுடர்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-10.
  5. "தமிழகத்தில் பொன்விழா காணும் 'பெண் போலீஸ்' - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 16-ம் தேதி விழா நடத்த திட்டம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.